ஜார்க்கண்ட்டில் லாலுவுக்கு காங். 'அல்வா'!

பீகாரில் லாலு காட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி விட்டது. இதையடுத்து அங்கு அதிக தொகுதிகளில் போட்டியவுள்ளது.

பீகாரில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றைப் பிரித்துக் கொள்வதில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கும், பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிககும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதை காங்கிரஸ் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. பிரச்சினை தீர்ந்து சுமூகமாக பிரிவினை ஏற்படும். நமக்கும் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என காங்கிரஸ் காத்திருந்தது.

ஆனால் லாலு பெரிய ஆப்பாக வைத்து விட்டார் காங்கிரஸுக்கு. பாஸ்வானுக்கு 12, நமக்கு 25 என அறிவித்த லாலு, காங்கிரஸுக்கு வெறும் 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளார்.

இதனால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்தது. லாலு பிரசாத் யாதவ் நம்பி்க்கைத் துரோகம் செய்து விட்டார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கண்டனம் தெரிவி்த்தார்.

இந்த நிலையில் பீகாரில் லாலு கட்சியுடன் இனி கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறது. குறைந்தது 20 தொகுதிகளில் அது போட்டியிடும் எனத் தெரிகிறது.

கடந்த முறை அங்கு 4 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட்டில் லாலுவுக்கு காங். 'அல்வா'!

பீகாரில் தங்களுக்கு 3 சீட்களை ஒதுக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்த லாலு பிரசாத் யாதவுக்கு, ஜார்க்கண்ட்டில் பெரிய அல்வாவைக் கொடுத்துள்ளது காங்கிரஸ்.

லாலுவுக்குப் பதிலடி தரும் வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 தொகுதிகளை மட்டுமே லாலு கட்சிக்கு வழங்கியுள்ள காங்கிரஸ், ராம் விலாஸ் பாஸ்வானுக்கு ஒரு தொகுதியையும் தரவில்லை.

ஜார்க்கண்ட்டில் மொத்தம் 14 தொகுதிகள் உள்ளன. இவற்றைப் பங்கிடுவது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்களுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தியது.

இறுதியில், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், மோர்ச்சா 5 தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. லாலு கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது. பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.

இதனால் அந்த கட்சி தனித்து போட்டியிடப்போடவதாக அறிவித்துள்ளது.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்திய அரசியல் படு கேவலமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதெல்லாம் எங்கு போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.

- புலம்பல் பொன்னுசாமி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்