ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

22 மார்ச், 2009

நான் தனிமையில் இருக்கிறேன். எனவே வாடகைக்கு தங்குமிடம் தேடும் பெண்கள் என்னுடன் தங்கலாம்.


ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இப்போது வீட்டு வாடகை நியூயார்க்,லண்டன் வாடகையை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு போய் விட்டது.

அப்படியே கொடுக்கத் தயாராக இருந்தாலும் வீடு கிடைப்பதில்லை.

குறிப்பாக வேலை பார்க்கும் பெண்கள், தனியாக வாழும் பெண்கள், வெளியூர் பெண்களுக்குத்தான் வீடு கிடைப்பது பெரும் குதிரைக் கொம்பாகியுள்ளது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் ஜொள்ளும், லொள்ளுமாக கிளம்பி விட்டனர். எப்படி..?

உங்களுக்கு நாங்கள் வீடு அல்லது அறை தருகிறோம். நீங்கள் எங்களுக்கு வாடகை தரத் தேவையில்லை. உங்களை மட்டும் தந்தால் போதும் என்று கேட்டு விளம்பரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் ஜொள்ளு பார்ட்டிகள்.

பல்வேறு இணையதளங்களில் ஆளுக்குப் பாதி வாடகைக்கு என்ற பெயரில் வரும் விளம்பரங்களும் கூட இதே டைப்பிலானவைதான். அதாவது ஆளுக்கு பாதி வாடகையைத் தருவோம் என்று கூறி இளம் பெண்களை இழுக்கும் ஆண்கள், ஆள் கிடைத்தவுடன், வாடகையே தர வேண்டும், உங்களைத் தந்தால் மட்டும் போதும் என்று கூறுகிறார்களாம்.

இதுபோன்ற விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என சிட்னியில் சிலர் குரல் எழுப்பினர். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் விளம்பர வாசகங்கள் உள்ளதாக இணையதளங்கள் கூறுகின்றனவாம்.

ஆபர்ன் நகரைச் சேர்ந்த ஆதிக் என்ற வாலிபர் கொடுத்துள்ள விளம்பரம் இப்படிப் போகிறது... என்னுடன் அறையை ஷேர் செய்து கொள்ள ஒரு பெண் தேவை. உடனே அணுகவும். 

அதே நபர் சன்டே டெலிகிராப் இதழில் கொடுத்துள்ள விளம்பரத்தில், சிங்கிள் பெட்ரூம் அறையில் என்னுடன் வசிக்க பெண் தேவை. வாடகையை நான் பார்த்துக் கொள்கிறேன்.

நான் தனிமையில் இருக்கிறேன். எனவே வாடகைக்கு தங்குமிடம் தேடும் பெண்கள் என்னுடன் தங்கலாம். வாடகைக்குப் பதில் அவர்களுடனான உறவை கேட்கிறேன் என்றும் அந்த நபர் விலாவாரியாக விளக்கியுள்ளார்.

இதெப்படி இருக்கு

லேபிள்கள்: , , ,

3 கருத்துகள்:

Blogger Joe கூறியது…

ரொம்ப கேவலமா இருக்கு.

நான் கூட தனியா தான் ரூம்ல இருக்கேன், நான் எவ்ளவு டீசன்ட்-ஆ நடந்துக்கிறேன்? ஹீ ஹீ!

23 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 10:38  
Blogger மோனி கூறியது…

மேட்டரும் நல்லா இருக்கு
போட்டோவும் நல்லா இருக்கு
ஹி ஹி ஹி

ஆமா இப்ப என்ன
பெரும்பாலும் எல்லாருமே
கமென்ட் பண்ணுனா
டைப் அடிச்சி முடிச்சவுடன்
word verification
கேக்க ஆரம்பிச்சிட்டீங்க ?

23 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 10:38  
Anonymous nTamil கூறியது…

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

23 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 12:41  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு