கோடை வெப்பத்தை தணிக்க

கோடை காலம் தொடங்கி விட்டது. அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு வெயில் கடுமையாகக் கொளுத்தித் தீர்க்கும்.

ஆண்டுதோறும் கோடை காலம் வந்தாலும், நாம் கோடையை எதிர்கொள்ளும் வழிமுறைகளை சில நேரங்களில் கடைபிடிக்கத் தவறி விடுகிறோம்.

இதனால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

கோடையை எதிர்கொள்ள இதோ சில எளிய யோசனைகள்:

தண்ணீர் தேவையை விட அதிகமாக அருந்துங்கள். உடலில இருக்கும் தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறும் என்பதால், தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் சோர்வைத் தடுத்து புத்துணர்வை அளிக்கும்.

கண்டிப்பாக மாலையிலோ அல்லது இரவிலோ ஒருமுறை குளிர்ந்த நீரில் குளியுங்கள். இதனால் தோலில் ஏற்படும் வெயில் பாதிப்பு நீங்கும். 

பகல் நேரத்தில் வெளியே சுற்றித் திரியும் பணியில் இருப்பவர்கள், அடிக்கடி ஜூஸ், பழச்சாறு போன்ற குளிர்பானங்களை தேவைக்கேற்ப பருகவும். இதனால் உடல் சோர்வு நீங்கும்.

இளநீர் கண்டிப்பாக அருந்துங்கள். இது உடல் சூட்டைத் தவிர்த்து சிறுநீரை எளிதாக பிரிய வழிவகுக்கும்.

முடிந்தவரை எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளை இரவில் உண்ணவும். இது ஜீரணத்தை விரைவுபடுத்தி, உடல் சோர்வு மற்றும் அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கச் செய்யும். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். உடல் சூட்டை அது தணிப்பதுடன், மலச்சிக்கல் வராமலும் இருக்க ஏதுவாகும்.

வெயிலில் வெளியே செல்ல நேரிட்டால், கண்டிப்பாக தொப்பி அணிந்து செல்லவும். தலையில் வெயில் தாக்குதல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிக தண்ணீர், தண்ணீர்ச் சத்துடைய பழங்க்ளை அதிகளவில் சாப்பிடுங்கள். கோடையைத் தவிர்த்து நலமுடன் இருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை