ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

8 டிசம்பர், 2008

ஷக்தி சிதம்பரம் மோசம்: ஸ்னிக்தா;அவரும்தான் மிக மோசமாக நடந்து கொண்டார். அசிங்கமாகப் பேசினார்

Sniktha

விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் தந்தால்தான் ஷூட்டிங்கில் பங்கேற்பேன் என ஸ்னிக்தா மிரட்டியதாக இயக்குனர் ஷக்தி சிதம்பரம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்னிக்தாவோ, இயக்குநர் நடவடிக்கை மிக மோசம் என்று புகார் தெரிவித்துள்ளார்.

அஞ்சாதே படத்தில் கத்தாழ கண்ணால... பாடலுக்கு ஆடியவர் ஸ்னிக்தா.

லாரன்ஸ் ஜோடியாக 'ராஜாதி ராஜா' படத்தில் நடித்து வருகிறார். ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். இந்நிலையில் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் தராததால் 3 மணி நேரம் ஏர்போர்ட்டில் அமர்ந்து கொண்டு, இயக்குனரை மிரட்டியதாக அப் படக்குழு மற்றும் இயக்குநர் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 'ராஜாதி ராஜா' பட இயக்குனர் தரப்பில் பத்தரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இதுவரை ஒரு படம் கூட நாயகியாக நடிக்காதவர் ஸ்னிக்தா. ராஜாதி ராஜாதான அவருக்கு முதல் படம். இப்படத்தில் ஸ்னிக்தா தவிர மேலும் 5 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஆனாலும் ஸ்னிக்தா கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சம்பளமும் அதிகம் கொடுத்துள்ளோம்.

இருந்தும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆரம்பம் முதலே பிரச்னை செய்து வந்தார். இந்தப் படத்தில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இருக்கும் என தெரிந்துதான் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்போது கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்கிறார். இன்னொரு தமிழ்ப்படம் நந்தலாலா படத்திலும் அவர் நடித்து வருகிறார். அப்படத்துக்காக ஒரு ஓட்டலில் அவர் தங்குகிறார். என் படத்தில் நடிக்கவும் அதே ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்தேன். ஆனால் பைவ் ஸ்டார் ஓட்டல்தான் வேண்டும் என்கிறார்.

நேற்று முன்தினம் சென்னையில் நடந்த ராஜாதிராஜா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மபும்பை செல்லவேண்டியிருந்தது ஸ்னிக்தா. ஏர்போர்ட்டுக்குச் சென்றவர் திடீரென இயக்குனர் ஷக்தி சிதம்பரத்துக்கு போன் செய்தார்.

வழக்கமாக எனக்கு பிசினஸ் கிளாசில்தானே டிக்கெட் எடுப்பீர்கள். ஏன் இம்முறை எடுக்கவில்லை, என்றார். இந்த முறை பிசினஸ் கிளாசில் டிக்கெட் கிடைக்கவில்லை. அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள், என்றேன். ஆனால் ஸ்னிக்தா ஒப்புக்கொள்ளவில்லை. பிசினஸ் கிளாஸ் டிக்கெட் தந்தால்தான் மும்பை செல்வேன் எனக்கூறி, ஏர்போர்ட்டில் அமர்ந்து கொண்டார். மூன்று மணிநேரம் அங்கிருந்து நகரவில்லை.

பலமுறை போன் செய்து டார்ச்சர் செய்தார். பிசினஸ் கிளாஸ் டிக்கெட் தராவிட்டால் இனி ஷூட்டிங்குக்கு வரமாட்டேன், என மிரட்டினார். இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் செய்ய உள்ளோம், என்று கூறியுள்ளார்

லேபிள்கள்: , , , , ,

1 கருத்துகள்:

Blogger குப்பன்_யாஹூ கூறியது…

இது ஒரு நல்ல முன்னேற்றம். அன்றைய நாட்களில் நடிகைகள் வெளியில் சொல்லாமல் காசுக்காக தங்கம் மானத்தை, உடம்பை இயக்குனர்கள், நடிகர்களுக்கு விட்டு கொடுத்து கொண்டார்கள்.

இன்றைய இளைய தலைமுறை நடிகைகள் இப்படி பகிரங்கமாக சொல்வதை நாம் வரவேற்க வேண்டும்.

இத்தகைய இயக்குனர்கள், நடிகர்கள் திரைப்படத்தை நாம் புறக்கணிக்க வேண்டும்.

குப்பன்_யாஹூ

9 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:03  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு