பாமகவின் கடந்த கால 'தாவல்கள்' வரலாறு!


1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது. 

2001 ...

2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக.

ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக.

காரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு 
ராஜ்யசபா சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ்.

அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து திமுக கூட்டணிக்கு வந்தார்.

2004...

2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.

இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார்.

2006...

2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.

ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.

2008 ...

2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.

2009...

2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

தேர்தலுக்கு பின் மீண்டும் வரும்-காங் நம்பிக்கை:

கூட்டணியை விட்டு பாமக போய்விட்டாலும் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால் மீண்டும் பாமக தங்களிடம் வந்துவிடும் என்று காங்கிரஸ் நிச்சயமாக நம்புகிறது.

இதனால் தான் இன்று பாமக கூட்டணியைவிட்டு வெளியேறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பாமகவை கூட்டணியில் நீடிக்க வைக்க எவ்வளவோ முயன்றோம். இப்போதும் கூட அவர்களுடன் கூட்டணியையே விரும்புகிறோம். அந்தக் கட்சியுடன் நல்லுறவு நீடிக்கும் என்றார்

கருத்துகள்

Kevin Matthews இவ்வாறு கூறியுள்ளார்…
குரங்கு பய

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்