ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

5 டிசம்பர், 2008

பாகிஸ்தான் அரசால் என்னை தொடக் கூட முடியாது. நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன் என்று தாவூத்


தாவூத் இப்ராகிம் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுதந்திரமாக இருக்கிறார். நெருக்கடியின்றி, பத்திரமாக இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அவரது உறவினர்கள் சலீம் அன்சாரி உள்ளிட்டோர் கராச்சி வந்து தாவூத்தை சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது அவர்களிடம், பாகிஸ்தான் அரசால் என்னை தொடக் கூட முடியாது. நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன் என்று தாவூத் கூறியுள்ளாராம்.

மும்பையில் உள்ள தனது உறவினர்கள், நண்பர்கள், கூட்டாளிகள் ஆகியோருடன் தொடர்ந்து தாவூத் தொலைபேசித் தொடர்பை வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட, ஹவாலா மூலம் மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு பிசினஸுக்காக ரூ 120 கோடியை அனுப்பி வைத்தாராம் தாவூத்.

மும்பை - கராச்சி இடையிலான ஹவாலா பிசினஸ் எப்போதும் போல பிசியாக, தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

தாவூத்தின் நடமாட்டத்தை இந்திய உளவு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் உள்ளனர். அதேபோல அமெரிக்க உளவுத்துறையினரும் தாவூத் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில்தான் தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதை இந்தியா அடித்துக் கூறி வருகிறது.

அதேசமயம், மும்பையில் உள்ள தாவூத் கூட்டாளிகள் மீது மகாராஷ்டிர அரசு ஏன் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்பது தெரியவில்லை.

மும்பையிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் உள்ள தாவூத் இப்ராகிமின் நிழலுலக செயல்பாடுகள் இன்னும் அப்படியேதான் உள்ளன. அவற்றை முடக்கவோ, ஒடுக்கவோ மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரே ஆச்சரியத்துடன் கேட்கிறார்.

தாவூத்தின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவர் முகம்மது அலி. இவர் தொடர்ந்து தாவூத்தின் கட்டளைப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவரது வேலையே கடத்தல்தான். அந்தக் கடத்தலைத் தடுக்க மகாராஷ்டிர காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார் அந்த அதிகாரி.

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு