ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

4 டிசம்பர், 2008

உள்ளூரில் நடக்கும் வன்முறையின் தலையை நசுக்க முடியாத நாம், வெளிநாட்டுப் பயங்கரவாதிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?


மத்திய நிதித்துறை அமைச்சராகவிருந்த மாண்புமிகு . சிதம்பரம் அவர்கள் இந்தியாவின் உள்துறை அமைச்சராகப்பொறுப்பேற்று இருக்கிறார். இதற்குமுன் உள்துறைஇணை அமைச்சராகவிருந்த அனுபவம் அவருக்கு உண்டு. கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் மத்தியில் அமைச்சராகவும்இருந்திருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவர்மிக முக்கியமான ஒரு துறைக்குப் பொறுப்பு ஏற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியஒன்றாகும்.

உலகில் வன்முறைகள் அதிகம் நடக்கும் 20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும்இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தஒருவர் உள்துறை அமைச்சராகப் பணி யாற்றிடப் பணிக்கப்பட்டுள்ளார். அதுவும்மக்களவைக்கு மிக விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவிருக்கும் ஒருகாலகட்டத்தில் இந்தப் பொறுப்பு அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற புரவியின்மீது சவாரி செய்தவர். அதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் நசிந்து போனதுதான் மிச்சம் எனஇடதுசாரிகளால் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். ஒரு சவால் போலஏற்றுக்கொண்டு உள்துறை அமைச்சர் என்ற முள் பதித்த சிம்மாசனத்தில்அமர்த்தப்பட்டுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் திருமதிசோனியா காந்தி ஆகியோரின் எதிர்பார்ப்பு இவரிடம் அதிகமாகவே உள்ளது.

அவரது கல்வியும், அனுபவமும் இப்பொழுது ஏற்றுக்கொண்டி ருக்கும் பொறுப்புவெற்றிகரமாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் அவரை வாழ்த்துகிறோம்.

வெளிநாடுகளைக் களமாக்கிக் கொண்டு இந்தியாவில் வன்முறைகளைத்தூண்டும் பல அமைப்புகள் இருக்கின்றன. குறிப்பாக பாகிஸ்தான் அந்தச்சக்திகளுக்கு வளர்ப்புத் தாயாக இருந்து வருகிறது என்ற இந்திய அரசுவெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியப் புலனாய்வுத்துறை இதில் தோல்வி கண்டு இருக்கிறது என்கிற உரத்தகுற்றச்சாட்டு இந்தியாவில் எழுந்துள்ளது. அதன் காரணமாக இந்திய உள்துறைஅமைச்சராகவிருந்த சிவராஜ்பாட்டீல் அமைச்சர் பதவியையே துறக்கவேண்டியஒரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது. மும்பை வன்முறை காரணமாக மகாராட்டிரமாநில முதல மைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பதவியை ராஜினாமாசெய்துள்ளனர்.

கசப்பான அனுபவங்களைக் கொண்டு, வருமுன் காக்கும் திட்டத்தோடுஅறிவியல் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் அதற்கான திட்டங்களை வகுத்துச்செயல்படவேண்டியது காலத்தின் மிகக் கட்டாயமாகும்.

இந்த வன்முறைகளை அரசியல் கண்கொண்டு பார்க்கக் கூடாது. குறிப்பாகபா... - இதனைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பம் விளையாட தகுதிபடைத்தது அல்ல. ஏனெனில், அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியநாடாளுமன்றத்திற்குள்ளேயே பயங்கரவாதிகள் ஊடுருவினர் என்பதைஅவ்வளவு சுலபமாக மறந்திட முடியாதே!

ஒரு விமானக் கடத்தலை மய்யப்படுத்தி, பயங்கரவாதிகளை விடுவித்து அவர்கள்நாட்டின் எல்லைவரை - ஒரு பாதுகாப்பு அமைச்சரே கொண்டு போய்விட்டுவந்தார் என்பது இதற்குமுன் எங்கும் எப்போதும் கேள்விப்படாத தகவலாகும். இந்த நிலையில் உள்ளவர்கள் அரசியல் ரீதியாகக் குற்றப் பத்திரிகை படித்தால்அதனை மக்கள் அலட்சியப்படுத்தவே செய்வார்கள். இத்தகு வன்முறையைஅரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதைத் தவிர்த்துஒட்டுமொத்த ஒற்றுமையுடன் எழுந்து நின்று வன்முறைகளுக்கு முகம்கொடுத்து வீழ்த்தவேண்டும் என்று நினைப்பதே சரியான பொறுப்பானஅணுகுமுறையாக இருக்க முடியும்.

இன்றைக்கு உள்நாட்டிலே தலைதூக்கி நிறுத்தும் வன்முறை மனப்பான்மைஅயல்நாட்டு வன்முறைக்குச் சற்றும் குறைந்த ஆபத்தல்ல. மக்கள் மத்தியிலேவன்முறை விதைகளை திட்டமிட்ட வகையில் தூவி சிறுபான்மையினரின்தலையைக் கொய்யும் அறுவடைகளைச் செய்துகொண்டு இருக்கிறார்களே - இந்தத் தீயை எப்படி அணைக்கப் போகிறோம்? என்பது மிக முக்கியமானதாகும்.

பெண்கள் முதற்கொண்டு இளைஞர்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளிப்பது, இராணுவக் கல்லூரிகளை ஏற்படுத்தி வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? அவற்றைக் கையாளுவது என்பதுவரை பயிற்சி கொடுத்து ஆட்களைத் தயாரித்துஅனுப்புவது; மாநாடு கூட்டியும், பொதுக்கூட்டங்களை நடத்தியும் மிகவெளிப்படையாக தம் அமைப்புகள்மூலம் தொண்டர்களுக்குத் திரிசூலங்களைகொடுத்து, சிறுபான்மை மக்களின் குடலைக் கிழிக்கச் சொல்லுவது; இப்படிவன்முறைகளில் ஈடுபடுவோர் மீது எந்தவித சட்ட ரீதியானநடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று அகில இந்தியத் தலைவர்களேஅரசைப் பார்த்து மிரட்டுவது என்கிற மிகமிக கேவலமான, அநாகரிகமான, நிர்வாணமான வன்முறைப் போக்குகள் இந்தியாவுக்குள் திமிரோடுதலையெடுத்து நிற்கிறதே. முதலில் இந்த அபாயகரமான சக்திகளுக்கு மரண அடிகொடுப்பது புதிய உள்துறை அமைச்சரின் முதல் கடமையாக இருக்கவேண்டும்.

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத ஒருவன்- வானம் ஏறி வைகுண்டத்தைக்காட்டப் போகிறானாம் என்ற பழமொழி நம் நாட்டில் உண்டு.

உள்ளூரில் நடக்கும் வன்முறையின் தலையை நசுக்க முடியாத நாம், வெளிநாட்டுப் பயங்கரவாதிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? என்றகேள்வி நியாயமாக எழத்தானே செய்யும்.

வெளிநாட்டுச் சவால்களைச் சந்திக்கும் அதே நேரத்தில் - இந்திய உள்நாட்டுவன்முறைக் கும்பலின்மீதும் முக்கியமான கண்ணிருக்க வேண்டும். அதன்மூலத்தை ஆணி வேர் வரை சென்று அழிக்க வேண்டும் என்று புதிய உள்துறைஅமைச்சரை வலியுறுத்துகிறோம்

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு