இடுகைகள்

புதிய சாதனையாக உலக பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் சாய்னா

படம்
டெல்லி : உலக பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் 10 வது இடத்திற்கு முன்னேறி இந்தியாவின் சாய்னா நேஹ்வால் புதிய சாதனை படைத்துள்ளார் . இந்த ஆண்டு சாய்னாவுக்கு வெகு சிறப்பான ஆண்டு . ஒலிம்பிக் போட்டியில் அவர் காலிறுதி வரை முன்னேறி அசத்தினார் . சைனீஸ் தைபே ஓபன் போட்டியில் அவர் வெற்றி பெற்றார் . சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டியில் அரை இறுதி வரை முன்னேறினார் . சைனா மாஸ்டர்ஸ் சூப்பர் சீரிஸ் போட்டியில் வெற்றி வாகை சூடினார் . இந்த நிலையில் புதிய சாதனையாக உலக பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் சாய்னா . இந்த சாதனையைப் படைத்த முதல் இந்திய வீராங்கனை சாய்னாதான் என்பது குறிப்பிடத்தக்கது 10

பாகிஸ்தான் அரசால் என்னை தொடக் கூட முடியாது. நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன் என்று தாவூத்

படம்
தாவூத் இப்ராகிம் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுதந்திரமாக இருக்கிறார். நெருக்கடியின்றி, பத்திரமாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அவரது உறவினர்கள் சலீம் அன்சாரி உள்ளிட்டோர் கராச்சி வந்து தாவூத்தை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அவர்களிடம், பாகிஸ்தான் அரசால் என்னை தொடக் கூட முடியாது. நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன் என்று தாவூத் கூறியுள்ளாராம். மும்பையில் உள்ள தனது உறவினர்கள், நண்பர்கள், கூட்டாளிகள் ஆகியோருடன் தொடர்ந்து தாவூத் தொலைபேசித் தொடர்பை வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட, ஹவாலா மூலம் மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு பிசினஸுக்காக ரூ 120 கோடியை அனுப்பி வைத்தாராம் தாவூத். மும்பை - கராச்சி இடையிலான ஹவாலா பிசினஸ் எப்போதும் போல பிசியாக, தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது. தாவூத்தின் நடமாட்டத்தை இந்திய உளவு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் உள்ளனர். அதேபோல அமெரிக்க உளவுத்துறையினரும் தாவூத் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதன் அடிப்படையில்தான் தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதை இந்தியா அடித்துக் கூறி வருகிறது. அதேச...

கருணாநிதி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

படம்
இந்த பிரச்சனையில் இந்தியா உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உறுதியளித்த பிரதமர் தனது தூதராக பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகவும் கூறினார் . அவர் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவார் என்றார் . வழக்கம் போல அதிமுக , மதிமுக , தேமுதிக ஆகிய கட்சிகள் இக்குழுவில் இடம் பெறவில்லை . இதையடுத்து முதல்வர் கருணாநிதி , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார் . அவரிடமும் இலங்கை போர் நிறுத்தத்தை வற்புறுத்தினார் . பின்னர் கருணாநிதியை மின்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே , புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ப . சிதம்பரம் ஆகியோரும் சந்தித்தனர் . போர் நிறுத்தமே முக்கியம்-கருணாநிதி: முன்னதாக டெல்லி வந்த கருணாநிதி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : கேள்வி : இலங்கைத் தமிழர் பிரச்சனையில் வைக்கப்படப் போகும் முக்கியமான கோரிக்கை எது ? கருணாநிதி : முக்கியமான கோரிக்கை போர் நிறுத்தம்தான் . கேள்வி : கடந்த 3 மாதமாக அந்த கோரிக்கையைத் தானே வைத்து...

நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் மகன் விஷால் (13) உடல் நலக்குறைவால் இறந்தா

படம்
Wednesday, December 3, 2008 நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் மகன் மரணம் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் மகன் விஷால் (13) உடல் நலக்குறைவால் இறந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஷால் மரணம் அடைந்தார். விஷாலின் உடல் சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு நடிகர்கள் விஜய், பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன், அருண்பாண்டியன், ஆதித்யா, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரபு தேவா-லதா தம்பதிக்கு விஷால் தவிர ரிஷி, ராகவேந்திரா, ஆதி தேவா ஆகிய மகன்கள் உள்ளனர்.

செய்தி தரும் சிந்தனை பக்தி வந்தால் - புத்தி மட்டுமல்ல வேலையும் போய்விட்டது

படம்
செய்தி தரும் சிந்தனை பக்தி வந்தால் - புத்தி மட்டுமல்ல வேலையும் போய்விட்டது பொது மருத்துவமனையில் இரண்டுபேர் மருத்துவத்திற்காகச் சேர்க்கப் பட்டனர் . ஒருவர் வேலூர் கிருஷ்ணமூர்த்தி , மற்றவர் வங்காளத்தைச் சேர்ந்த தபஸ்பால் . மருத்துவம் பலனின்றி இருவரும் 23 ஆம் தேதி இறந்துவிட்டனர் . மறுநாள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வங்காளத்து தபஸ்பாலின் உறவினர் சத்யஜித்பால் உடலை வாங்க வந்தார் . பிண வறையில் அடையாளம் காட்டிவிட்டு வெளியே வந்தார் . முழுவதும் மூடப்பட்ட பிணம் ஒப் படைக்கப்பட்டது . எடுத்து சென்று எரித்து விட்டார் . இரண்டு மணிநேரம் கழித்து வேலூர் கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் வந்தனர் . அடையாளம் காட்டப் பிணவறைக்குச் சென்றனர் . பிணத்தைக் காணவில்லை . பதறிப் போன மருத்துவமனை ஊழியர்கள் ஏதோ சந்தேகத்தில் சத்யஜித் பாலிடம் விசாரித்தனர் . உடலை உடனே எரித்துவிட்டதை அவர் சொல்லிவிட்டார் . ஆக வேலூர் கிருஷ்ணமூர்த்தி வங்காள...

மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய 9 மணி நேரத்துக்குப் பிறகுதான் பாதுகாப்புப் படையினர் அங்கு செல்ல முடிந்தது

படம்
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது , தேசியப் பாதுகாப்புப் படை வீரர்களை விரைவாக அங்கு அனுப்ப அப்போது விமானம் இல்லை என்ற குற்றச்சாற்று எழுந்துள்ள நிலையில் , மத்திய போர்ப்படைக்காக 2 விமானங் களை விரைவில் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது . முடிந்த அளவு விரைவில் அவை வாங்கப்பட்டு , துணைப் போர்ப் படை மற்றும் தேசிய பாதுகாப்புக் காவல்களின் பணிகளுக்குக் பயன்படுத்தப்படும் . எல்லைப் பாதுகாப்புப்படை இந்த விமானங்களைப் பேணிக் காக்கும் . இந்தப் போர்ப்படையிடம் மட்டுமே விமானப் படைப் பிரிவு உள்ளது . விமானங்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன . இந்த விமானங்கள் அனைத்தும் டில்லி அருகே நிறுத்தப்பட்டி ருக்கும் . அவசரத் தேவை ஏற்படும் போது அவை அனுப்பி வைக் கப்படும் . மேலும் டில்லியில் அதிரடிப் படையினர் அருகிலேயே இருப்பதால் விமானங்களை குறிப்பிட்ட இடத்திற்கு விரைவில் கொண்டு செல்ல இயலும் என்று கருதப்படுகிறது . மும்பையில் பயங்கர...

உள்ளூரில் நடக்கும் வன்முறையின் தலையை நசுக்க முடியாத நாம், வெளிநாட்டுப் பயங்கரவாதிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

படம்
மத்திய நிதித்துறை அமைச்சராகவிருந்த மாண்புமிகு ப . சிதம்பரம் அவர்கள் இந்தியாவின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார் . இதற்குமுன் உள்துறை இணை அமைச்சராகவிருந்த அனுபவம் அவருக்கு உண்டு . கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் மத்தியில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார் . தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மிக முக்கியமான ஒரு துறைக்குப் பொறுப்பு ஏற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும் . உலகில் வன்முறைகள் அதிகம் நடக்கும் 20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளது . இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்துறை அமைச்சராகப் பணி யாற்றிடப் பணிக்கப்பட்டுள்ளார் . அதுவும் மக்களவைக்கு மிக விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தப் பொறுப்பு அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறது . புதிய பொருளாதாரக் கொள்கை என்ற புரவியின்மீது சவாரி செய்தவர் . அதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் நசிந்து போனதுதான் மிச்சம் என இடதுசாரிகளால் மிகவும் கடுமையாக விமர்சிக...