ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

5 அக்டோபர், 2008

செவ்வாயில் நீர்

செவ்வாய்த் தளத்திலே

செம்மண்ணுக் கடியிலே

கண்ணுக்குத் தெரியும் வைரங்கள்

வெண்ணிறப் பனிக்கட்டிகள் !

"புனித பசுத்தளம்" என்னும்

பனித்தளம் மீது

·பீனிக்ஸ் முக்காலி

ஆசனம் யுள்ளது !

கோடான கோடி ஆண்டுக்கு முன்

ஓடிய ஆற்று வெள்ளத்தின்

நாடித் துடிப்புகள் !

பனிக்கட்டி உறைந்த

நீரென்று

நிரூபித்துக் காட்டியது

தளவுளவி !

உயிர் நுண்ணணுக்களின்

மூலச் செல்லின் சந்ததிகள்

ஆழ்பனிக் கடியிலே

வீழ்ந்து கொண்டு உறங்குதா

என்று காண்பது அடுத்த

விண்வெளிப் பயணம் !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு