ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

22 மார்ச், 2009

மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்


மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்


மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன் என்றும், நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றும் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. அருந்ததியர்களுக்காக ஜனார்த்தனன் கமிஷன் அமைக்கப்பட்டது. 

அதே போல் பிராமணர்களுக்கும் ஒரு கமிஷன் அமைத்து ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்னும் சில நாட்களில் மனு கொடுக்க உள்ளோம். பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முதல்  அமைச்சர் கருணாநிதியால் தான் முடியும்.  எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்பவரை ஆதரியுங்கள் என்று ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன். 
 
மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு போட்டியிட சீட் தந்தது ஜெயலலிததான். ஆனால் என்னை வெற்றி பெற செய்தது மயிலாப்பூர் தொகுதி மக்கள். தொகுதி மக்களுக்கு என்னென்ன கடமைகள் செய்யவேண்டுமோ அதை செய்து வருகிறேன். தொகுதி மக்களிடம் எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. 
 
அ.தி.மு.க.வில் ஒரு எம்.எல்.ஏ.வை சரியாக நடத்த தெரியவில்லை. எனக்கும் கட்சிக்கும் ஏற்பட்ட விரிசல் பிளவாகி விட்டது. இனி அதை சரி செய்ய முடியாது. போலியாக நடித்து கட்சியில் தொடரவும் எனக்கு விருப்பம் இல்லை. 
 
நான் எந்த முடிவை எடுத்தாலும் என் தொகுதி மக்கள் முன்னிலையில்தான் எடுப்பேன். சித்திரையில் முத்திரை பதிப்போம் என்பார்கள். வருகிற ஏப்ரல் 14 ந்தேதி சித்திரை முதல்நாளில் நான் முத்திரை பதிப்பேன். 
 
மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன். நான் ராஜினாமா செய்கிறேன் என்ற விபரத்தையும் மக்களுக்கு தெரிவிப்பேன். நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றார்.

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு