அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்

மலையிலிருந்து கீழே ‌விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான். பாட்டு முடியும்போது நாயகிக்கு நினைவு திரும்புகிறது. யெஸ், ஷீ இஸ் ஆல் ரைட்.

அடடா என்ன அழகு படத்தில் வரும் இந்தக் காட்சி ஒரு சோறு பதம். காட்சிகள் இருக்கட்டும், கதை?

ஒரே கல்லூ‌ரியில் படிக்கும் நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். இந்நிலையில் ஒரு கும்பல் நாயகியை கடத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும்போது மலையிலிருந்து விழுந்து விடுகிறார் நாயகி. இதன் பிறகு வருவது நாம் மேலே பார்த்த வித்தியாசமான இதுவரை திரையில் பார்த்திராத அந்த பாட்டு சிகிச்சை. நாயகனின் தந்தை, மகன் நாயகியை காதலிப்பதை அறிந்து நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார்.

இப்போது வில்லன் என்ட்‌ர். நாயகியின் அப்பா ஒரு மத்திய அமைச்சர். காதலுக்கு அவர் சிவப்பு விளக்கு காட்டுகிறார். அப்புறமென்ன... அடிதடி இறுதியில் சுபம்.





ஆகாஷ் ஜெய் படத்தின் நாயகன். அவரது படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. நாயகி நிக்கோல் காஸ்ட்யூமை கம்மிப் பண்ணினாலே சமாளித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார். ஆகாஷின் அப்பாவாக சரத்பாபு. நல்ல மனம்படைத்த மனநல மருத்துவராக ஜமாய்க்கிறார். அம்மாவாக வரும் ரேகாவுக்கு வேலையே இல்லை.

ஆசிஷ்வித்யார்த்தி வழக்கமான ஹிஸ்டீ‌ரியா வில்லன். ரவுடிகளுடன் ஒண்டிக்கு ஒண்டி மோதும்போது மத்திய அமைச்சரா இல்லை மத்திய சென்னை ரவுடியா என திகைக்க வைக்கிறார். அரத பழசு கதையிலும் அழகாக காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது கிச்சாவின் கேமரா. மொத்தம் ஏழு பாடல்கள். சில கேட்கிற மாதி‌ரி இருப்பது ஆச்ச‌ரியம்.

கருணாஸின் கடி காமெடி சில நேரம் சி‌ரிக்கவும் வைக்கிறது. நிக்கோலை மானபங்கப்படுத்த பாதுகாப்பு வீரரே அவர் மீது பாய்வதெல்லாம் காதுல பூ..

படம் முடிந்த பிறகு பெருமூச்சுதான் வருகிறது, அடடா என்ன அவஸ்தை.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
படம் பார்கலாமா?
சரவணகுமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
Font கலர் மாத்துங்க சார்... பேக்ரவுண்டும் டார்க்கா இருக்கு
வெங்கட்ராமன் இவ்வாறு கூறியுள்ளார்…
Font கலர மாத்துங்க.
பொதுவாகவே Font கலர மாத்தாம இருப்பது நல்லது. கொழப்புறேனா?, டெம்ப்ளேட்டில் இருக்கும் கலர மாத்த வேண்டாம்ன்னு சொன்னேன்.

WORD VERIFICATION ம் Comment page ல் இருந்து தூக்கி விடவும்.

இதெல்லாமே, நம்ம பதிவுலக மக்கள் கடை பிடிக்கிற பொதுவான விஷயம். வற்றவங்க படிக்கறதுக்கும், கமெண்ட் போடவும் சுலபமாக இருக்கும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை