கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள் அகன்றது என்ற சேதி நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பயன் தருவதாகும்

கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள் அகன்றது என்ற
சேதி நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பயன் தருவதாகும்

பிறந்த நாளில் யாம் பெற்ற பேறு - இன்பம் இதுவே!

தமிழர் தலைவர் விடுத்துள்ள பிறந்த நாள் சேதி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தம் பிறந்த நாள் செய்தியாக அளித்துள்ள அறிக்கை வருமாறு:

எனக்கு இன்று 76-வது பிறந்த நாள். வயது ஏறுவது இயற்கை; வாழ்க்கையை லட்சிய நோக்கோடு வாழ்வதுதான் முக்கியம். தனக்கு மட்டுமே வாழ்க்கை என்றெண்ணாது சமுதாயத்திற்காக அதன் முன்னேற்றத்திற்கும் உழைப்பதே உயர் தனிக்குறிக்கோள் என்று கருதி வாழ்வதே பயனுறு வாழ்வு என்பதை நம் அறிவுக்கு தந்தை பெரியார் போதித்ததோடு, சாதித்தும் வாழ்ந்தும் காட்டியுள்ளார்.

அய்யாவிடம் கற்ற பாடம்

அவர்தம் தொண்டர்களுக்குத் தொண்டனான தோழனான எனது வாழ்க்கையும் அவர்கள் விட்ட பணி தொடருவதே குறிக்கோள் என்ற அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ் வொரு மணித்துளியும், ஒவ்வொரு நொடியும் வாழ்க்கை உழைப்பின் மூலமே நகர வேண்டும் என்பதே அய்யாவிடம் யாம் கற்ற பாடம்!

எம்மினத்தவர் ஈழத் தமிழர் குண்டு மழையை நாளும் சந்தித்து, குழந்தைக் குட்டிகளுடன் பாலுக்கும் நீருக்கும் தவியாய்த் தவித்துக் கொண்டு குற்றுயிரும் குலை உயிருமாக லட்சணக்கணக்னோர் வாழும் நிலையில் இதயத்தில் இரத்தம் கசிகிறது! கண்ணீரும் வற்றி விடுகின்றது.

இந்நிலையில் எதற்குப் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் -தேலையில்லை என்றுதான் திராவிடர் கழகச் செயற்குழுவில் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.

பிரச்சாரக் கூட்டம்

பிரச்சாரக் கூட்டங்களில்கூட ஈழத் தமிழர்ப் பாதுகாப்புப் பிரச்சாரமாக, மக்களை நிம்மதியாக வாழவிடாத மதவெறிக் கூட்டத்தின் பயங்கரவாதத்தின் வேர் நிலை எதுவோ, அதைக் கருவறுக்க எத் தகைய அறிவியல் அணுகுமுறை தேவை என்பதை விளக்கிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். நூல்கள் வெளியிடுவது இயக்கப் பிரச்சாரம்தான்.

விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, ‘The Modern Rationalist’ - ஆகிய ஏடுகளுக்கு சந்தாக்களை அதிகம் சேர்த்தல் அவசியம்!

விடுதலையின் பவளவிழா!

விடுதலையின் பவள விழா 75-ம் ஆண்டு வரும் ஜூன் அன்று! அதற்கான அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்தி பொது மக்கள் கையில் திகழும் வெகு மக்கள் ஏடு விடுதலை என்ற நிலையை உண்டாக்குவதை இலக்காக்கிக் கொண்டு இமை கொட்டாது உழையுங்கள் தோழர்களே! தோழியர்களே!

அந்த ஏடு மட்டுமில்லாமலிருந்தால் நம் இனத்தின் மான வாழ்வு, உரிமை வாழ்வு மிகப் பெரிய கேள்விக் குறியாகி இருக்குமே!

அய்யா, அம்மாவின் தலைமைக்கும் வழிகாட்டுதலுக்கும் பிறகு அவர்கள் நமக்கு மட்டுமின்றி நாட்டுக்கே நம் இனத்திற்கே விட்டுச் சென்ற கலங்கரை விளக்கு விடுதலை நாளேடு.

அதுதான் வீழ்ச்சியுறும் தமிழ்நாட்டைக் காப்பாற்றும் நம் இனத்தின் எஃகுக் கவசமாகும்.

மழை வெள்ளமும்,
தமிழக அரசின் சீரிய செயல்பாடுகளும்

தமிழ்நாட்டில் மழை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றாலும், கடலூர், சிதம்பரம், திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்ட வேளாண்மை விளை பயிர்களுக்குக் கேடு ஏற்பட்டுள்ள நிலை வருந்தத்தக்க ஒன்றாகும்!

எதையும் புயல் வேகத்தில் - போர்க் கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெற திட்டமிட்டு முதல்வர் கலைஞர் தம் அரசும் அமைச்சர்களும் பாதிக்கப்பட்டபகுதிகளில் சென்று செயல்பட்டு வருகின்றனர். மக்கள் நல அரசு இது என்பதைக் காட்டுவதோடு, ஆட்சிக்கு வரும்போது ஏழாயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து சாதனைச் சரித்திரம் படைத்த ஆட்சி என்பதால் அரசியல் நடத்துவோர் வெள்ளப் பாதிப்பை ஆயுதமாக்கிட முயன்றால் அவர்கள் அதில் தோற்றுப் போவது உறுதி!

கலைஞர் குடும்பத்தில் ஒற்றுமை நாட்டுக்கும், வீட்டுக்கும், இயக்கத்துக்கும் பயன்படுபவை

இப்பிறந்த நாளில் கலைஞர்தம் குருதி உறவுக் குடும்பங்களில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து இரத்தம் குடிக்கும் நரிகளைப் போல நின்றவர்களுக்கு ஏமாற்றம் உருவாகும்படி அருமைச் சகோதரர்கள் மானமிகு மு.க. அழகிரி, மானமிகு மு.க. ஸ்டாலின் ஆகியோர் முயற்சியில் கலாநிதிமாறன், தயாநிதிமாறன், குடும்பங்களுக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறி, அனைத்துக் குடும்பத்து உறுப்பினர்களும் கலைஞர் அவர்கள் பளிச் சென்று சொன்னதுபோல் இதயத்தால் சிந்தித்த காரணத்தால் ஒன்றாக இணைந்தது எல்லையற்ற மகிழ்ச்சியாகும். இனமான உணர்வும், தாய்க் கழகத்தின் கவலையும் பொறுப்பும் வீணாகவில்லை என்று பறைசாற்றுவதாக இது அமைந்துவிட்டது.

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!

இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்று புரட்சிக் கவிஞரின் கவிதை இதற்கும் பொருந்தும். அச்சகோதரர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த வாழ்துத்துகள்! அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! ஏற்கெனவே ஏற்பட்ட கசப்புணர்வின் நினைவின் வடுக்கள்கூட இல்லாமல் மனதால் அவற்றை அழித்து, முன்புபோல் என்றும் ஒரே குடும்பமாக இருந்து உண்மையான திராவிட இயக்கத்தின் பலம் குன்றாது குறையாது என்று அகிலத்திற்குப் பிரகடனப்படுத்துங்கள்!

திராவிடர் கழகத்தின் வேண்டுகோள்!

இந்நாளில் யாம் பெற்ற இன்பம் - பேறு அது! இது ஒரு குடும்பத்தின் பிரச்சனை அல்ல; இயக்கம் சார்ந்தது; அதைவிட தமிழ் திராவிட இனம் சார்ந்தது!

நமது முதல்வர் கலைஞர் ஆயுள் நீடிப்பதில் தான் நம் இனத்தின் பாதுகாப்பும், வளர்ச்சியும் இருக்கின்றன. அதனைப் பெருக்க - நிகழ்வுகள் நடைபெற தமது பங்களிப்பு என்ன என்று தோழர்கள் சகோதரர்கள் நாளும் சிந்தித்து ஒற்றுமையுடன் உழைத்து, கற்கோட்டைதான் நம் கழகம் என்பதைக் காட்டுங்கள் என்பதைத் தாய்க்கழகம் கடமை உணர்வோடு விரும்புகிறது - வேண்டுகிறது!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
the misunderstanding is not on ideology or any such thing. but it is more a difference between two egoistic human beings. how this is good for the country? Actually, Who cares whether they are together or not? dont' phrase what you desire as some thing the country desires.

one side the country is being attacked. the other side, there is a total collapse of infrastructure in Chennai with the intense rains. Globally, there is a financial crisis which may show up its ugly head every where costing jobs for millions. here you are worried about the difference of opinion of two individuals! As if this is going to solve all the problems!

Take your burried head out of sand and look around!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை