ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

4 டிசம்பர், 2008

நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் மகன் விஷால் (13) உடல் நலக்குறைவால் இறந்தா


Wednesday, December 3, 2008

நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் மகன் மரணம்


நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் மகன் விஷால் (13) உடல் நலக்குறைவால் இறந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஷால் மரணம் அடைந்தார்.

விஷாலின் உடல் சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு நடிகர்கள் விஜய், பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன், அருண்பாண்டியன், ஆதித்யா, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பிரபு தேவா-லதா தம்பதிக்கு விஷால் தவிர ரிஷி, ராகவேந்திரா, ஆதி தேவா ஆகிய மகன்கள் உள்ளனர்.

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு