ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

3 ஏப்ரல், 2009

அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா?

அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா?

நமது நாட்டில் மதத் தலைவர்களும், அறிவியல் படித்தவர்களும் அறிவியலையும் மதத்தையும் ஒன்றுபடுத்திப் பார்க்கின்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அறிவியல் பற்றிய செய்திகள் புராணங்களில் இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் மதவாதிகள் அடிக்கடி முனைப்புக் காட்டுகின்றனர். விண்கலம்,-செயற்கைக்கோள், குளோனிங் பற்றிய செய்தி-கள் புராணங்களில் உள்ளன என்பதற்குப் பலமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மதமும் அறிவியலுமே உண்மையினைக் கண்டறிவதற்கான நெறி-முறைகள் எனும் விவாதத்தினை உருவாக்கி வருகின்றனர். இந்தக் கூற்றே உண்மைக்குப் புறம்பானது என்பதே உண்மை நிலை.

மதத்தலைவர்களும் சாமியார்களும் தங்களது கூற்றுக்கு வலிமை சேர்க்க அறிவியல் கற்ற தங்களது சீடர்களைப் பயன்படுத்தத் தயங்குவது இல்லை. அத்தகைய வேடதாரிகள், சிந்தனைக்குத் தடை விதிக்கும் மெய் அறிவியலை (Meta Physics) ஆதரிக்க இயற்பியலாளரை (Physicists) மேற்கோள் காட்டவும், ஒரு தொப்பி கீழே விழுவதற்கு விளக்கமாக நியூட்டனையே தவறாகப் பயன்படுத்தவும் தவறுவது இல்லை. ஏன் இந்த நிலை? விஞ்ஞான உலகிலிருந்து வரும் ஓர் ஆதரவுச் சொல்கூட மதத்திற்கு மாபெரும் நம்பகத்தன்-மையை வழங்கும் என்பதுதான் அடிப்படைக் காரணம். விஞ்ஞானம் தனக்குத்தானே வழங்கிக் கொள்ளும் வலிமையினை, மதமானது வெறித்தன்மையோடு விரும்புகிறது. எனவேதான் போலி விஞ்ஞானிகள் விஞ்ஞானத்-தையும் மதத்தையும் ஒரே நிலையில் வைக்க விரும்புகின்றனர்.

இப்படிப்பட்ட நெறிகெட்ட நிலை, கபடத்தன்மை நிறைந்த அவர்கள் வாழ்க்கையில் ஓர் அமைதியைத் தருவதாகவும் அறிவு நாணயமற்ற தம் நிலைப்பாடு பற்றிய சுய குற்ற உணர்வினை உதறித் தள்ளுவதற்கும் உறுதுணை புரிவதாகக் கருதுகின்றனர். இப்படி உண்மைக்குப் புறம்பான வலிந்து முனைப்படுத்தப்படும் முயற்சிகளால் அறிவியலும் மதமும் ஒன்றாகிவிட முடியுமா? அது நடக்காது; நடத்தவும் முடியாது. அறிவியலும் மதமும் தள்ளியே நிற்கும் மாறுபட்ட துருவங்கள். ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை.

அறிவியலுக்கும் மதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் என்ன?

இயற்கை விதிகளை கடந்து நிற்பது மற்றும் அவற்றை நம்புவதுதான் மதத்தின் அடிப்-படை. இயற்கையைக் கடந்த சக்திகள் அடிக்கடி இம்மண்ணிற்கு அவதாரப் புருஷராக - மீட்பராக வந்து மக்களிடம் உறவாடிய-தாக அனைத்து மதங்களும் உறவுக் கதைகளை கற்பித்துக் கொள்கின்றன. ஆனால் இந்த நிலைக்கு முற்றிலும் மாறாக அறிவியல், இயற்கையினைக் கடந்து நிற்கும் நிலைகளை மறுக்கிறது. உலகின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இயற்கை விதிகளின் கீழ் விளக்கம் அளிக்க முடியும் என்பதே அறிவியலின் அடிப்படை.

ஒவ்வொரு மதத்திலும், சாமியார்கள் தங்களுக்கு அருள் சக்தி இருப்பதாகக் கூறிக்கொண்டு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான - தமக்குத் தாமே நியமனம் பெற்ற இடைத்தரகர்களாக இருக்கின்றனர். ஆனால், அறிவியலோ சாமியார்களை, மதகுருமார்-களை கேள்வி கேட்பதற்கு அப்பாற்பட்ட எந்த ஒரு அருள் நிலையினை உடை-யோராக ஏற்றுக்கொள்வதில்லை. மந்திரமில்லா மதம் சாத்தியப்படவில்லை. மந்திரங்கள் அறிவியல் விதிகளுக்குள் அடங்-காது. அறிவுக்குள் அடங்காத மந்திரங்களே மதங்களின் சாராம்சம். பளபளப்பாகத் தெரியும் மதத்திலிருந்து மந்திரத்தை நீக்கிவிட்டால், அதன் சாயம் வெளுத்துவிடும். இந்த மந்திரங்கள் வெறும் தந்திரங்களே. செப்படி வித்தைக் கைத்திறனே தந்திரம். அற்புதங்கள் நிகழ்த்துவதாகப் பறைசாற்றும் சாமியார்கள் மந்திர மகிமை பெற்றவர்கள் அல்லர்; அவர்கள் ஒரு மூன்றாம் நிலை தந்திரவாதிகளே. தங்களிடம் இருப்பதாகக் கூறும் அருள் சக்தியால் அற்புதங்கள் நடப்பதாகவும், தங்களைப் பின்பற்று-பவர்களை நம்பவைக்கின்றனர். ஒவ்வொரு அற்புதமும் சாதாரண தந்திரமாக இருக்கும் அல்லது போலிப் பிரதிபலிப்பாகத் தென்படும்.

அனைத்து மதங்களும் குறிப்பிட்ட சிலருக்கு சொல்-லப்-பட்ட வெளிப்பாடாக (Revelations) அமைந்தவையே. மோசஸ், முகம்மது, கிறிஸ்து, மகாவீரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் அத்தகைய வெளிப்பாட்டிற்கு ஆட்பட்ட-வர்கள். அத்தகைய வெளிப்பாட்டிற்கு துளி அளவுகூட அறிவியலில் இடமில்லை. அறிவியல் முறை-களைப் பயன்படுத்தி உண்மை நிலையினைக் கண்டறிவதே அறிவியல் அடிப்படையாகும். இந்த அறிவியல் முறை (Method of Science) நான்கு நிலைகளை உள்ளடக்கியது.

1. பார்த்தவை, படித்தவை பற்றி ஆய்ந்தறிந்து வினாத்தொடுத்தல். (Questioning Based On Observation & Analysis)

2. கோட்பாட்டை வடிவமைத்தல் (Making a Hypothesis)

3. பரிசோதனை செய்துபார்த்தல். (Doing experiments)

4. விளக்கம் கூறி, விடை காணுதல். (Arriving at the Answer)

அறிவியல் முன்னிறுத்தலை முன்வைக்-கிறது. அந்த முன்னிறுத்தல் யாராலும் எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் ஒத்த நிலைகளில் உறுதிசெய்யப்படக் கூடியது; ஒத்துக்கொள்ளக் கூடியது. வேதியியல் மூலங்களின் இருப்பையும் கிரகங்களின் இருப்பையும் உயிரினங்களின் வாழ்வையும் உறுதி செய்கிறது. அறிவியலின் இந்த முன்னிறுத்தல் தன்மையினால்தான் மனிதனின் நிலாப்பயணம் சாத்தியப்பட்டது. மதங்களும் முன்னிறுத்தலை மேற்-கொண்டன. ஆனால் அம்முன்னிறுத்தல்கள் காலவெள்ளத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் கரைந்துவிட்டன. மதத்தின் ஆட்டம் பாட்டமான ஜோதிடம் அறிவியலின் முன்பு நகைப்பிற்கு இடமாகிவிட்டது. சமுதாயத்தில் நிலவும் சிந்தனையற்ற போக்கு, மூடப்பழக்க வழக்கங்கள் ஒருவித பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் ஜோதிடம், காலம் தள்ளிக்-கொண்டு வருகிறது. மதம் - மாறாத தன்மை கொண்டது. நிறுவப்-பட்ட நிலையிலே தொடரக்கூடியது. ஆனால், அறிவியல் தொடர்ந்து பரிண-மிக்கும் தன்மை கொண்டது. வலுவான வழிமுறைகள் மூலம் கிடைக்கப்பெற்ற புத்தறிவு மற்றும் செய்திகளைச் சேர்க்க வல்லது. நடைமுறையில் உள்ள பலவற்றை ஆராய்ச்சிப்பூர்வமாக மறுத்தே அறிவியல் முன்நடந்து வந்துள்ளது. நியூட்டனின் அறிவியலின் முன்னேற்றம்தான் அய்ன்ஸ்டீ-னின் அறிவியல். நியூட்டனின் அறிவியல் காணமுடியாத பலவற்றை அய்ன்ஸ்டீனின் அறிவியல் கண்டு, முன்னிருந்த அறிவியல் கோட்பாட்டைத் தகர்த்தது. எனவே அறிவியல் என்பது ஒவ்வொரு செங்கல்லாக வைத்து படிப்படியாக எழுப்பப்பட்ட கட்டடம் போன்றது. எழுப்பப்பட்ட அறிவியல் கோட்பாட்டை உண்மை நிலை அடிப்படையில் சரிசெய்து கொள்ளும் தன்மை வாய்ந்தது. இப்படிப்பட்ட தனக்குத்-தானே சரிசெய்துகொள்ளும் தன்மை மதத்திற்குக் கிடையாது.

மதக்கருத்துகள் நெகிழ்ச்சியில்லாமல் விறைப்பான தன்மை வாய்ந்தவை. மேலும் ஓரிருவர் கருத்தினைப் பறைசாற்றுவதாகவே உள்ளன. அறிவியலில் நிலையான கருத்துகள் என்பன கிடையாது. அறிவியல் கருத்துகள் அறிவார்ந்தோர் விவாதித்து நிறுவப்-பட்டவை. அக்கருத்துகள் மீண்டும் விளக்கப்-படலாம்; விவாதிக்கப்படலாம். முடிவில் ஏற்றுக் கொள்ளப்படலாம். தவறு என்று சுட்டிக் காட்டப்படலாம்; புறந்தள்ளப் படலாம்.

மதத்தலைவர்களும் சாமியார்களும் உலகில் நிலவும் ஒவ்வொரு வினாவிற்கும் விடை இருக்கிறதோ இல்லையோ - வெட்கம் இல்லாமல் விடை சொல்ல முயலுகின்றனர். விடை-களை பொய்மையில் உருவாக்கி வழங்கிட அவர்கள் தயங்குவதுமில்லை. ஆனால், விஞ்ஞானிகளோ விடை தெரியாத விஷயங்களைப் பற்றி விளக்கம் தர - மறுக்க, தயங்குவதில்லை. விடைகாண இயலாத பொருள் பற்றி பொய்யான விளக்கங்கள் அளித்து சமாளிப்பது அறிவியலில் இல்லை.

மதம் தன்னை பின்பற்றுபவர்களை கருத்து அடிப்படையில் முழுவதும் மண்டியிடச் செய்துவிடும். இக்கட்டான கேள்விகள், ஆய்ந்து பார்க்கும் பக்குவம் இவைகளைக் கிள்ளி எறிந்துவிடும் அணுகுமுறை கொண்-டது மதம். மீறி அவை வளர்ந்தால் மத பீடங்கள் சரிந்துவிடும் என்று எச்சரிக்கை விட்டு பயஉணர்ச்சியை உருவாக்கும் தன்மை கொண்டது மதம். ஆனால், அறிவியலில் கேள்வி கேட்பது, ஆராயும் பாங்குகளே அடிப்படை, அறிவியல் முறைகள் இப்படிப்-பட்ட வழிமுறைகளைக் கொண்டுதான் அறிவினை வளர்த்து வருகின்றன.

குறுகிய வட்டாரப்போக்கு மதத்தில் குறிப்பிடத்தக்கது. உலகலாவிய தன்மை வாய்ந்தது அறிவியல். இந்து அறிவியல், இஸ்லாமிய அறிவியல், வெள்ளை இன அறிவியல், கருப்பு இன அறிவியல், சீன அறிவியல், ஆப்பிரிக்க அறிவியல் எனக் கேள்விப்பட்டது உண்டா? விஞ்ஞானிகள் ஒரே அறிவியல் வழிமுறைகள், நடைமுறை-கள், வெளிப்படுத்துதல் மற்றும் வெளியிடு-தலைக் கடைபிடிக்கின்றன. விஞ்ஞானிகள் உலகளாவிய சமுதாயம் சார்ந்தவர் ஆவார்-கள். மதம் மனிதனைப் பிரிக்கின்றபொழுது அறிவியல் இணைத்துப் பார்த்து இன்புறுகிறது.

மதம் உணர்ச்சிகளின் பிடியில் உயிர் வாழ்கிறது. ஆனால் அறிவியலோ பகுத்தறி-வின் அடிப்படையில் மனித வாழ்விற்கு ஆக்கம் கூட்டி வருகிறது. மனிதர்களை வேறுபடுத்திப் பார்ப்பது மதம். அறிவியலோ, ஒன்றாக்கிப் பார்க்கும் இயல்புடையது. ஆண்டாண்டுகாலமாக பெண்களை வேறுபடுத்தி, அவர்களை துன்புறுத்திப் பார்ப்பது மதத்திற்குப் பழக்க-மானது. ஆனால் அறிவியலோ ஆண் - பெண் உயிரியல் வேறுபாட்டை வெறும் செய்தியாக வெளிப்படுத்தும். மனித உறவுகளில் வேறு-படுத்தும் நிலையினை உருவாக்காது. எனவே மத நம்பிக்கை இல்லாதாரிடம் நிலவும் மனிதநேயம் ஆழமானது; மேன்மையானது. மனிதன் உருவாக்கியது, தடைகளைத் தகர்க்கவல்ல தன்மை வாய்ந்தது.

மதம் பின்னோக்கும் இயல்புடையது. ஆனால், அறிவியல் முன்னோக்கும் தன்மை-வாய்ந்தது. பன்னெடுங்காலத்திற்கு முன்பு ஒரு நபர் கூறிய கருத்திற்கு மதம் அளிக்கும் முக்கியத்துவத்தை, பன்னெடுங்காலமாக விரிவடைந்து இன்று நிலைகொண்டிருக்கும் அறிவிற்கு அளிப்பதில்லை. அறிவியல் பல ஆண்டுகளாக பரிணமித்து வரும் அறிவிற்கு ஆக்கமளிக்கும் பாங்குடையது.

மதம் - ஆதிக்க வசதிக்கேற்ற கருத்தாக்கம்

எந்தவொரு மதத்திலும் பெண்களை தனிநபராக அவர்தம் உரிமைகளைக் காக்கும் விதத்தில் நடைமுறை இல்லை. சடங்குகள், மதங்கள் போற்றி வரும் வேண்டிய, வேண்டாப் பழக்கங்கள் ஆண்டவனால் உருவாக்கப்-பட்டவை எனக்கூறி. பெண்களை அடிமை-களாக வைத்திருக்கும் பொருட்டு ஆடவர் தங்களுக்கு வதியாக கருத்தாக்கங்களை உருவாக்கிக்கொண்டனர். இந்துமத (அ)தர்மங்-களுக்கு சட்டரீதியான வலிமையினை உருவாக்கிட்ட மனு, பெண்களை மனித உயிராகவே கருதவில்லை. திருமணம் நடை-பெறும் வரை தந்தையின் சொத்தாகவும், விதவையாகும் வரை கணவனின் சொத்தா-கவும் அதற்குப்பிறகு மகனுடைய சொத்தா-கவும், போகப் பொருளாகவும் பெண்கள் கருதப்படுகின்ற நிலையினை மனு உருவாக்-கினார். இந்துமத மகளிர், இப்படிப்பட்ட நிலைகளை ஊமைகளாய் இருந்து ஏற்றுக்-கொள்ளத்தான் வேண்டுமா? எழுச்சிகொண்டு போராடக்கூடாதா?

உண்மையில் மனிதன்தான் கடவுளைப் படைத்தான். தான் விரும்பும் பண்புகளை நடைமுறை வசதிக்காக மாற்றி கடவுள் மீது இந்தப் பண்புகளைத் திணித்துவிட்டான். தான் செய்ய நினைக்கும் - செய்து வரும் தவறுகளை கடவுளிடமும் இருப்பதாக ஏற்படுத்தி தன் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க முனைந்து-விட்டான். கிருஷ்ணக் கடவுளின் காதல் களியாட்டங்களை உருவாக்கி தனது ஒழுக்க-மற்ற செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறான். போதைப்பொருள், மது (ஒயின்), மாது, செல்வம் ஆகியவற்றில் கடவுள் சிவனே, மோகம் கொண்ட நிகழ்வுகள் கண்டிக்கத் தக்கவை. மாறாக கடவுளின் பண்புகளைப் பார்த்து நடப்பதாக, தனக்கு வசதியான செயல்-களை உருவாக்கிக் கொள்கிறான். எந்தக் கடவுளச்சியும் இப்படி பண்பாக்கம் செய்யப்பட்டிருக்கின்றா? ராமனின் சொல்லை அப்படியே ஏற்று நடந்த சீதையினை பெண்மை உயர்வின் கருத்துச் சுருக்கம் எனக் கருதும் நிலை, பெண்ணடிமையினை நிலை நிறுத்தும் போக்கே. இப்படிப்பட்ட கருத்தாக்-கங்கள் ஆதிக்க வசதிக்கேற்ப மதத்தின் பெயரால் வார்த்து எடுக்கப்படுகின்றன!

அறிவியல் - முன்னோக்குப் பாதைப்பயணம்

மத மவுடீகம் நிறைந்த மனித சமுதாயத்தில் மகளிர் விடுதலையே, குழந்தைகளின் வளர்ச்சியை மாட்சிமைப்படுத்தும் கருவிகள். அறிவியல் கருத்துகள் மூலம் உலகை மாற்றும் முகவர்கள் மகளிரே. மகளிருக்கு கல்வி புகட்டுவது அவர்தம் விடுதலைக்கு மட்டுமின்றி வருங்கால சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பயன்படும்.

சுரண்டப்பட்டுவரும் மகளிர் சமுதாயத்-தினரை குற்றேவல்புரியும் வேலையிலிருந்து விடுவிப்பதோடு, பல்வேறு வகையில் அதிகார உரிமைபெற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியே பயன்பட்டு வருகிறது. டி.என்.ஏ. விரல்-பதிவு தொழில்நுட்பத்தின் மூலம் திருமணம் ஆகாமல் தாய்மைக்குத் தள்ளப்-பட்ட மகளிருக்கு உரிமையும், பிறக்கின்ற குழந்தைக்கு தந்தை யார் என்பது பற்றியும் அறியமுடிகிறது. இந்நாட்டில் ஆண் குழந்தை-கள்-தான் விரும்பப்படுகின்றன. பெண் குழந்தை-கள் வெறுக்கப்படுகின்றன. பெண் குழந்தை-களைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் பெண் குழந்தைப் பிறப்பிற்குப் பொறுப்பு எனக் கருதப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படு-கின்றனர். பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிருணயிக்கும் உயிரணு பெண்ணின் சினை முட்டையில் (டீஎரஅ) இல்லை. ஆண் விந்துதான் அந்த உயிர் அணுவை நிருணயிக்கிறது. இந்த அறிவியல் உண்மையினை மகளிரும் பிறரும் அறிந்து-கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் தடுக்கப்படும்.

அரசியலும் மதமும் - பயன்பாட்டிற்கு ஆபத்தான கலப்பு

மதத்தையும் அரசியலையும் கலந்து கடைபிடிக்கும் நடைமுறைப்போக்கு இந்தியா-வில் அதிகரித்து வருகிறது. நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியாத பிரிவினையை அத்தகைய போக்கு ஏற்படுத்தி விடும். ஜாதி சார்ந்த அரசியலால், மதம் சார்ந்த அரசியலால் மக்களின் உண்மையான பிரச்சினைகள் மறைக்கப்பட்டு - மறக்கப்பட்டு வருகின்றன. இந்த அபாயகரப்போக்கு கட்டுப்படுத்தப்-படுவதோடு மட்டுமல்லாமல் களையப்படவும் வேண்டும்.

மதம் ஜாதியைக் கொண்டு மக்களைப் பிரித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் செயலையும், மக்களைச் சுரண்டுவதையும் அரசியல்வாதிகள் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகின்றனர்.

அரசியல்வாதிகள் கையில் செயல்படும் கருவியாக மட்டும் மதம் பயன்படுத்தப்-படவில்லை. கல்வி வளாகங்களிலும் மதம், ஜாதி உணர்வுகள் நிலைகொள்ளும் ஆபத்தான சூழல்கள் உருவாகிவருகின்றன. இப்படிப்பட்ட சமுதாயச் சூழலில் 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் நல்ல நிருவாகத்தையல்ல - நல்ல நிருவாகம் போன்ற தோற்றத்தையாவது காணமுடியுமா? மதத்-தினைப் பயன்படுத்தும் போக்கினை எதிர்த்துக் குரல் எழுப்பாமல் இருக்க முடியுமா? அரசியல்வாதிகள் கையில் மத-ஆயுதம் இருக்கும்பொழுது அதைவிட வலிமையான ஆயுதம் நம்மிடம் இருப்பதை மறந்து-விடக்கூடாது. ஆம், ஆட்சிக்கு வருவோரை தேர்ந்தெடுக்க நாம் பயன்படுத்தும் வாக்கு மிக வலிமையான கருவி. நம்மிடமுள்ள வலிமையான கருவியினைப் பயன்படுத்தும் பணியில் அனைவரும் எழுவோம்! ஆழ்ந்து தூக்கத்தில் இருப்போரை தட்டி எழுப்பு-வோம்; 

லேபிள்கள்: , , ,

1 கருத்துகள்:

Blogger கோவி.கண்ணன் கூறியது…

அருமையாக எழுதி இருக்கிறீர்கள் !

கலக்கல் !

//மதத்தலைவர்களும் சாமியார்களும் உலகில் நிலவும் ஒவ்வொரு வினாவிற்கும் விடை இருக்கிறதோ இல்லையோ - வெட்கம் இல்லாமல் விடை சொல்ல முயலுகின்றனர். //
:) அதையெல்லாம் படித்தால் நன்றாக சிரிக்கலாம் !

3 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 12:00  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு