யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா

Sivajilingam
யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இப்போது இந்தியாவில் உள்ள சிவாஜிலிங்கம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து விளக்கி வருகிறார்.

இவர் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பியாவார்.

இந் நிலையில் 72 மணி நேரத்தில் அவர் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு கடத்துவோம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்ததகவை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத் தளத்தில் நேற்று வெளியிட்டது.



ஆனால், கொழும்பு திரும்பினால் தன்னை இலங்கை அரசு கொலை செய்து விடும் என்பதால் தான் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதிக்குமாறு சிவாஜிலிங்கம் அடைக்கலம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தனக்கு இந்திய அரசிடம் இருந்து இதுபற்றி தகவல் ஏதும் வரவில்லை என்றும், இது இலங்கை அரசால் திட்டமிட்டு பரப்பப்படும் புரளியாக இருக்கலாம் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்ததாக இலங்கை தமிழ் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்