செய்தி தரும் சிந்தனை பக்தி வந்தால் - புத்தி மட்டுமல்ல வேலையும் போய்விட்டது
செய்தி தரும் சிந்தனை பக்தி வந்தால் - புத்தி மட்டுமல்ல வேலையும் போய்விட்டது பொது மருத்துவமனையில் இரண்டுபேர் மருத்துவத்திற்காகச் சேர்க்கப் பட்டனர் . ஒருவர் வேலூர் கிருஷ்ணமூர்த்தி , மற்றவர் வங்காளத்தைச் சேர்ந்த தபஸ்பால் . மருத்துவம் பலனின்றி இருவரும் 23 ஆம் தேதி இறந்துவிட்டனர் . மறுநாள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வங்காளத்து தபஸ்பாலின் உறவினர் சத்யஜித்பால் உடலை வாங்க வந்தார் . பிண வறையில் அடையாளம் காட்டிவிட்டு வெளியே வந்தார் . முழுவதும் மூடப்பட்ட பிணம் ஒப் படைக்கப்பட்டது . எடுத்து சென்று எரித்து விட்டார் . இரண்டு மணிநேரம் கழித்து வேலூர் கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் வந்தனர் . அடையாளம் காட்டப் பிணவறைக்குச் சென்றனர் . பிணத்தைக் காணவில்லை . பதறிப் போன மருத்துவமனை ஊழியர்கள் ஏதோ சந்தேகத்தில் சத்யஜித் பாலிடம் விசாரித்தனர் . உடலை உடனே எரித்துவிட்டதை அவர் சொல்லிவிட்டார் . ஆக வேலூர் கிருஷ்ணமூர்த்தி வங்காள...