ஏகன் அட, நயன்தாராவா இது? திறந்து கிடக்கும் பின் முதுகோடு படம் நெடுகிலும் நடமாடுகிறார்.
ஏகன் போலீஸ் அதிகாரி, ஒரு அசைன்மென்ட்டுக்காக மாணவன் ஆகிற கதை. அடிக்கிற ட்யூட்டியையும், படிக்கிற ட்யூட்டியையும் ஒரே நேரத்தில் கொடுத்து, 'தல'ய்க்கு பாரம் ஏற்றியிருக்கிறார் இயக்குனர் ராஜுசுந்தரம். அதில் கொஞ்சத்தை நமது தலைக்கும் டிரான்ஸ்பர் செய்கிறது திரைக்கதை. இதுதான் கொஞ்சம் 'ஜண்டுபாம்' ரகமே தவிர, மற்ற காட்சிகள் எல்லாம் மிரட்டல் கேம்! இன்டர்நேஷனல் தாதா சுமனின் கூட்டாளி தேவன், ஒரு சந்தர்பாத்தில் சுமனுக்கு எதிராக அப்ரூவர் ஆகிவிடுகிறார். நீதிமன்றத்தில் ஒப்படைக்க போகும்போது தப்பிக்கும் அவர் மீண்டும் கிடைத்தால்தான் சுமனை உள்ளே தள்ள முடியும். தேட ஆரம்பிக்கிறது போலீஸ். தேவனின் மகள் பியா ஊட்டியில் உள்ள கல்லூரியில் படிக்கிறார். மகளை பார்க்க தேவன் அங்கு வருவார் என்பதை மோப்பம் பிடிக்கும் போலீஸ், அவரை பொறி வைத்து பிடிக்க அஜீத்தை அனுப்புகிறது. மாணவராக கல்லூரிக்குள் நுழையும் அஜீத்தின் அனுபவங்களும், அவஸ்தைகளும்தான் கதை. ...