இடுகைகள்

தமிழ்நியூஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்

படம்
மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன் என்றும், நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றும் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. அருந்ததியர்களுக்காக ஜனார்த்தனன் கமிஷன் அமைக்கப்பட்டது.  அதே போல் பிராமணர்களுக்கும் ஒரு கமிஷன் அமைத்து ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்னும் சில நாட்களில் மனு கொடுக்க உள்ளோம். பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முதல்  அமைச்சர் கருணாநிதியால் தான் முடியும்.  எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்பவரை ஆதரியுங்கள் என்று ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன்.    மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு போட்டியிட சீட் தந்தது ஜெயலலிததான். ஆனால் என்னை வெற்றி பெற செய்தது மயிலாப்பூர் தொகுதி மக்கள். தொகுதி மக்களுக்கு என்னென்ன கடமைகள...

மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய 9 மணி நேரத்துக்குப் பிறகுதான் பாதுகாப்புப் படையினர் அங்கு செல்ல முடிந்தது

படம்
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது , தேசியப் பாதுகாப்புப் படை வீரர்களை விரைவாக அங்கு அனுப்ப அப்போது விமானம் இல்லை என்ற குற்றச்சாற்று எழுந்துள்ள நிலையில் , மத்திய போர்ப்படைக்காக 2 விமானங் களை விரைவில் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது . முடிந்த அளவு விரைவில் அவை வாங்கப்பட்டு , துணைப் போர்ப் படை மற்றும் தேசிய பாதுகாப்புக் காவல்களின் பணிகளுக்குக் பயன்படுத்தப்படும் . எல்லைப் பாதுகாப்புப்படை இந்த விமானங்களைப் பேணிக் காக்கும் . இந்தப் போர்ப்படையிடம் மட்டுமே விமானப் படைப் பிரிவு உள்ளது . விமானங்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன . இந்த விமானங்கள் அனைத்தும் டில்லி அருகே நிறுத்தப்பட்டி ருக்கும் . அவசரத் தேவை ஏற்படும் போது அவை அனுப்பி வைக் கப்படும் . மேலும் டில்லியில் அதிரடிப் படையினர் அருகிலேயே இருப்பதால் விமானங்களை குறிப்பிட்ட இடத்திற்கு விரைவில் கொண்டு செல்ல இயலும் என்று கருதப்படுகிறது . மும்பையில் பயங்கர...

விக்ட் ரம் என்ற சொல்லை சரியாக உச்சரிக்கத் தெரிந்தால் போதும், இரண்டு நாள் உங்கள் படம் செய்திகளில் வருவதற்கு 100 சதம் கியாரண்டி.

படம்
தமிழில் செய்தி வழங்குவதற்கென்று நமது தொலைக்காட்சிகள் ' மைக் ' கை எடுத்துக் கொண்டு கிளம்பினாலும் கிளம்பினார்கள் ... மக்களெல்லாம் இப்போது ' மைக் ' மோகத்துக்கு அடிமையாகிவிட்டார்கள் . ஒரு பழைய கேமராவை தூக்கிக் கொண்டு சாதாரணமாக சாலையில் கிளம்பினாலும் , " எந்த டி . விக்கு சார் எடுக்குறீங்க ?" என்று கேட்கத் தயங்குவதில்லை . எந்த ஒரு பிரச்சினை என்று கையில் மைக்குடன் நின்றாலும் கூட்டம் கூடி கருத்து சொல்கிறார்கள் . பிரச்சினையைப் பற்றி நமக்குத் தெரிகிறதோ இல்லையோ , கருத்து சொல்லலாம் . தேவைப்படுமானால் , கேமராக் காரர் இந்த விசயத்தை சொல்லுங்கள் என்று எதை சொல்லச் சொல்கிறாரோ , அதை திக்கித் திக்கி ஒப்பித்தாலும் சரி , இன்று தமிழ்நாடு முழுக்க நம்மைப் பார்க்கப் போகிறார்கள் என்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரியும் . எதைப் பற்றிக் கருத்து சொல்லும் முன்பும் எச்சரிக்கையாக , " எந்த டி . வி " என்று கேட்டுக் கொள்வார்கள் . ஆளுங்கட்சி டி . வியா ? அதற் கேற்றாற்போல் கருத்து சொல்வார் . எதிர்க்கட்சி டி . ...

தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக் கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையை வெளிப் படுத்திக் கொண்டன

படம்
1993 தேர்தலில் ஜனதா தளத் தேர்தல் அறிக்கை வெளிவந்தது . தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அதில் மிக முக்கியமாகக் குறிப் பிடப்பட்டு இருந்தது . பொறுக் குமா பார்ப்பனர்களுக்கு ? தினமணி , இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக் கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையை வெளிப் படுத்திக் கொண்டன . துரதிர்ஷ்ட வசமாக ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீது கவனம் செலுத்தவில்லை . தனியார்த் துறைகளிலும் மண்டல் கமிஷனை அமல் படுத்தக் கோருவது பெரும் பான்மை மக்களை அந்நியப் படுத்தும் என்று எழுதியது தினமணி . பிற்படுத்தப்பட்ட மக்களும் , தாழ்த்தப்பட்ட மக்களும் பெரும் பாலான மக்கள்தானே . இந்த நிலையில் , தனியார்த் துறை களில் இட ஒதுக்கீடு என்பது எப்படி பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்தும் ? வி . பி . சிங் பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு , ஜனதா தளம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மறக் காமல் - கொண்ட கொள்கை யில் சிறிதும் நழுவாமல் , தனி யார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கு...

படிப்பது - பகுத்தறிவை வளர்ப்பதற்கேயன்றி, பிளவுபடுத்தும் ஜாதிச் சாக்கடையில் வீழ்வதற்கல்ல!

படம்
படிப்பது ஜாதியை வளர்ப்பதற்கல்ல ! சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஜாதி அடிப்படையில் நடந்த மோதல்கள் உள்ளபடியே வெட்கப்படத் தக்கதாகும் . எதிர்கால உலகைப் படைக்கக்கூடியவர்கள் என்று கணிக்கப்படக்கூடிய மாணவர்கள் - அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்களின்அறிவு எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது வெட்கமும் , வேதனையும் கலந்து நம்மைத் தாக்குகின்றன ; தலையைத் தொங்கப் போடவும் வைக்கிறது . தாழ்த்தப்பட்ட மாணவர்களும் , பிற்படுத்தப்பட்ட மாணவர் களும் கல்வி , வேலை வாய்ப்புகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் புலிப் பாய்ச்சலாக அமையவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார் . அவர் கண்ட இயக்கம் அன்று முதல் இந்தச் சமூக விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது . தாழ்த்தப்பட்டவர்களும் சரி , பிற்படுத்தப்பட்டவர்களும் சரி , பார்ப்பனிய வருணாசிரம அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்தாம் . கல்விப் பக்கம் அவ...

மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் கண்டிக்கத்தக்கது!

படம்
மும்பை நகரில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் மனித நேயமற்ற அசல் காட்டுமிராண்டித்தனம் ! வெறுக்கத்தகுந்தது ; வன்மையான கண்டனத்திற்குரியது . பிணைக் கைதிகளாக பலரும் பிரபல ஓட்டல்களில் ; பல முக்கிய காவல் துறையினர் , அதிகாரிகள் சாவு ! 100 பேருக்குமேல் உயிரிழப்பு ; 200 பேர் படுகாயம் ! மாநகரமே ஸ்தம்பித்துள்ள நிலையில் , ஓட்டலில் தீயணைப்பு வீரர்கள் நுழைந்து தீயை அணைத்தனர் . இராணுவம் உடனே நுழைந்து தீவிரவாதிகள்மீது தாக்குதல் ; விடிவு ஏற்படுத்த தொடர் முயற்சி என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது ! கண்டிக்கப்பட வேண்டிய செயல் ! முதலாவதாக செய்யவேண்டியது இன்று அதிகாலை 3 மணியளவில் , தொலைக்காட்சியில் கண்டு உறக்கமில்லை ; காரணம் , நாடு இப்படி செல்லுகிறதே என்ற வேதனை ! மத்திய - மாநில உளவுத் துறையினர் முன்கூட்டியே இதனை மோப்பம் பிடித்திருக்கவேண்டாமா ? உடனடியாக பிரதமர் தலையிட்டு மத்திய - மாநில காவல்துறை - குறிப்ப...

மனித மலத்தைத் தலையில் சுமப்பவர்கள் அவர்கள் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்!

படம்
பார்ப்பனர்கள் வகுத்த ஜாதி அடுக்குமுறையில் கடைகோடியில் இருப்பவர்கள் அருந்ததியர்கள் மனித மலத்தைத் தலையில் சுமப்பவர்கள் அவர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அம்மக்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும் ! அண்ணா நூற்றாண்டிலே மகத்தான சாதனை தி . மு . க . மகுடத்தில் ஜொலிக்கும் மற்றொரு வைரக்கல் ! அருந்ததியர்களுக்கு கல்வி , வேலை வாய்ப்பில் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அறிவித்த முதல்வர் கலைஞர் அவர்களின் சாதனை நம் நாட்டின் சமூகக் கொடுமைகளிலேயே மிகவும் கோரமானது , அக்கிரமமானது வர்ணாசிரம - ஜாதி அடுக்குமுறையாகும் ! பிறவி அடிப்படையில் ஜாதிகளைப் பிரித்த சூழ்ச்சியைவிட அதனை ஒன்றன்பின் ஒன்று என்று கீழான அடுக்குகளாக்கியது தான் வெறுக்கத்தகுந்த கொடுமையாகும் ! பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறை மேல்ஜாதி என்று ஆக்கிக் கொண்ட ஜாதியினரான பார்ப்பனர் அதற்கு அடுத்து ...

தாழ்த்தப்பட்டோருக்கும், கிரீமிலேயர் நீக்கம் என்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூற்று ஆபத்தான கருத்தாகும்

படம்
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு மேலும் மேலும் அழுத்தத்தைக் கொடுப்போம் ! தி . மு . க . பதவி விலகல் என்பது இந்துத்துவா சக்திகளுக்கு மகுடம் சூட்டவே வழிவகுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் , கிரீமிலேயர் நீக்கம் என்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூற்று ஆபத்தான கருத்தாகும் இந்துத்வ பயங்கரவாதத்தை அடையாளம் காண்பீர் ! மாணவர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புக்கான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெறும் கல்வியாளர்கள் , சிந்தனையாளர்கள் , எழுத்தாளர்கள் பங்கேற்கும் ஜாதி ஒழிப்பு மாநாடு டிசம்பர் 24 இல் ! திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்கள் சென்னை , நவ . 20- ஈழத் தமிழர்ப் பிரச்சினை , சமூகநீதி , ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டன . திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை - பெரியார் திடல் துரை . சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் த...