ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

1 டிசம்பர், 2008

"எய்ட்ஸ்' நோயால் 1981ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஏறத்தாழ 2 கோடியே 50 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்


கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு "எய்ட்ஸ்' என்றவார்த்தையே இல்லை. இன்று இந்த உலகத்தில் எந்தபகுதியிலும் இந்த வார்த்தையை தெரியாதவர் அரிது. "எய்ட்ஸ்' நோயால் 1981ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை ஏறத்தாழ 2 கோடியே 50 லட்சம் பேர்மரணமடைந்துள்ளனர். இதில் ஆப்ரிக்காவில் மட்டும் 75 சதவீத மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது 3 கோடியே 30 லட்சம் பேருக்கு எச்..வி., தொற்றுள்ளது.எய்ட்ஸை குணமாக்கும் மருந்து இல்லை. எனவேதான்வருமுன் காப்போம்' எனும் பழைய பழமொழிதான் இந்நோய் தடுப்பில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் வரும்முன் தடுத்துவிடுவது முற்றிலும் சாத்தியமில்லை. ஊசி மூலமாகவோ ரத்தப்பரிமாற்றம் வழியாகவோ இந்த வைரஸ்பரவும். என்றாலும் இதற்கு சிறிய அளவிலான வாய்ப்புதான் உள்ளது.


"

எச்..வி., தொற்றுக்குள்ளானவரிடம் பாலுறவு கொள்வதன் வாயிலாகத்தான் இந்நோய் அதிகமாக பரவுகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று - பாலுறவை தவிர்த்துவிடுதல். மற்றொன்றுபாதுகாப்பான உறவு. இருவரில் ஒருவருக்கு எச்..வி., தொற்றியிருக்கும் பட்சத்தில் திருமணத்துக்குப் பின்மற்றொரு தம்பதிக்கு எச்..வி., தொற்றும் வாய்ப்புள்ளது. லட்கணக்கான பெண்கள் தங்கள் கணவன் வழியாகஎச்..வி., தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.


ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுவிட்டால், அதை அவர் சீக்கிரமாகவே அறிந்துகொள்வது நல்லது. பரிசோதனை வழியாகவே இதை அறிய முடியும். முன்னதாகவே அறிந்துவிட்டால் உடல் நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்துபோகாமல் காப்பாற்ற முடியும். முறையான மருத்துவ ஆலோசனையின்படிஅடுத்து 20 முதல் 30 ஆண்டுகளுக்கு வாழ முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆண்டு எச்..வி..டி., எனும் மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. இது.இசட்.டி., மருந்துடன் சேர்த்து வழங்கப்பட்டது. 1996ம் ஆண்டில்இம்மருந்துகளுடன் "புரட்டீஸ் இன்ஹிபிட்டர்ஸ்' மருந்தும் சேர்க்கப் பட்டது. இந்த மூன்று மருந்தும் சேர்த்து கூட்டுமருந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுஎச்..வி., வைரஸ் தொற்று உள்ளவர்களின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது 1991

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு