ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

5 ஆகஸ்ட், 2009

என் முதல் விமான பயணம்என் முதல் விமான பயணம்

அரை டவுசர் போட்ட காலத்தில்

வானத்தில் ஏரோப்பிளான் சத்தம் கேட்டால்

அன்னாந்து கழுத்து வலிக்க வலிக்க விமானம்

மறைவும் வரை பார்த்து கொண்டே இருப்பேன்..

என்றாவது ஒரு நாள் அதன் அருகே சென்று

பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு

அண்மையில் பயணம் செய்யும்

வாய்பாகவே வசப்பட்டது...!

என் தொழில் தொடர்பான நிறுவனம்

42 பேர் கொண்ட குழுவை சுற்றுலா

அழைத்து சென்றார்கள்

என்னைவிட என் பொண்ணுக்கும், பையனுக்கும்தான்

ரொம்ப சந்தோசம்....!

என் 10 வயது மகள் அப்பா நீங்கள் இந்த

வயதில்.......!தான் பிளைட்டில் ஏறுகிறீர்கள்

நான் 10வயதில பிளைட்டில் பறக்கப் போகிறேன் என

நக்கல் அடித்தார்..ஒரு மாதம் முன்பிருந் தே

இன்னும் 30 நாள்,29நாள்தான் இருக்கு என

நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தனர்...

டெல்லி,ஜெய்பூர் செல்வதாக திட்டம்..

சேலத்தில் இருந்து ஏ.சி.டீலக்ஸ் பஸ்ஸில் கிளம்பி

அதிகாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம்

விமான நிலையத்தில் சென்று இறங்கினோம்.

விமான நிலையத்தில் ஒரு காப்பி குடிக்கலாம் என

நானும் என் பையனும் சென்றோம்...விலையை கேட்டவுடன்

அடி வயிறு கலங்கி விட்ட்து.......! ஒரு காப்பி 78 ரூபாயாம்...?

அம்மாடியோவ்...எங்கள் ஊரில் இந்த காசில் 20 காபி குடிக்கலாம்....!

ஜெட் ஏர்வேஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்...பணிப்பெண்கள்

புன்முகத்துடன் வரவேற்றனர்...பின்..(இண்டர்சிட்டி எக்ஸ்பிரசில்

வருவது போல) குளிர் பானம்,மோர்,வந்த்து பின் சிற்றுண்டி

வெஜ்ஜா,நான்வெஜ்ஜா,சவுத்தா,நார்த்தா,என்று கேட்டு

கொடுத்தார்கள்,நானூம் என் குழந்தைகளும் நான்வெஜ் வாங்கினோம்

இது வரை பார்திராத உணவு......!நார்த் நான்வெஜ் சகிக்கவில்லை என

பையன் சொன்னான்..!மற்றவை நன்றாக இருந்த்து..!

மேகத்தூடே பற்ந்தபோது ரொம்ப சிலிர்பாக இருந்த்து

வேறு உலகில் இருப்பதாய் உணர்ந்தேன்......

முதல் அனுபவம் இனிப்பாய் இருந்த்து...!

பிடித்திருந்தால் உங்கள் கருத்தை சொல்லூங்கள்

டெல்லி,ஜெப்பூர், அனுபவம் அடுத்த பதிவில்...!

லேபிள்கள்: , ,

10 கருத்துகள்:

Blogger ஆ.ஞானசேகரன் கூறியது…

நல்ல அனுபவம் வாழ்த்துகள் நண்பரே

5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:47  
Blogger coolzkarthi கூறியது…

ஆஹா மாம்ஸ்,கலக்கலான பயணம் தான் போங்க....அந்த மார்க்கெட் பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே....

5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:35  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

வருகைக்கு நன்றி ஞானசேகரன் அண்ணா
உங்களைப் போன்ற அனுபவம் மிக்க
நண்பரின் வருகை என்னைப்போன்ற
புதியவர்களுக்கு ஓர் புத்துண்ர்வு தரும்
டானிக்..

5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:35  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

வாங்க கார்த்தி மாப்பிள்ளை
டெல்லி,ஜெய்ப்பூர் அனுபவங்களை
அடுத்த பதிவில் போடுறேன்...!

5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:42  
Blogger thenammailakshmanan கூறியது…

தமிழ்வெங்கட் உங்க விமானப் பயணம் என்னோட அனுபவம் போலவே இருக்கு

5 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:40  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்கம் நன்றி

6 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:49  
Blogger henry J கூறியது…

unga blog romba nalla iruku

(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:56  
Blogger Bogy.in கூறியது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 1:38  
Blogger www.bogy.in கூறியது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:48  
Blogger LK கூறியது…

முதல் அனுபவம் எப்பவும் அருமைதான்.. சேலத்துல குடிக்கற காப்பி சுவை இங்க இல்ல தலைவரே

25 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:07  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு