ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

2 டிசம்பர், 2008

இட்லிவடை;படித்ததில் பிடித்தது ;நிலவை சிரிக்க வைத்த இரு கிரகங்கள் என்று தான் டைட்டில் இருக்க வேண்டும்

நிலவை சிரிக்க வைத்த இரு கிரகங்கள் என்று தான் டைட்டில் இருக்க வேண்டும். ஆனால் நே‌ற்று இரவு வான‌த்தை‌ப் பா‌ர்‌த்தவ‌ர்களு‌க்கு ஒரு அபூ‌ர்வ கா‌ட்‌சி தெ‌ன்ப‌ட்டிரு‌க்கு‌ம். அதாவது ‌நிலாவை‌ப் பா‌ர்‌க்க முடியாம‌ல் க‌ண் கூசு‌ம் அள‌‌வி‌ற்கு ‌நிலா‌வி‌ன் அரு‌கி‌ல் ‌வியாழன் மற்றும் வெள்ளி கிரகங்கள் தோன்றியதுதா‌ன் அது. பார்த்தது சூரியனா ? நிலவா என்று தமிழ் மக்கள் குழம்பி போனார்கள்....

ஏழைக்கேத்த பொரியுருண்டையாக (எள்ளுருண்டை விலை அதிகம்) தினத்தந்தியில் வந்த இந்த படங்கள் இன்று காலை தான் எனக்கு கிடைத்தது.

நிலவின் ஓளியை பற்றி பேசும் முன் சூரியனின் ஒளி பற்றி...

சூரியனிலிருந்து வரும் வெண்மையான ஒளி, ஒரு குறிப்பிட்ட வண்ண ஒளி கிடையாது. பல வண்ண ஒளிகள் கலந்து கொடுக்கும் வண்ணமே இந்தப் பளிச்சிடும் வெண்மை. (சில சமயம் மஞ்சளாக தெரியும். அப்போது டாக்டரை பார்க்கவும்). இந்த ஒளிப்பட்டையை தான் ஸ்பெக்ட்ரம் என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். வெள்ளை ஒளி என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதனால் தான் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்ப வேண்டாம் என்று பெரியவர்கள் இன்றும் சொல்லுகிறார்கள்.

சின்ன கிளாசில் பக்கத்து பையனை பார்த்து காப்பி அடித்தது, நினைவுக்கு வருகிறது..

திரவம், திடவம் அல்லது வாயுவில் உள்ள மூலக்கூறுகள் [Molecules in Liquid, Solid or Gas] தம்முள் ஊடுறுவும் ஒளியை ஓரளவுச் சிதறடித்து, சிதறிய ஒளியின் அலை நீளத்தை [Wavelength] மாறும்படிச் செய்கின்றன. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering], அல்லது ராமன் விளைவு [Raman Effect] என்று பெளதிகத்தில் கூறப் படுகிறது. இவ்வளவு ராமன் வருகிறது உடனே இட்லிவடை ஹிந்து வெறியன் என்று சாயம் பூசாதீர்கள். இது விஞ்ஞானம் ;-)

நேற்று நிலவின் அருகே 2 கிரகங்கள் பிரகாசமாக தோற்றம் அளித்தன.

நிலவின் ஒருபகுதி, மனித முகத்தின் வாய் போலவும், அதற்கு மேலே தோன்றிய இரு கிரகங்களும் கண்கள் போலவும் இருந்தன. நேற்று திங்கள் ஆனால் நிலவின் அருகே தோன்றிய கிரகங்கள் வியாழன் மற்றும் வெள்ளி. இந்த இரண்டு கிரகங்களும் சூரியனை போல காட்சி அளித்த நிலவை நேற்று சிரிக்க வைத்தது. இதை தமிழ் மக்கள் கண்கள் பனிக்க, இதயம் நெகிழ, ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்கிறார்கள்.

சூரியகுடும்பம் பற்றி படித்தால் பலருக்கு அதிர்ச்சியே மிஞ்சும். இருந்தாலும் அதை பற்றி சொல்லுகிறேன்.

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை உள்கோள்கள் என்றும் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை வெளிக்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. உள்கோள்கள் தமிழ்நாட்டின் தென் பகுதியில் ( குறிப்பாக மதுரையில்) தெரியும். வெளிக்கோள்கள் வடக்கே டெல்லி பக்கம் தெரியும்.

நேற்று இரவு சந்திரனின் இடது புறம் நல்லபிரகாசமான ஒளியுடன் காணப்பட்டது, வெள்ளி (வீனஸ்) கோள் ஆகும். இது சூரியன் மறைந்த பிறகு நிலவில் இருந்து மேல் புறத்தில் தெரியும். நிலவின் உயரே வலது புறத்தில் தோன்றியது வியாழன் கோள் ஆகும். இது வெள்ளியை விட பிரகாசம் குறைவாக இருந்தது. ஆனால் மதுரை பக்கம் இது பிரகாசமாக தெரியும் என்று சென்னை பிர்லாகோள் அரங்க இயக்குனர் கூறினார். மேலும் அவர் கூறியது...

வானத்தில் தோன்றிய இந்த காட்சி அதிசயம் அல்ல. நிலவும் இரு கோள்களான வெள்ளியும் வியாழனும்தான்.

சந்திரன் பூமியை சுற்ற 291/2 நாட்கள் ஆகும். வியாழன் சூரியனை சுற்றி வர 12 வருடம் ஆகும். வெள்ளி சூரியனை சுற்றிவர 224 நாட்கள் ஆகும். மாம்பழத்துக்கு பிள்ளையராரும் முருகனும் சிவனை சுற்றிவில்லையா ? அதே போல மந்திரி பதவிக்கு சுற்றுவது என்ன தவறு. கடவுளுக்கு ஒரு நியாயம் மனிதர்களுக்கு ஒரு நியாயமா ? இப்படி கேள்வி கேட்டால் அதற்கு பெயர் தான் பகுத்தறிவு.

இவை இப்படி அருகருகே வருவது வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும். இக்காட்சி இந்த வருடம் கடந்த சில நாட்களாகவே தெரிகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டமாக இருந்ததால் நம்மால் சரியாக பார்க்க முடியாமல் இருந்தது. நேற்று வானம் தெளிவாக இருந்ததால் இந்த காட்சி கண்களுக்கு தெரிகிறது.

இவை எல்லாம் ஒரே சூரிய குடும்பம் தான். அதை பார்க்கும் நமக்கு தான் அது பிரிந்துவிட்டது, சேர்ந்துவிட்டது என்று சொல்லுகிறோம். இது ஒரு வகை illusion என்றார்.

காட்சியை சரியாக பார்க்காதவர்கள் (குறிப்பாக விஜயகாந்த், சரத்குமார், வைகோ) தினகரன், அல்லது சன் நியூஸ் பார்க்கவும்

லேபிள்கள்: , ,

2 கருத்துகள்:

Blogger Kamal கூறியது…

ரொம்ப நன்றாக இருந்தது வெங்கட்....
உள்ளம் மலர்ந்தது...உதடு சிரித்தது!!!!

2 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:21  
Blogger ராது கூறியது…

Good Photo, I have seen here at Maldives also, forget to take Picture. Thanks.

3 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:27  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு