இடுகைகள்

மாலேகான் குண்டுவெடிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாலேகான் குண்டுவெடிப்பு; சாமியார்களும், சங்கராச்சாரிகளும், இராணுவ அதிகாரிகளும் இந்தக் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டுள்ளனர்

குற்றவாளிகளுக்கு வக்காலத்தா? இந்துத்துவா பேசும் பாரதிய ஜனதா, சங் பரிவார்க் கும்பலின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. இந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை நெறிதான் என்று பதவுரை - பொழிப்புரை செய்து கொண்டவர்களின் அந்தரங்கம் வன்முறைதான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மாலேகான் குண்டுவெடிப்பு இதனை பட்டாங்கமாக அறிவித்துவிட்டது. சாமியார்களும், சங்கராச்சாரிகளும், இராணுவ அதிகாரிகளும் இந்தக் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டுள்ளனர் என்கிற ஆதாரம் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே யிருக்கிறது. இப்பொழுது இன்னொரு கூடுதல் தகவல்: காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் எஸ்.கே. சின்காவுக்கும் மிகப்பெரிய அளவில் இதில் தொடர்பு உண்டு என்று ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச் சர்கள் முப்தி முகம்மது சையத் மற்றும் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் கூறியுள்ளனர். இந்த எஸ்.கே. சின்கா யார் என்றால், இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியாவார். இராணுவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மாலேகான் குண்டுவெடிப்ப...