1981-இலே 97,000-த்திற்கும் மேற்பட்ட நூல்கள் எப்படி எரிக்கப்பட்டுச் சாம்பல் மேடாயின?

சென்னை பெரியார் திடலில் 08-11-2008 அன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அதில் சிங்கள இன வெறியார்களால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றிய ஆவணப்படம் திரையிடல் செய்யப்பட்டது. அதைப் பார்த்த தமிழின உணர்வாளர்களுக்கு எரிகிற தீயில் (உணர்வுகளில்) எண்ணெய் வார்த்தது போல ஆயிற்று. நிகிரியின் தயாரிப்பில் சோமீதரன் என்கிற ஈழத்தமிழர் இதை இயக்கியிருந்தார். தமிழர் தலைவர் தலைமையுறையாற்றும்போது இன்றைய இளைஞர்கள் எங்கோ திசை தடுமாறிச் சென்று கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில், இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புக்குரிய குறும்படத்தை வெளிக்கொணர்ந்த இயக்குநர் சோமீரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சோமீதரன் ஒரு மிகப் பெரிய சாதனையாளர். அவரை வரலாற்று இயக்குநர் என்றே அழைக்கலாம் என்றார். அதுமட்டுமா, சமுதாயத்திலே ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை தொடங்கப்பட்டு இயக்க வரலாற்றிலே இன்றைக்கு திராவிடர் கழகம் ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறது. இன்றைக்கு இயக்க வரலாற்றிலே ஒரு முக்கிய நாள். இன்றைக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறிய அரங்கத்திலே தொடங்கினாலும், இதனுடைய வீச்சு உலகலாவியதாகத்தான் இருக்கும் என்று கூறினார்.

இந்த ஆவணப் படத்தை எடுத்து முடிப்பதற்கு இயக்குநர் சோமீதரன் பட்ட சிரமங்களை ஏற்புரையில் கூறிய போது இந்த ஆவணப்படத்தின் முக்கியத்துவமும், சிறப்பும் மேலும் கூடியது. 1981-இலே 97,000-த்திற்கும் மேற்பட்ட நூல்கள் எப்படி எரிக்கப்பட்டுச் சாம்பல் மேடாயின? என்கிற வரலாற்றுச் செய்தியை விளக்கியது இந்த ஆவணப்படம். இது காலாகாலத்திற்கும் தமிழர்களுக்கு ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கும். வேறு யாரும் செய்ய முன்வராத நிலையில் சோமீதரன் இதைச் செய்திருப்பது அவரை வரலாற்று இயக்குநர் - என்று தமிழர் தலைவர் குறிப்பிட்டதற்கு தகுதியானவராக்குகிறது.

பாவலர் அறிவுமதி தனது வாழ்த்துரையில், உதடுகளால் சொல்ல முடியாததை, இமைகளால் சொல்ல முடியும் என்று சோமீதரன் தனது ஆவணப்படத்தில் காட்டியிருக்கிறார் என்று கூறி கனத்துக் கிடந்த பார்வையாளர்களின் மனதில் இன்னமும் சுமையைக் கூட்டினார்.

தி.க. பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்ற தி.பெரியார் சாக்ரடீசு அறிமுக உரையாற்றினார். நிறைவாக ச.பிரின்ஸ் என்னாரஸ் பெரியார் நன்றி கூறினார்.

இளையதலைமுறை திரைப்பட படைப்பாளிகளுக்கு தளம் அமைத்து கொடுத்துள்ள பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, மாதம் தோறும் இரண்டாவது வெள்ளி அன்று சென்னை பெரியார் திடலில் குறும்பட திரையிடல் நிகழ்ச்சியை நடத்த உள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை