ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

3 மே, 2009

என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!

நேற்று மாலை என் 10 வயது மகளிடம் கண்ணு ஏதாவது ஜோக் சொல்லு என்று கேட்டேன் 
என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!
சேர்மேன் சேர்ல உட்காரலாம்...
வாட்ச்மேன் வாட்ச்லே உட்கார முடியுமா..?
அண்ணன் பொண்டாட்டி அண்ணி..
தம்பி பொண்டாட்டி தண்ணியா..?
விக்கெட் கீப்பர் விக்கெட்டை எடுக்கலாம்..
கேட் கீப்பர் கேட்டை எடுக்க முடியுமா..?
போர்ல தண்ணி அடிச்சா ந்ல்ல பேரு..
“பார்லே”தண்ணி அடிச்சா அக்க போரு
‘வோடா “ போன்ல பேசலாம் ...
” வோடாதா “ ஓட்டை போன்ல பேச முடியுமா..?
உலகிலே பெரிய கடை எது ?
  சாக்கடை
உலகிலே பெரிய ஜாம் எது?  
  டிராபிக் ஜாம்....!
உலகிலே பெரிய ஷிப் எது?
  பிரண்ஷிப்
என்ன சார் ஜோக் நல்லா இருந்துச்சா..?

லேபிள்கள்: , ,

13 கருத்துகள்:

Blogger கார்த்திகைப் பாண்டியன் கூறியது…

அப்பாவ மாதிரியே.. பாருங்க.. எவ்வளவு அருமையான கடி ஜோக்ஸ்..:-)

4 மே, 2009 ’அன்று’ முற்பகல் 11:32  
Anonymous Senthil கூறியது…

நகைச்சுவை தினத்தை உங்க பொண்ணோட கொண்டாடியிருகீங்க!!

4 மே, 2009 ’அன்று’ முற்பகல் 11:48  
Blogger லோகு கூறியது…

கூடிய சீக்கிரம் அவங்களும் பிளாக் எழுத வந்துருவாங்க போல..

5 மே, 2009 ’அன்று’ முற்பகல் 9:24  
Blogger துளசி கோபால் கூறியது…

கொஞ்சம் பழைய ஜோக்ஸ்தான்.

ஆனாப் பரவாயில்லை. சின்னப்பொண்ணை ஊக்குவிக்கலாம். என்ன கொறைஞ்சுறப்போகுது.

நல்லா இருக்குன்னு சொன்னேன்னு சொல்லுங்க

(மகளுக்குத் தமிழ் படிக்கத்தெரியுமா?)

5 மே, 2009 ’அன்று’ முற்பகல் 10:03  
Blogger ஆதவா கூறியது…

உங்க பொண்ணுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸ் வளரும்னு நினைக்கிறேன்!!! அப்படியே வலைப்பக்கமும் இழுத்துவிடுங்க...

ஜோக்ஸ் நன்று!!!

5 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 11:03  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

கார்திகை பாண்டியன் அண்ணே.ந்க்கலு../வணக்கண்ணே..

21 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:09  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

வாங்க செந்தில்.நகைசுவை இல்லன்னா
வாழ்கை போரடிச்சிடாதா..வருகைக்கு நன்றி

21 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:12  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

லோகு அண்ணா nilavenkat.blogspot.com
னு பிளாக் ஆரம்பிச்சாச்சு

21 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:15  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

துளசி அண்ணா பாப்பா நல்லா தமிழ்

படிகும் கன்னிதீவு கதை..

21 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:19  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

வருகைக்கு நன்றி ஆதவன் விரைவில்
வந்துடுவங்க..

21 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:21  
Blogger வைகறை நிலா கூறியது…

வாசிக்கின்ற அனைவரையும் சிரிக்க வைக்கின்ற வகையில் அழகாய் இருக்கிறது..

16 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 8:13  
Blogger goma கூறியது…

கடின்னா கடி சூப்பர் கடி..

ஹ்யூமரஸ் பொண்ணு

8 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 5:34  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

நன்றி goma

8 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 5:43  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு