இன்று ரஜினியின் 59வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி அவரை தொலைபேசி மூலம் வாழ்த்தினார்.

இன்று ரஜினியின் 59வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி அவரை தொலைபேசி மூலம் வாழ்த்தினார்.

இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் உள்ள நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததால் பிறந்த நாள் கொண்டாட்டம் வழக்கமான அளவில் இல்லை.

மேலும் ரஜினியும் இன்று ஊரில் இல்லை. ஹைதராபாத்தில் நடந்து வரும் சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படத்தின் ஷூட்டிங்கில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி, ரஜினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தி.நகர் பகுதியில் ரஜினிகாந்த்தின் பிரமாண்ட கட் அவுட்டும் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கோவில்களில் விசேஷ வழிபாடுகள், பூஜைகளை நடத்தியும், அன்னதானம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டும் கொண்டாடினர். எந்திரன் படம் வெற்றி அடைய வேண்டும் எனவும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அன்பார்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் நம் தலைவரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் . 59 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு விடிவெள்ளி இன்று சூப்பர் ஸ்டார் ஆக மின்னிக்கொண்டிருக்கிறது என்றால் அந்த தங்க தலைவனின் உழைப்பு ,விடாமுயற்சி ,தன்னம்பிக்கை ,தனி பாணி , தன்னடக்கம் ,இன்னும் என்னென்ன நற்குணங்கள் உண்டோ அத்தனைக்கும் சொந்தக்காரர் நம் தலைவர் . வட்டமிடும் வல்லூறுகள் போல் எப்போது விழுவார் ஏளனம் செய்யலாம் ,ஏகடியம் பேசலாம் ,எகத்தாளம் பண்ணலாம் என்று காத்திருக்கும் எதிரிகள் ஒருபுறம் , தமிழ் தமிழ் என்று பேசி தனிமைப்படுத்த நினைக்கும் தருக்கர்கள் கூட்டம் ஒருபுறம் , தலைவர் வாயை திறந்தாலே வாய்தா வாங்க வரிசை கட்டி நிற்கும் வக்கற்றவர்கள் ஒரு புறம் , காவேரி .ஒகேனக்கல் ,இலங்கை தமிழர் என்று எதை பற்றி பேசினாலும் தனக்கு தோன்றியதை எழுதி காசு பர்ர்க்க துடிக்கும் தான்தோன்றி பத்திரிக்கைகள் ஒருபுறம் என எண்ணற்ற எதிரிகள் எட்டு திசையிலும் . என்ன செய்ய தலைவா ?

ஒரு சொல் போதும் உன்னிடமிருந்து , உண்மை ரசிகன் உனக்காக உதிரம் உதிர்க்க தயார் . ஏன் இன்னும் மவுனம் ? உன் பலம் உனக்கும் தெரியவில்லையா ? அல்லது எங்கள் பலம் மீது நம்பிக்கை இல்லையா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்