ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

13 டிசம்பர், 2008

இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை சுட்டுக் கொன்றுவிட்டனர்.

Encounter
இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதிய இன்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பயிலும் ஸ்வப்னிகா, பிரனீதா ஆகியோர் தங்களது டூ வீலரில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களை பைக்கில் வந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய், ஹரிகிருஷ்ணா, ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் வழிமறித்து ஆசிட் ஊற்றிவிட்டுத் தப்பினர்.

இதி்ல் இரு மாணவிகளின் முகம், உடல் வெந்துபோனது. இருவருமே மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களையும் ஆந்திர போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மூவரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்றிரவு விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

எந்த இடத்தில் வைத்து ஆசிட் ஊற்றினார்களோ அதே இடத்தில் வைத்து மூவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். மூவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் சுட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி மிகுந்த அதிர்ச்சி தெரிவி்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இந்த எண்கெளன்டர் நடந்துள்ளது.

இதில் ஸ்ரீனிவாச ராவ் ஸ்வப்னிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். ஆனால், கார்த்திக் என்ற மாணவனை காதலித்து வந்த ஸ்பனிகா, ராவின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதையடுத்து உன் மீது ஆசிட் வீசுவேன் என ஸ்வப்னிகாவிடம் ராவ் மிரட்டியுள்ளான். இது குறித்து ஸ்வப்னிகாவின் தந்தை தேவேந்தர் வாரங்கல் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராவும் அவனது நண்பர்களும் தேவேந்தரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் ஸ்ரீனிவாச ராவ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தான்.

இதையடுத்து தனது சகோதரன் சிவப்பிரசாத ராவ், தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோருடன் கூடிப் பேசி ஸ்வப்னிகாவின் முகத்தில் ஆசிட் வீச வாரங்கலில் உள்ள ஒரு கடையில் `சல்பியூரிக்' ஆசிட்டை வாங்கியுள்ளான்.

பின்னர் ராவ், சஞ்சய், ஹரி மூவரும் மாமனூர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக்கை திருடிக் கொண்டு ஸ்வப்னிகா படிக்கும் கல்லூரிக்கு வந்துள்ளனர்.

தனது தோழி பிரனீதாவுடன் இரு சக்கர வாகனத்தில் வெளியே வந்த ஸ்வப்னிகாவை சிறிது தூரத்தில் வழிமறித்து ஆசிட்டை ஊற்றிவிட்டுத் தப்பினர்.

இதில் பிரனீதா ஹெல்மட் அணிந்திருந்ததால் முகம் தப்பியது. ஆனால், உடல் வெந்தது. ஸ்வ்னிகாவின் முகமும் உடலும் வெந்து போனது. இருவரும் அலறியபடியே மயங்கி கீழே விழுந்துள்ளனர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்வப்னிகாவின் உடல் 60 சதவீத அளவுக்கு வெந்து போய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ந்து போன முதல்வர் ராஜசேகர ரெட்டி மாணவர்களை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட்டார். போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து சிவபிரசாத் ராவ் உள்பட 4 மாணவர்களையும் கைது செய்தனர்.

இந் நிலையில் தான் போலீசாரின் குண்டுக்கு 4 பேரும் காலியாகியுள்ளனர். சிவபிரசாத ராவ் ஆசிட் ஊற்றியதில் நேரடியாக ஈடுபடவில்லை. இதனால் அவனை போலீசார் சுடவில்லை என்று தெரிகிறது.

லேபிள்கள்: , , ,

3 கருத்துகள்:

Anonymous பெயரில்லா கூறியது…

சுட்டு கொன்றது சரிதான்

13 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:36  
Blogger Ravichandran கூறியது…

Well done Police!!
Do not afraid of idiotic so called Human Rights Activists.They will speak only for inhumans;not for Humans.

14 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:06  
Anonymous பெயரில்லா கூறியது…

அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்!!!
சபாபதி

14 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:42  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு