மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பேட்டரி கார்களில் சென்று சுற்றிப் பார்க்கும் புதிய வசதி
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பேட்டரி கார்களில் சென்று சுற்றிப் பார்க்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் உள்ள நான்கு சித்திரை வீதிகளும் போக்குவரத்து நெரிசலுடன் எப்போதும் காணப்படும்.தற்போது இந்த வீதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. மேலும், நான்கு சித்திரை வீதிகளும், அழகுற மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாகனப் போக்குவரத்து அறவே ஒழிக்கப்பட்டு விட்டது.அதற்குப் பதிலாக, பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த பேட்டரி கார்களி்ல் ஏறி நான்கு சித்திரை வீதிகள் வழியாக மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிப் பார்க்கும் வகையில், இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.இதற்காக மதுரை மாநகராட்சி நிர்வாகம் 4 பேட்டரி கார்களை ரூ. 16 லட்சம் செலவில் வாங்கியுள்ளது. கடந்த மாதம் இவை சோதனை ரீதியாக இயக்கிப் பார்க்கப்பட்டன. இதையடுத்து நேற்று முதல் இந்த பேட்டரி கார் டூர் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த பேட்டரி கார்களில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு 10 ரூபாய், சிறியவர்கள் மற்றும் முதியோருக்கு தலா 5 ரூபாய் மற்...