காமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்

வசனங்களுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. வசனங்களாலயே, தியேட்டரை விட்டு ஓடிய படங்களும் உண்டு. அதேப்போல், வழி மாறிய வசனங்களும் உண்டு. சீரியஸாக வெளிவந்து, பின்னால் நகைச்சுவையாக பேசப்படும்.

சில வசனங்கள் நன்றாக ரசிக்கப்பட்டு, பிரபலமடைந்து, பலரால் பல இடங்களில் பேசப்பட்டு, பின்பு சிரிப்பிற்குரியதாக ஆக்கப்படும். சில வசனங்கள் சரியாக கையாளப்படாததால், சுட சுட கிண்டலுக்குள்ளாக்கப்படும்.

அப்படி என் நினைவுக்கு வந்த சில வசனங்கள். இதெல்லாம் அந்தந்த படங்களில் சீரியஸ் வசனங்கள். இப்படி காமெடி செய்வார்கள் என்று வசனமெழுதும்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.


பாச மலர் - என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தக் கண்ணீரை மட்டும் தான் நான் பார்க்கணும்.

உணர்ச்சிமயமான வசனம். கால ஓட்டத்தில், இன்று இதை இயல்பாக சொன்னாலும் சிரிக்கத்தான் செய்வார்கள்.

முதல் மரியாதை - ஐயா! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

சொன்னவருக்கு நல்ல ஸ்டைல். சிலர், எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு சாதாரணமாக ஆரம்பித்தாலும் முடிக்கும்போது அவர் ஸ்டைலில் முடித்து விடுவார்கள்.

நாயகன் - நீங்க நல்லவரா? கெட்டவரா?

மணிரத்னம் பட வசனங்களில் ஒரு தனித்தன்மை உண்டு. அதனாலயே, அதிகம் கிண்டலுக்கு உள்ளாக்கப்படும். சின்னி ஜெயந்த், விவேக் இதை படங்களில் காமெடி செய்தார்கள்.

அஞ்சலி - அஞ்சலி ஏந்துமா

இந்த வசனத்தால் அந்த சோக காட்சியை பல ஷோக்களில் காமெடி ஆக்கினார்கள்.

தேவர் மகன் - ஒரு பாட்டு பட்றி

யாரையாவது பாட்டு பாட சொல்லும்போது, கிண்டலாக இப்படித்தான் சொல்லுவார்கள். கவுண்டமணி ஏதோவொரு படத்தில் நக்கல் செய்திருப்பார்.

நாட்டமை - நாட்டாமை! தீர்ப்பை மாத்தி சொல்லு

கல்லூரி மாணவர்களால் பல இடங்களில் ரீ-மிக்ஸ் செய்யப்படும் வசனம். தியேட்டரில் படம் போடலையா? ஆபரேட்டர், படத்தை போடு. கரண்டு போச்சா? லைட்டை போடு. இப்படி.

ரெட் - அது...

ஹி... ஹி... இந்த ரெண்டு எழுத்து சாதாரணமான வார்த்தை, இவ்வளவு ஸ்பெஷல் ட்ரிட்மெண்ட் கொடுக்கும்ன்னு யாரும் நினைச்சு இருக்க மாட்டாங்க.

ரமணா - தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை, மன்னிப்பு

விவேக்கால் பல படங்களில் கிண்டல் செய்யப்பட்ட வசனம். மக்களும் அவரவர் வசதிக்கேற்ப வார்த்தைகளை போட்டு பிரபலமான வசனம்.

அந்நியன் - அஞ்சு கோடி பேரு அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடுனா தப்பா?

சுஜாதாவால் சுவையாக கருத்து சொல்லப்பட்ட வசனம். படம் வெளிவந்த பிறகு டரியல் செய்யப்பட்டது.

சந்திரமுகி - என்ன கொடுமை சரவணன்...

பஞ்ச் டயலாக்கும் இல்லை. உணர்ச்சிமயமா எழுதப்பட்டு பேசப்பட்ட வசனமும் இல்லை. பின்ன, எப்படி இவ்ளோ பிரபலம்? எல்லா புகழும் பிரபுக்கே! பிளஸ் வெங்கட் பிரபு.


இந்த வசனங்களை இப்ப படங்களில் கேட்கும்போது காட்சியை மீறி சிரிக்க வைத்து விடுகிறது. 

உங்களுக்கு தோணுறதையும் சொல்லுங்க..

 

நன்றி்: 'குமரன் குடில் வலைப்பதிவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை