விக்ட் ரம் என்ற சொல்லை சரியாக உச்சரிக்கத் தெரிந்தால் போதும், இரண்டு நாள் உங்கள் படம் செய்திகளில் வருவதற்கு 100 சதம் கியாரண்டி.


தமிழில் செய்தி வழங்குவதற்கென்றுநமது தொலைக்காட்சிகள் 'மைக்'கைஎடுத்துக் கொண்டு கிளம்பினாலும்கிளம்பினார்கள்... மக்களெல்லாம்இப்போது 'மைக்' மோகத்துக்குஅடிமையாகிவிட்டார்கள். ஒரு பழையகேமராவை தூக்கிக் கொண்டுசாதாரணமாக சாலையில்கிளம்பினாலும், "எந்த டி.விக்கு சார்எடுக்குறீங்க?" என்று கேட்கத் தயங்குவதில்லை. எந்த ஒரு பிரச்சினை என்றுகையில் மைக்குடன் நின்றாலும் கூட்டம் கூடி கருத்து சொல்கிறார்கள். பிரச்சினையைப் பற்றி நமக்குத் தெரிகிறதோ இல்லையோ, கருத்து சொல்லலாம். தேவைப்படுமானால், கேமராக் காரர் இந்த விசயத்தை சொல்லுங்கள் என்று எதைசொல்லச் சொல்கிறாரோ, அதை திக்கித் திக்கி ஒப்பித்தாலும் சரி, இன்றுதமிழ்நாடு முழுக்க நம்மைப் பார்க்கப் போகிறார்கள் என்ற மகிழ்ச்சி அவர்முகத்தில் தெரியும்.

எதைப் பற்றிக் கருத்து சொல்லும் முன்பும் எச்சரிக்கையாக, "எந்த டி.வி" என்றுகேட்டுக் கொள்வார்கள். ஆளுங்கட்சி டி.வியா? அதற் கேற்றாற்போல் கருத்துசொல்வார். எதிர்க்கட்சி டி.வி.யின் அடையாளத்தைப் பார்த்துவிட்டால் அதே நபர், தான் முன் சொன்ன கருத்தை அப்படியே மாற்றி எதிர்க்கருத்தைச் சொல்வார். அப்படித் தயாராகியிருக்கிறார்கள்.

சரி, சாதாரண மக்களாயினும் சரி, அரசியல் தலைவர்களாயினும் சரி, சின்டி,வி-யில் முகம் காட்டுவது என்றால் கொஞ்சம் ஆசைதான். அதுவும் 24 மணிநேர செய்திச் சேவையில், அரை மணிக்கொரு முறை முகம் தெரிகிறது என்றால்யாருக்குத் தான் ஆசை வராது. சரி, அதற்கு ஏதாவது விசயம் வேண்டுமே? என்றுஅங்கலாய்ப்பவர்களுக்காகத் தான் இந்த குறிப்புகள். கவனமாகப் பின்பற்றினால்வெகு விரைவில் நீங்கள் வானிலை அறிவிப்பு தரும் விமணனை விடவும் அதிகமுறை சின் டி.வி.யில் வரும் வாய்ப்பிருக்கிறது.

பொதுவாக செய்ய வேண்டியது:

1. ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்பாக அறிக்கை விட வேண்டும் அல்லது பிரஸ்மீட் வைக்க வேண்டும். ரோட்டில் நின்று கருத்து சொல்பவராகவும் இருக்கலாம்.

2. 'நீங்கள் அரசியல் கட்சி நடத்த வேண்டும், அரிய, பெரிய கருத்துகள் தெரியவேண்டும்' என்பதெல்லாம் அவசியமில்லை. குறிப்பாக செய்ய வேண்டியது:

3. நேற்று உங்கள் வீட்டில் 'தீ எறும்பு' படையெடுத்த செய்தியாகக் கூடஇருக்கலாம். ஆனால் ஒப்பீடுக்காகவாவது, மதுரை தினமுரண் அலுவலகம்தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இரண்டு வார்த்தைகள் சேர்த்துவிடவேண்டும். அதற்குமேல் அச் செய்தியை நீட்டி முழக்குவது, உங்கள் திறமை யைப்பொறுத்தது. நீங்கள் சொன்ன செய்தி வருகிறதோ, இல்லையோ கட்டாயம்தினமுரண் சம்பவம் பற்றி நீங்கள் பேசியது வந்துவிடும். நீங்கள் அன்றைக்கு ஒருநாள் முழுக்கவோ, உங்கள் திறமையைப் பொறுத்தது அடுத்த நாளும் கூட அரைமணிக்கொருமுறை தொலைக்காட்சியில் தெரியலாம்.. பின்னர் ஊருக்குள்நானும் ரவுடி, நானும் ரவுடி என்னும் ரேஞ்சில் அள்ளிவிடலாம்.

4. யாரோ கால் தடுக்கி விழுந்ததாக காதில் விழுந்த கதையையும் நீங்கள்சொல்லலாம். அதனுடன் "சாதலில் விழுந்தேன்" பற்றியும் பேசுவது அவசியம். முடிந்தால் காத்த முத்த... காத்த முத்த... பாட்டுக்கு ஒரு குத்தாட்டமும்போடலாம்.

5. இன்னும் உடனடியாக இடம்பெற வேண்டுமானால் இந்த வழி உகந்தது. பி.எஸ்.என்.எல் கிளை அலுவலகம் இருக்கும் தெருவுக்கு பக்கத்து குறுக்கு சந்தில்ஆம் நம்பர் வீட்டில் வசிக்கிறவன் என்ற அளவுக்குக் கூட உங்களுக்கும்பி.எஸ்.என்.எல்-லுக்கும் தொடர் பிருக்க வேண்டிய அவசியம் இல்லை. விக்ட் ரம்என்ற சொல்லை சரியாக உச்சரிக்கத் தெரிந்தால் போதும், இரண்டு நாள் உங்கள்படம் செய்திகளில் வருவதற்கு 100 சதம் கியாரண்டி. ஆர்ப்பாட்ட தி.மு.கவுக்கு.தி.மு.) வுக்கு ஆலோசனைகள்: 7- (

'தினம் ஒரு திருக்குறள்' மாதிரி ஆளுக்கு ஒரு அய்டியா சொல்ல வேண்டும் என்று.தி.மு.-வின் தலைமைக் கழகப் பொறுப்பாளர் களுக்கெல்லாம்அசைன்மெண்ட்டாம்.

வேறு என்னத்துக்கு? நீங்கள் தினமும் பார்ப்பதில்லையா? நமது எம்.டி.ஆரின்காட்சி வடிவமான நெயா டி.வி-யில் தினமும் கால் மணிநேரச் செய்திக்குஅறிக்கை என்ற பெயரில் ஏதாவது எழுதித்தர வேண்டுமே; மிச்ச கால்மணிநேரத்திற்குக் காட்டுவதற்கு ஆர்ப்பாட்ட செய்திகளும் வேண்டுமே.. அதற்குத்தான்.

தினமும் மின் வெட்டு என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆபீஸ்வேலைக்கு போவதைப்போல அலுப்பாய் இருக்கிறதென் பதால், திடீரென்றுதமிழ்ப்பற்று எல்லாம் எழுந்து டிக்கெட்டில் தமிழ் வேண்டுமென்று ஆர்ப்பட்டம்நடத்தியிருக்கிறார்கள். எனவே ஆளுங்கட்சி பதவி விலகுமாறு கோரி அறிக்கைவிடவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் யோசனை சொல்பவர்களுக்கு தக்க சன்மானம்என்று அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

அய்டியா-1:

குனியமுத்தூர் கோயிந்தசாமிக்கு குறுக்கு வலி வந்ததற்கு காரணமானஆளுங்கட்சியின் மெத்தனப் போக்கைக் கண்டித்து கோவில் பட்டியில்ஆர்ப்பாட்டம்

அய்டியா-2:

கோயஸ் தோட்டத்தில் எலிகள் பெருத்த தற்கு பூனைப்படையை அரசு குறைத்ததே காரணம் என்று புளியகுளத்தில் ஆர்ப்பாட்டம்

அய்டியா-3:

மழையின்றி மக்கள் வாடுவதற்கு உதய சூரியனின் வெப்பம்தான் காரணம்என்பதால் சூரியனுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம்

நம்மால் மூன்று தான் சொல்ல முடிகிறது. பாக்கியை வாசகர்கள் பார்த்துக்கொள்வார்களாக

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை