ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

1 டிசம்பர், 2008

பாக். தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கலாம்: அமெரிக்கா


மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குபாகிஸ்தான் தீவிரவாதிகள்தான்முழுக்காரணம் என்பது உறுதியாக தெரியவந்தால், பாகிஸ்தானில் உள்ளதீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம்தாக்கலாம். இரு நாடுகளுக்கும்இடையிலான பதட்டம் அதிகரிக்கவும்வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா அச்சம்தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளின் பேச்சை மேற்கோள் காட்டி நியூயார்க்டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்குசம்பந்தம் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

ஆனால், அமெரிக்க உளவுப் பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவுஅதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் தொய்பாதான் மும்பை தாக்குதலுக்குக் காரணமாக இருக்க முடியும்என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

லஷ்கர் அமைப்புக்குத்தான் கடல் மார்க்கமாக ஊடுறுவும் திறமை உள்ளது. மும்பையில் நடந்த திட்டமிட்ட தாக்குதலைப் பார்க்கும்போது லஷ்கர்அமைப்புதான் இதைச் செய்திருக்க முடியும் என்று நம்புவதற்கு இடம் உள்ளதுஎன்று தெரிவித்துள்ளனர்

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு