வழக்குரைஞர்களில் பலர் வரம்பை மீறலாமா?


சென்னை உயர்நீதிமன் றத்தில் கடந்த சில வாரங்களில் பல்வேறு விரும் பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டதன் விளை வாக, வழக்கறிஞர்களின் நீதி மன்றப் புறக்கணிப்பு தொடர் கிறது.

உச்சநீதிமன்றத்தால் நிய மிக்கப்பட்ட (வெளி மாநில) ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலை மையில் விசாரணை நடை பெற்று - புயல் வேகத்தில் அவர் சென்னை வந்து 2 நாள்கள் விசாரித்து, உச்சநீதிமன்றத் தில் 5 ஆம் தேதி அறிக்கை யைத் தாக்கல் செய்து அது 6.3.2009 அன்று உச்சநீதிமன் றத்திற்குத் தரப்பட்டுள்ளது. அவ் வறிக்கை இணைய தளத்திலும், செய்தி ஏடுகளிலும் வெளி வந்துள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. சென்னை உயர்நீதிமன் றத்தில் சுப்பிரமணியசாமி வந்து, சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தன்னை ஒரு கட்சி ஆடுபவராக இணைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக வந்த போதிலிருந்து தொடங்கி யுள்ளது என்பது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

மூல காரணங்கள்

2. சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி பொறுப்பு வகித்தவர் மற்றும் சில நீதிபதிகளின் மெத்தனம் அல்லது மென்மையான போக்கே இதற்கு மூல காரண மாகவே - அந்நிலை தொடர்வ தற்குக் காரணமாகவே அமைந் துள்ளது.

3. வழக்குரைஞர்களில் பலர் - சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டவர்கள்போல் நடந்துள் ளனர் என்பது வேதனைக் குரியது. தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற நினைப்புடன் சிலர் செயல்பட் டுள்ள விரும்பத்தகாத நிலை இச்சிக்கல் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது!

வரம்பை மீறலாமா?

4. காவல்துறையினர் தங் கள் கடமையை ஆற்றுவதற்குச் சென்றிருந்தாலும் அவர்கள் தங்கள் வரம்பை மீறி அதீதமாக ஏதோ வெறிபிடித்தவர்களைப் போல, அப்பாவிப் பொதுமக் களை, நீதிமன்ற அறைகளில் இருந்த வழக்குரைஞர்களை - பெண் வழக்குரைஞர்கள் வரை எவரையும் விட்டு வைக்காமல் வெறித்தனமான, கண்மூடித்தன மான தாக்குதலில் ஈடுபட்டு, மிகப்பெரிய சேதத்தினை உரு வாக்கியுள்ளனர். தனியார் சொத்துக்கள் (கார்கள்) நீதிமன்ற உடைமைகள் இவைகளுக்கும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

5. சென்னை - காவல்துறை ஆணையர், டி.ஜி.பி. போன்ற தலைமை அதிகாரிகள்பற்றி குற்றம் சுமத்தி, அவர்கள்தான் இத்தகைய நிலைக்குக் காரணம் என்று சொல்லத்தக்க வகையில் ஏதும் சரியான காரணம் இல்லை!

சாட்சியங்கள்

நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா அவர்களிடம் தரப்பட்ட வாக்கு மூலங்கள், வீடியோ காட்சிகள், போலீஸ் வீடியோ காட்சிகள், அவர் நேரில் பாதிப்பு அடைந்த பகுதிகளைப் பார்த்தது - சேதா ரங்கள்பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்ட நிகழ்வுக் கார ணங்களும், சூழ்நிலைகளும், தீயணைப்பு வண்டியும், அதி காரிகளும் வந்த பிறகும் அவர் களைத் தடுத்து செயல்படாமல் செய்வித்து, எரிந்து சாம்பலாகும் வரை அருகிலேயே நின்று தீயணைப்புத் துறையினர் வேடிக்கை பார்க்கவேண்டிய நிர்ப்பந்தச் சூழ்நிலை உருவாக் கப்பட்டது.

இவைபற்றி நீதிபதி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வறிக்கையை - பரிந் துரையை நாங்கள் ஏற்கமாட் டோம்; நிராகரிக்கிறோம் என்று அறிவித்து நீதிமன்றப் புறக் கணிப்பைத் தொடருவோம் என்று பேட்டிகளில் கூறுகின் றனர் வழக்கறிஞர்கள்.

இதில் பொதுமக்கள், வழக் காடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, வேதனைக்கு உள்ளாகும் நிலை யில் உள்ளனர்!

இடர்ப்பாடுகள்

நீதிமன்றங்களுக்குக் காவல் துறையினர், கடும் குற்றவாளி களை ஜாமீனுக்கு அழைத்து வந்து, விசாரணையை நீதி மன்றம் நடத்த இயலாத நிலை இருப்பதால், காவல்துறையி னரே - நீதிமன்றத்திற்குக் கொண்டு வராமலேயே - சொந்தப் பொறுப்பில் வெளியே விடும் நிலை ஏற்பட்டுள்ளது!

திணறுகிறது சிறைச்சாலை!

சிறைச்சாலையோ அதன் கொள்ளளவுக்குமேல், குற்ற வாளிகளின் எண்ணிக்கையால் திணறிக் கொண்டுள்ள நிலை வேறு!

சில கோர்ட்டுகளில் நீதிபதி கள் அமர்ந்து அவர்களே ஜாமீ னில் விடும் நிலையும் உள்ளது!

தாக்கப்பட்டவர்களில் அடி பட்ட அப்பாவி வழக்குரைஞர் களுக்கு ஏற்பட்ட கொடுமையை நினைத்தால் வேதனை பல மடங்கு பெருகியுள்ளது!

என்றாலும், வழக்குரைஞர் கள், நீதிமன்றங்களுக்கு உதவிட வேண்டிய கடமையாளர்கள் - சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதை நன்கு உணர்ந் தவர்கள்.

இருதரப்பிலும் தவறுகள்

அதுபோலவே, காவல்துறை என்பது நம் அனைவருக்கும் பாதுகாப்புத் தரும் துறை; அவர் கள் நமக்கென்ன? என்ற அலட்சிய மனப்பான்மையைப் பெற்றால் அது பொது அமைதிக் கும், பொதுமக்களுக்கும், பொது நலத்திற்கும் மிகவும் கேடாய் முடியும்!

தவறு செய்பவர்கள் சிலர் இரு தரப்பிலும் உண்டு.

சில நேரங்களில் தங்களது எல்லை மீறிய நிகழ்வுகள் காவல்துறையில் உண்டு.

முதலமைச்சர் கருத்து

நேற்று தமது இல்லத் திரு மணத்தின்போது, நமது முதல மைச்சர் அவர்கள் மிகுந்த கவ லையோடு ஒன்றை வேண்டு கோளாக விடுத்தார்கள்.

தம்மைப் பொறுத்தவரை வழக்குரைஞர்களும், காவல் துறையினரும் இரண்டு கண் களைப் போன்றவர்கள், தான் யார் பக்கத்தில் என்றால், நீதி யின் பக்கம்தான் நிற்பேன் என்று உருக்கமாகத் தெரிவித் தார்கள்.

இந்த நல்லெண்ண வேண்டு கோளினை இருசாராரும் புரிந்துகொண்டு தத்தம் நிலைப் பாட்டில் தகுந்த மாற்றம் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கவேண் டும் என்பதே நம்மைப் போன்ற பொதுவானவர்களின் விழைவு ஆகும்!

வேண்டாம் மனக்கசப்பு!

தற்போதுள்ள கசப்பு இரு சாராரிடமும் ஏராளம் உள்ளது.

இருசாராரும் ஒருவரை மற்றவர் எப்போதும் நிரந்தரமாக வெறுப்புடன், மனக்கசப்புடன் பார்க்கவே முடியாது; கூடாது!

ஒரு நல்லெண்ணச் சூழல் உருவாக்கப்படல் வேண்டும். பொதுமக்களுக்கு ஒரு இடர்ப் பாடு இல்லாத நிலையை உருவாக்க முன்வரவேண்டும்; நடந்தவைகளை இனி நடக்கக் கூடாதவைகளாக ஆக்கிட வேண்டும்.

பொதுமக்களின் மரியா தையை - நம்பிக்கையை இரு தரப்பும் பெறும் நிலை நாளும் வளர்ந்து, ஒருவருக்கொருவர் பகைவர்கள் அல்லர்; சமுதாய நலன் காக்கும் இரண்டு பிரிவு கள் என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் உணர்வுக்கு விரைந்து வரவேண்டும் என்பதை எண்ணித் துணியவேண்டும்.

அரசியல் நுழைவா?

இதில் அரசியல் நுழைந் துள்ளது என்ற அச்சத்தைப் போக்கவேண்டிய பொறுப்பு வழக்கறிஞர் சகோதரர்களுக்கு உண்டு.

நீதிமன்றப் புறக்கணிப்பை உடனடியாகக் கைவிட்டு வேறு சட்ட ரீதியான வழியில் பரிகாரம் தேடிட புதிய தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கோகலே அவர்களின் அறிவுரைக்கேற்ப நடப்பதும் அவசர அவசியமாகும்!

சமூக நீதியால் விளைந்த பயிர்கள் இரு சாராரிலும் உண்டு; அவை பாழ்பட்டுவிடக் கூடாதே என்ற பொதுக் கவலையால் தான் நாம் இதனை எழுதுகி றோம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை