மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் ;பாகிஸ்தான்
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என பாகிஸ்தான் அதிகாரிகள் தன்னிடம் ஒப்புக் கொண்டதாக அங்கு உயர் மட்ட ஆலோசனைகள் நடத்திவிட்டு இந்தியா வந்த அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தளபதியான அட்மிரல் மைக்கல் முல்லன் கூறியுள்ளார் . பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம் . கே . நாராயணனிடம் முல்லன் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன . பாகிஸ்தானில் அவர் அதிபர் சர்தாரி , ராணுவத் தளபதி , ஐஎஸ்ஐ தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது . அப்போது மும்பையைத் தாக்கிய தீவிரவாதிகள் தங்கள் நாட்டினர் அல்ல என அவர் கூறினர் . ஆனால் , அவர்கள் பாகிஸ்தானியர்கள் தான் என்பதற்கான பல ஆதாரங்களை முல்லன் காட்டியதையடுத்து அவர்கள் தங்கள் நாட்டரவே என்றும் அவர்கள் அனைவரும் லஷ்கர் ஏ தொய்பாவினரே என்றும் அந் நாட்டு ராணுவ , ஐஎஸ்ஐ அதிகாரிகள் ஒப்புக் கொண்டுவிட்டனர் . இந்தத் தகவலை டெல்லி வந்த அவர் ஆண்டனி , ...