டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் குவாலிஸ் காரில் வந்த மர்மநபர்கள் சரமாரியாக சுட்டதாக பயணிகள்கூறியதால் பெரும் பீதி ஏற்பட்டது. இதையடுத்துஅங்கு கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டனர்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்இன்று அதிகாலை 1.10 மணியளவில் மத்தியதொழிலக பாதுகாப்புப் படையினருக்கு ஒருபோன் வந்தது. அதில் பேசிய பயணிகள், விமான நிலையத்திற்குள் ஒருகுவாலிஸ் கார் வந்தது. அதில் இருந்த நபர்கள், காரிலிருந்தபடியே சரமாரியாகதுப்பாக்கியால் சுட்டபடி சென்றனர் என்று கூறினர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கமாண்டோ படையினர்வரவழைக்கப்பட்டு விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. விமானநிலையத்திற்கு வருகிற அனைத்து வாகனங்களும் தீவிரமாகசோதனையிடப்படுகின்றன.



இந்த சம்பவம் குறித்து டெல்லி விமான நிலைய மத்திய தொழிலக பாதுகாப்புப்படை டிஐஜியான உதயன் பானர்ஜி கூறுகையில், சில பயணிகளிடமிருந்துதுப்பாக்கிச் சத்தம் கேட்டதாக எங்களுக்குப் போன் வந்தது. இது துப்பாக்கிச்சூடுதான் என்பதற்கான ஆதாரம் இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. தோட்டாக்கள் எதையும் கைப்பற்றவில்லை.

அந்த சத்தத்திற்குப் பின்னர் மத்திய தொழிலகப் படையினர், டெல்லி போலீஸார்உடனடி நடவடிக்கையில் இறங்கினர். விமான நிலையத்தில் தீவிர சோதனைநடத்தப்பட்டது.

தற்போது நிலைமை இயல்பாகியுள்ளது. விமானப் போக்குவரத்தில்பாதிப்பில்லை. பயணிகள் நடமாட்டமும் வழக்கம் போல உள்ளது என்றார்.

டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் கூறுகையில், நான்குஅல்லது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதில் யாரும் காயமடையவில்லை.

உண்மையிலேயே இப்படி நடந்ததா அல்லது பயணிகள் பீதியில் கூறினார்களாஎன்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

நேற்றுதான், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை விமானத்தைக் கொண்டுதாக்கி அழித்தது போல இந்தியாவிலும் செய்ய தீவிரவாதிகள்திட்டமிட்டிருப்பதாக விமானப்படைத் தலைமைத் தளபதி கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து டெல்லி, சென்னை, பெங்களூர் விமான நிலையங்களில் மிக பலத்தபாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்ட சத்தம்கேட்டதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை