இடுகைகள்

ரஜினி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரஜினியின் பேச்சு; முப்படைகளை வைத்துக் கொண்டு முப்பது வருஷமா யுத்தம் செய்யுறீங்க. உங்களால் அவங்களை ஜெயிக்க முடிந்ததா?

படம்
புலிகள் பற்றிய ரஜினியின் பேச்சு பிரபாகரன் பாராட்டு கிளிநொச்சியில் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே போர் உக்கிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் திரையுலகம் சார்பில் பல்வேறு உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன. நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முப்பது வருடமாக உங்களால் புலிகளை ஒன்றும் செய்ய முடியவில்லையே? நீங்க ஆம்பிளைங்கதானா? என்றார் ஆவேசத்தோடு. ரஜினியின் இந்த பேச்சுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் வன்னி பகுதிக்கு சென்று பிரபாகரனை சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் பிரபாகரன் பேசிய விஷயங்கள் கொழும்பில் வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது- முப்படைகளை வைத்துக் கொண்டு முப்பது வருஷமா யுத்தம் செய்யுறீங்க... உங்களால் அவங்களை ஜெயிக்க முடிந்ததா? என்று திரையுலகினர் நடத்திய போராட்டத்தின் போது கூறியதன் மூலம...

ரஜினிக்காக காத்திருக்கும் பூர்வீக கிராமம்

படம்
ல காலமாகக் காத்துக் கிடந்த ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் விதத்தில் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்தது தெரிந்த கதை. கிருஷ்ணகிரியில் உள்ள தனது பூர்வீக கிராமத்தில் தம் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது அன்றைய சந்திப்பில் அவரே ஒப்புக்கொண்ட விஷயம். சூப்பர் ஸ்டாரின் பூர்வீகத்தைத் தேடிப் பயணமானோம். தமிழக சூப்பர்ஸ்டாரின் பூர்வீகம் என்ற எந்த பந்தாவும் காட்டாமல் பசுமையான பகுதிகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் ஓர் எளிய கிராமம் நாச்சிக்குப்பம். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பன பள்ளியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.தமிழ சினிமா உலகுக்கு ரஜினியை தந்து பெருமை தேடிக்கொண்ட பூமி... சுமார் 20 வீடுகளையும், இரண்டு கோயில்களையும் கொண்ட ஒரு அழகிய சிறிய கிராமம்.ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் இன்றளவும் நிறையப் பேர் அங்கு உள்ளனர் என்று கேள்விப்பட்டு அவர்களை காண அங்கு சென்றோம். நம் எதிரில் வந்த பர்வாபாய் என்ற வயதான பெண்மணியிடம் "ரஜினி வீடு எங்க இருக்கு" என்று கோட்டோம் . "யாரு ரஜினி வீடுங்களா, அதோ இடிஞ்சு போய் கிடக்கே அந்த மண...

திரைப்படம் பற்றி பேசினோம்” ரஜினி சந்திப்பு பற்றி அத்வானியே சொன்ன ஜோக்

படம்
“திரைப்படம் பற்றி பேசினோம்” ரஜினி சந்திப்பு பற்றி அத்வானி! ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று டெல்லியில் இருந்து கொண்டு குரல் கொடுக்கிறார் சத்ருஹன் சின்கா. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் ஆந்திராவிலிருந்து ஆர்வளப்படுகிறார் சிரஞ்சீவி. ஆனால், பதில் சொல்ல வேண்டிய ரஜினி, ஆகாயத்தை காட்டிக் கொண்டிருக்கிறார் நீண்டகாலமாக! அதுபோகட்டும்... நேற்றைய செய்தி சுறுசுறுப்பளித்திருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு. சென்னைக்கு வந்த அத்வானி போயஸ் தோட்டம் பக்கம் காரை திருப்ப, முன்னாள் முதல்வர் ஜெ. வீட்டிற்குதான் செல்வார் என்று நினைத்திருப்பார்கள் மக்கள். ஆனால், கார் போய் நின்ற இடம் ரஜினி குடியிருக்கும் பதினெட்டாம் நம்பர் வீடு. இருவரும் சந்தித்து இலங்கை பிரச்சனை பற்றியா பேசியிருக்கப் போகிறார்கள்? 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பில் திரைப்படங்கள் குறித்து பேசினார்களாம் இருவரும். ( இது) சந்திரமுகி, சிவாஜி படத்தின் டிவிடிகளை கொடுத்தாராம் ரஜினி. ‘கடவுள் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்’ என்று ரஜினி கூறியிருந்ததற்கு பாராட்டுகளை தெரிவித்தாராம் அத்வானி. (ம்...இதை...