கஸர், லஷ்கர் இ தொப்யா அமைப்பைச் சேர்ந்தவன். மும்பை போலீஸாரிடம் கஸர் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம்; தாவூத் இப்ராகிமே காரணம்!


கஸர், பாகிஸ்தானின் பரீத்கோட் நகரைச்சேர்ந்தவன். மும்பை போலீஸாரும், ஐபிஅதிகாரிகளும் இவனிடம் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர். விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல்களை கஸர்தெரிவித்துள்ளான். மேலும் தனது செயல்முற்றிலும் சரியானதே, இதில் வருத்தப்படஎதுவும் இல்லை என்றும் அவன் கூறியுள்ளான்.

தாவூத் இப்ராகிமே காரணம்!

பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருக்கும் தாதா தாவூத் இப்ராகிம்தான் இந்த பயங்கரதாக்குதலுக்கு திட்டம் போட்டுக் கொடுத்து, அரங்கேற்றியது என்பதை கஸர்தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

மும்பை, கொலாபா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், தாவூத் இப்ராகிமின்நெருங்கிய கூட்டாளியுமான ஒரு நபர்தான், தாக்குதலுக்குத் தேவையானஅனைத்து வகை ஆயுதங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என்பதும்விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கஸர், லஷ்கர் தொப்யா அமைப்பைச் சேர்ந்தவன். மும்பை போலீஸாரிடம்கஸர் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் ...

12 பேர் கும்பல்

மொத்தம் 12 பேர் கராச்சியிலிருந்து படகுகள் மூலம் சசூல் துறைமுகப் பகுதிக்குவந்தோம். அங்கிருந்து கபே பரேட் பகுதிக்கு சென்றோம். பின்னர் தாவூத்இப்ராகிம் கூட்டாளியான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஏற்பாடு செய்தபடகு மூலம் கேட்வே ஆப் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தோம்.

தாவூத் ஏற்பாடு செய்திருந்த படகில் எங்களுக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள், பிளாஸ்டிக் வெடிபொருட்கள் உள்ளிட்டவை இருந்தன.

லஷ்கர் தீவிரவாதி

நான் செய்தது சரியே. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் லஷ்கர்இயக்கத்தைச் சேர்ந்தவன்.

நானும் இஸ்மாயில் கானும் சேர்ந்துதான் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர்ஹேமந்த் கர்கரகேவை சுட்டு வீழ்த்தினோம். அதேபோல, விஜய் சலேஷ்கர்என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட்), அசோக் காம்தே (கூடுதல் கமிஷனர்) ஆகியோரையும் சுடடு வீழ்த்தினோம்.

தாஜ் ஹோட்டலில் நான் ஒரு அறையையும் புக் செய்திருந்தேன். ரூம் நம்பர்ல் தங்கினேன். என்னுடன் கூட்டாளிகளும் தங்கினர். அங்கு தான்வெடிபொருட்களை பதுக்கி வைத்தோம் என்று கூறியுள்ளான் கஸர்.

டிச. 11 வரை போலீஸ் காவல்

இந்த நிலையில் பிடிபட்டுள்ள தீவிரவாதி கஸர், நீதிமன்றம் ஒன்றில்ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது அவனிடம் மேலும் விசாரிக்கவேண்டியுள்ளதால் போலீஸ் காவலில் அனுமதிக்குமாறு போலீஸ் தரப்பில்கோரப்பட்டது.

இதை ஏற்ற நீதிமன்றம், கஸரை டிசம்பர் 11ம் தேதி வரை போலீஸ் காவலில்வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து கஸர் ரகசிய இடத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டான். அவனிடம் நடைபெறவுள்ள தொடர் விசாரணையில் மேலும்பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
( 603

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்