ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

4 டிசம்பர், 2008

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு


இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட
பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

- இலங்கைப் போரில் கொடுமைக்கு உள் ளாக்கப்பட்டு வரும்தமிழர் களின் பிரச்சினையில் உடனடி யாகத் தலையிட்டு, தமிழர்க ளுக்கு எதிராக நடைபெற்று வரும் போரை நிறுத்தவும், அவர்கள் கவுரவமாக வாழ் வதை உறுதி செய்யும் வகையில், அவர்களது துயர்களைக் களைய மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் மன் மோகன்சிங்கை நேற்று சந்தித்த தமிழகத்தைச்சேர்ந்த நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மனு ஒன்றை அளித்து வலியுறுத்தினார்கள்.

அந்த மனுவில் கூறப்பட் டுள்ளதாவது:

இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப் பட்டு வரும் கொடுமைகளுக்குதீர் மானகரமானதும், நிரந்தர மானதுமான அரசியல் தீர்வு காணப்படும் என்றமிகுந்த நம்பிக்கையுடன் இந்த மனுவை பிரதமர் அவர்களிடம் சமர்ப் பிக்க தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களா கிய நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

போரின் விளைவாக இலங் கைத் தமிழர்கள் சந்தித்து வரும் கொடுமைகளையும்துயரங் களையும் பற்றி நாங்கள் மிக வும் கவலை அடைந்துள் ளோம். இலங்கையில் உள்ள தமிழர்கள் சொந்த நாட்டி லேயே ஏதிலிகளாக மாறிஅடிப்படை மனித உரிமை களை இழந்துள்ளனர். இப் போரை நிறுத்தி 50 லட்சம்இலங்கைத் தமிழர்களின் நியா யமான உரிமைகளுக்கு அரசி யல் தீர்வு காணப்படவேண்டும் என உலகெங்கும் உள்ள தமி ழர்கள் கோரி வருகின்றனர்.

பல முயற்சிகள் மேற்கொள் ளப்பட்ட பின்னரும், இலங் கையில் போர் நிறுத்தம்ஏற் படவில்லை. இலங்கைத் தமி ழர்களைப் பூண்டோடு அழிப் பதில் இலங்கைஅரசு விடாப் பிடியாக உள்ளது. தங்கள் உயிர் களைக் காப்பாற்றிக் கொள்ளதமிழர்கள் காடுகளிலும், மலை களிலும் தஞ்சம் புகுந்துள்ள னர்.

இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இந்திய அரசு மேற்கொண்டமுயற்சிகளுக்கு இலங்கை அரசு உரிய மரி யாதை தராததால், 25-11-2008 அன்றுதமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், உடனடியாகப் போரைநிறுத்த இலங்கை அரசுக்குக் கடுமையான எச் சரிக்கை விடவேண்டும் என்றுமத்திய அரசை வலியுறுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

எனவே, இலங்கைத் தமிழர் கள் சந்தித்து வரும் நெருக் கடியில் உடனடியாகத்தலை யிட்டு அங்கு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போரைநிறுத்தவும், தங்களது தாய்நாட்டில் அவர்கள் கவுர மாக வாழ்வதை உறுதிசெய்யும் வகையில் அவர்களது துயரைக் களைய மேலும் தீர்மானகர மானநடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தும் மனுவைப் பிரதமரிடம் சமாப்பிக்க தமிழ்நாட் டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாகியநாங்கள் இங்கு வந்துள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு