ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

4 டிசம்பர், 2008

மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய 9 மணி நேரத்துக்குப் பிறகுதான் பாதுகாப்புப் படையினர் அங்கு செல்ல முடிந்தது


மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, தேசியப் பாதுகாப்புப் படை வீரர்களைவிரைவாக அங்கு அனுப்ப அப்போது விமானம் இல்லைஎன்ற குற்றச்சாற்று எழுந்துள்ள நிலையில், மத்தியபோர்ப்படைக்காக 2 விமானங் களை விரைவில் வாங்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது. முடிந்த அளவுவிரைவில் அவை வாங்கப்பட்டு, துணைப் போர்ப் படை மற்றும் தேசியபாதுகாப்புக் காவல்களின் பணிகளுக்குக் பயன்படுத்தப்படும்.

எல்லைப் பாதுகாப்புப்படை இந்த விமானங்களைப் பேணிக் காக்கும். இந்தப்போர்ப்படையிடம் மட்டுமே விமானப் படைப் பிரிவு உள்ளது. விமானங்கள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இந்த விமானங்கள் அனைத்தும் டில்லி அருகே நிறுத்தப்பட்டி ருக்கும். அவசரத்தேவை ஏற்படும் போது அவை அனுப்பி வைக் கப்படும். மேலும் டில்லியில்அதிரடிப் படையினர் அருகிலேயே இருப்பதால் விமானங்களை குறிப்பிட்டஇடத்திற்கு விரைவில் கொண்டு செல்ல இயலும் என்று கருதப்படுகிறது.

மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய 9 மணி நேரத்துக்குப்பிறகுதான் பாதுகாப்புப் படையினர் அங்கு செல்ல முடிந்தது. சண்டிகரிலிருந்துஒரு விமானத்தை டில்லிக்குக் கொண்டு வர 2 மணி நேரமானது.

அமெரிக்காவிலிருந்து புதிய விமானங்களை வாங்குவதற்கான உடன்பாடு கடந்தஆண்டு கையெழுத்தானது. அவற்றில் ஒன்று இந்தச் சிறப்புப் படைகளுக்கானதேவைகளுக்குப் பயன்படுத்தப் படலாம் என்று கூறப்படுகிறது. இவை குறைந்தஉயரத்தில் கூட பறக்கும் திறன் உடையவை. எனவே இடைக்கால விமானத்தளங்களில் கூட அவற்றை தரையிறக்க முடியும். மேலும் அதில் அதிக அளவுசுமை ஏற்ற முடியும். ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3700 கி.மீ. தொலைவிற்கு செல்ல முடியும். பலன் தருமா ?


பயங்கரவாதத்தால் 4 ஆண்டுகளில் 7,000 பேர் பலி!

- மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுப் பொறுப்பேற்ற கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நாட்டில் நடந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்சம்பவங்களில் சுமார் 7 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் இந்த அதிர்ச்சி தகவலைத்தெரிவிக்கிறது.

2004 இல் நடந்த 6,029 சம்பவங்களில் 1,721 பேரும், 2005 இல் நடந்த 5,709 சம்பவங்களில் 1,598 பேரும், 2006 இல் நடந்த 5,240 சம்பவங்களில் 1,352 பேரும்கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டில் நடந்த 4,907 சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,215. நடப்பு ஆண்டில் செப்டம்பர் வரை நடைபெற்ற 3,157 சம்பவங்களில் 760 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மும்பைத் தாக்குதலில் பலியானோர் எண் ணிக்கை 200 அய்யையும் தாண்டியுள்ளதால் இந்த ஆண்டு மட்டும் உயிரிழந்தோர்எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடும் என்று தெரிகிறது. 40 பேரை பலி வாங்கியஅய்தராபாத் குண்டு வெடிப்பு, 68 பேர் உயிரிழந்த சம்ஜூதா குண்டு வெடிப்பு, 230 பேர் கொல்லப்பட்ட மாலேகான் மற்றும் மும்பை ரயில் குண்டு வெடிப்புச்சம்பவங்கள் மற்றும் கடந்த வாரம் மும்பையில் நடந்த பயங்கர வாதிகளின்தாக்குதல் ஆகியவை மன்மோகன்சிங் அரசின் காலத்தில் நடந்துள்ள மிகப்பெரியதாக்குதல்கள் ஆகும்.

பா... தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நடந்த தாக்குதல்கள் இன்னும் பயங் கரமானவை. வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் நடந்த 36, 259 தாக்கு தல்களின் பலியான அப்பாவி மக்களின்எண்ணிக்கை 11,714.

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், அக்சார்தாம் கோயில் மீதானதாக்குதல் ஜம்முவில் ராணுவ மய்யம் தகர்க்கப் பட்டது போன்றவை கடந்தஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல்கள் ஆகும். கொடுமையாக இல்லை ?

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு