ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

5 டிசம்பர், 2008

கருணாநிதி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:


இந்த பிரச்சனையில் இந்தியா உறுதியான நடவடிக்கைமேற்கொள்ளும் என்று உறுதியளித்த பிரதமர் தனது தூதராகபிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகவும் கூறினார்.

அவர் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் போர்நிறுத்தத்தை வலியுறுத்துவார் என்றார்.

வழக்கம் போல அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள்இக்குழுவில் இடம் பெறவில்லை.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைசந்தித்துப் பேசினார். அவரிடமும் இலங்கை போர் நிறுத்தத்தை வற்புறுத்தினார்.

பின்னர் கருணாநிதியை மின்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, புதியஉள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட .சிதம்பரம் ஆகியோரும் சந்தித்தனர்.

போர் நிறுத்தமே முக்கியம்-கருணாநிதி:

முன்னதாக டெல்லி வந்த கருணாநிதி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடுஇல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் வைக்கப்படப் போகும் முக்கியமானகோரிக்கை எது?

கருணாநிதி: முக்கியமான கோரிக்கை போர் நிறுத்தம்தான்.

கேள்வி: கடந்த 3 மாதமாக அந்த கோரிக்கையைத் தானே வைத்துக்கொண்டிருக்கிறோம்?

கருணாநிதி: அதற்காக அந்தக் கோரிக்கையை மாற்றிக் கொள்ள முடியுமா?

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக அவசரம் கருதி மத்திய அரசுக்குதிமுக அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடியாதா?

கருணாநிதி: திமுக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறவேண்டும், மத்திய அரசு கவிழ வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா? திமுகமத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று விட்டால், இலங்கைதமிழர்களின் பிரச்சனை தீர்ந்து விடுமா?

கேள்வி: மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் உங்களுக்குதிருப்தியாக உள்ளதா?

கருணாநிதி: இது தலைவலி மருந்து மாதிரி. மொத்தமாக போர் நிறுத்தம் ஏற்பட்டு, அங்கே தமிழர்கள் அமைதியாக வாழ்ந்தால்தான் எங்கள் திருப்திக்கு அர்த்தம்இருக்க முடியும்.

கேள்வி: இலங்கை தமிழர் போன்ற முக்கிய பிரச்சனையில் தமிழக கட்சிகளில்அதிமுக, மதிமுக, தேமுதிக, சிபிஎம் போன்ற கட்சிகள் பிரதமரை சந்திக்கஉங்களுடன் வரவில்லையே?

கருணாநிதி: அதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். எந்த அளவிற்குதாழ்ந்து போய் வேண்டுகோள் விடுக்க முடியுமோ அந்த அளவிற்குவேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் அதை ஏற்பதாக இல்லை.

கேள்வி: பிரதமரிடம் வெள்ள நிவாரண உதவி கேட்பீர்களா?

கருணாநிதி: நிச்சயமாக கேட்கவிருக்கிறேன். பிரதமரிடமும், அமைச்சர்.சிதம்பரத்திடமும் தமிழக வெள்ள நிவாரணத்திற்காக உதவி நிதி கோரிக்கைவைக்கவுள்ளேன். எவ்வளவு என்பதை கேட்ட பிறகு சொல்கிறேன் என்றார்.

லேபிள்கள்: , , , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு