இடுகைகள்

ஈழத்தமிழர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

படம்
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு - இலங்கைப் போரில் கொடுமைக்கு உள் ளாக்கப்பட்டு வரும் தமிழர் களின் பிரச்சினையில் உடனடி யாகத் தலையிட்டு , தமிழர்க ளுக்கு எதிராக நடைபெற்று வரும் போரை நிறுத்தவும் , அவர்கள் கவுரவமாக வாழ் வதை உறுதி செய்யும் வகையில் , அவர்களது துயர்களைக் களைய மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மன் மோகன்சிங்கை நேற்று சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மனு ஒன்றை அளித்து வலியுறுத்தி னார்கள் . அந்த மனுவில் கூறப்பட் டுள்ளதாவது : இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப் பட்டு வரும் கொடுமைகளுக்கு தீர் மானகரமானதும் , நிரந்தர மானதுமான அரசியல் தீர்வு காணப்படும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இந்த மனுவை பிரதமர் அவர்களிடம் சமர்ப் பிக்க தமிழ் நாட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களா கிய நாங்...

1981-இலே 97,000-த்திற்கும் மேற்பட்ட நூல்கள் எப்படி எரிக்கப்பட்டுச் சாம்பல் மேடாயின?

படம்
சென்னை பெரியார் திடலில் 08-11-2008 அன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அதில் சிங்கள இன வெறியார்களால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றிய ஆவணப்படம் திரையிடல் செய்யப்பட்டது. அதைப் பார்த்த தமிழின உணர்வாளர்களுக்கு எரிகிற தீயில் (உணர்வுகளில்) எண்ணெய் வார்த்தது போல ஆயிற்று. நிகிரியின் தயாரிப்பில் சோமீதரன் என்கிற ஈழத்தமிழர் இதை இயக்கியிருந்தார். தமிழர் தலைவர் தலைமையுறையாற்றும்போது இன்றைய இளைஞர்கள் எங்கோ திசை தடுமாறிச் சென்று கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில், இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புக்குரிய குறும்படத்தை வெளிக்கொணர்ந்த இயக்குநர் சோமீரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சோமீதரன் ஒரு மிகப் பெரிய சாதனையாளர். அவரை வரலாற்று இயக்குநர் என்றே அழைக்கலாம் என்றார். அதுமட்டுமா, சமுதாயத்திலே ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை தொடங்கப்பட்டு இயக்க வரலாற்றிலே இன்றைக்கு திராவிடர் கழகம் ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறது. இன்றைக்கு இயக்க வரலாற்றிலே ஒரு முக...

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை ;உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு!

படம்
உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலா சைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை: இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கவுரவிக்கும் புனித நாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக் கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்கள...

ஈழத் தமிழர் போராட்டம் குறித்து 'குமுதம்' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள்

ஈழத் தமிழர் போராட்டம் குறித்து 'குமுதம்' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள் 'யுத்த சரணம்' எனும் தலைப்பில் திரு பா.ராகவன் என்பவரால் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதப்பட்டு வரும் தொடர் தப்புத் தவறுமான தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டு இருக்கிறது என்று ஆலமரம் என்ற இணைய தளத்தில் வெளிவந்துள்ள இக்கட்டுரை அம்பலப் படுத்தியுள்ளது படியுங்கள். பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத தொடங்கியி ருக்கின்ற "யுத்தம் சரணம்" என்ற தொடர் பெருத்த ஏமாற்றத்தை யும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இரண்டு பாகங்களே வெளியாகி இருக்கின்றன. அந்த இரண்டு பாகங்களும் பல தகவல் பிழைகளுடன், குழப்பங்களுடன் வெளியாகி உள்ளன. இத்தனைக்கும் இது இன்னும் 1948 நிகழ்வுகளுக்கோ, 1990க்கு முன்பான சூழலுக்கோ செல்ல வில்லை. கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து தான் இந்தத் தொடர் தற்பொழுது பேசுகிறது. அதிலேயே இத்தனை பிழைகள் என்றால் இலங்கையின் குழப்பமான ஆரம்பகாலம், போராளிக் குழுக் களுக்குள் நிகழ்ந்த சண்டை, இந்தியாவின் தலை...

சண்டை நீடித்தால் என்ன நடக்கும்?கிளிநொச்சி இன்று வீழ்கிறதா, நாளை வீழ்கிறதா என்பதல்ல கேள்வி

படம்
இரண்டே கி . மீ . தூரத்தில் உள்ள கிளிநொச்சி மிகவும் கடினமான பாதை ; உலக உருண்டையின் வேறு பக்கம் வழியாகச் சுற்றி வந்தால் சுலபமாகலாம் . சிறீலங்காவின் ராணுவம் இந்த ஆண்டின் இறுதி யில் அந்நகரத்தைப் பிடித்து விட்டாலும் கூட , யுத்தம் முடிவடையாது ; பாதி யுத்தம் கூட முடிந்ததாகக் கருதப்பட முடியாது . வெற்றி எனக் கூக்குரலிடு வது முட்டாள்தனமானது ; அரசுக்கும் போர்ப்படை யினர்க்கும் இது தெரியும் ! இருந்தாலும் ஏன் செய்கிறார்கள் ? ஒருவேளை , கர்வமாக இருக்கலாம் , அல்லது திசை திருப்புவதாக இருக்கலாம் , ஆனால் இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் . ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை ! லஞ்ச லாவண்யம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ! பொருளாதாரமோ சீரழிந்த நிலையில் ! அரசியல்வாதிகளின் அதிகாரத் துஷ்பிரயோகம் அளவு கடந்து ! அகில உலகிலும் நாட்டின் பெயர் நாறிக் கொண்டுள்ள நிலை ! இந்நிலையில் அந்த அரசாங்கம் வேறென்ன செய்ய முடியும் , வெற்றி என்று கூவுவதைத் தவிர ? வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிதைந்த சடலம் ராஜபக்சேவின் காலடியில் , புலிகள் சித...

பேராசிரியர் சுப.வீ அவர்களுடன் தமிழ்வெளிக்காக நேர்காணல்

படம்
பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்கு அளித்த சிறப்பு நேர்காணல் தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார். அவரின் சிந்தனைகள். தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம். எங்கள் அமைப்புக்கு மூன்று நோக்கங்கள் இருக்கின்றன. 1. தமிழின, தமிழ் மொழி மேம்பாடு 2. பகுத்தறிவு, சமூகநீதி, பெண்விடுதலை 3. உலகத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்குக் குரல் கொடுப்பது தமிழீழம் தொடர்பான பல கேள்விகள் இன்றைய தலைமுறைக்கு இருக்கின்றன, மேலும் தமிழீழ ...

பரந்தன் நக ரத்தில் ஈழத்தமிழர் குடியிருப்புகளின்மீது குண்டு வீசித் தாக்கி வீடுகள் தகர்ப்பு

ஈழத்தமிழர் குடியிருப்புகளின்மீது குண்டு வீசித் தாக்கி வீடுகள் தகர்ப்பு ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் கிளிநொச்சி, இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள பரந்தன் நக ரத்தில் குடியிருக்கும் வீடுகளின் மீதும் சிங்களப் படையினர் தொடர்ந்து பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இளைஞர் ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் பலர் படுகாய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிங்களப் படையினரின் தாக் குதலில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 17 ஆம் தேதியன்று பரந்தன் நகரில் மக்கள் வாழும் பகுதி கள் மீது இலங்கைப்படையி னர் குண்டு வீசித் தாக்கினர். இதில் அந்தோணியார் தேவா லயத்தின் முன்பு நின்றிருந்த 24 வயது இளைஞர் ஒருவர் கொல் லப்பட்டார். 2 சகோதரர்கள் உள்பட 6 பேர் காயமடைந்து கிளிநொச்சியின் தருமபுரம் பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். பீரங்கித் தாக்குதலில் ஏரா ளமான வீடுகள் தரை மட்ட மாக்கப்பட்டன. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்...