ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

4 டிசம்பர், 2008

செய்தி தரும் சிந்தனை பக்தி வந்தால் - புத்தி மட்டுமல்ல வேலையும் போய்விட்டது


செய்தி தரும் சிந்தனை பக்தி வந்தால் -
புத்தி மட்டுமல்ல வேலையும் போய்விட்டது

பொது மருத்துவமனையில் இரண்டுபேர் மருத்துவத்திற்காகச்சேர்க்கப் பட்டனர். ஒருவர் வேலூர் கிருஷ்ணமூர்த்தி, மற்றவர்வங்காளத்தைச் சேர்ந்த தபஸ்பால். மருத்துவம் பலனின்றிஇருவரும் 23 ஆம் தேதி இறந்துவிட்டனர்.

மறுநாள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வங்காளத்து தபஸ்பாலின் உறவினர்சத்யஜித்பால் உடலை வாங்க வந்தார். பிண வறையில் அடையாளம்காட்டிவிட்டு வெளியே வந்தார். முழுவதும் மூடப்பட்ட பிணம் ஒப்படைக்கப்பட்டது. எடுத்து சென்று எரித்து விட்டார்.

இரண்டு மணிநேரம் கழித்து வேலூர் கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் வந்தனர். அடையாளம் காட்டப் பிணவறைக்குச் சென்றனர். பிணத்தைக் காணவில்லை. பதறிப் போன மருத்துவமனை ஊழியர்கள் ஏதோ சந்தேகத்தில் சத்யஜித் பாலிடம்விசாரித்தனர். உடலை உடனே எரித்துவிட்டதை அவர் சொல்லிவிட்டார்.

ஆக வேலூர் கிருஷ்ணமூர்த்தி வங்காள முறைப்படி எரிந்துபோனார். உண்மையான வங்காளப் பிணத்தை பெற்று இரண்டாம் முறையாகவும் சடங்குசெய்யப் போகிறார், சத்யஜித் பால்.

ஆனால், வேலூர் கிருஷ்ணமூர்த்தியின் சடங்குமுறை ஏதும் இல்லாமல்எரிக்கப்பட்ட விட்டார். மேலே போகுமா? சிவலோகமோ, வைகுந்தமோகிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ? இது ஒருபுறம் இருக்க, கிருஷ்ணமூர்த்திஎதிர்க்கட்சிக்காரராக இருந்தவராம். பிணத்தை வைத்து அரசியல், என்ன பாடுபடப்போகிறதோ?

பிணம் எப்படி மாறியது? அடையாளம் காட்டிய பிறகும் எப்படி இடம் மாறும்? பிணவறைப் பணியாளர் டில்லிபாபு வேலையில் இருந்து இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளார் - ஏன்?

டில்லிபாபு சபரிமலைக்குப் போகப் போகிறார். அதற்கான மாலை போட்டுக்கொண்டாராம். சுத்தபத்தமாக இருக்க வேண்டுமாம்.. சாராயம் குடிப்பார்களாம். பீடி புகைப்பார்கள், இத்தியாதி இத்தியாதி எல்லாம் செய்வார்கள். இவரோ தன்கடமையைச் செய்யமாட்டாராம்! பிணத்தைப் பார்த்து விட்டால் மீண்டும் குளிக்கவேண்டுமே! ஆனால், அந்தப் பணியைச் செய்யாமல் கடைநிலைப்பணியாளர்களிடம் கைகாட்டினார். பிணம் மாறிவிட்டது. வேலையும்போய்விட்டது.

பக்தி வந்தால் புத்தி மட்டும் அல்ல, வேலையும் போய்விட்டது!

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு