ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

15 ஏப்ரல், 2009

இழுக்கிற குதிரையாக இருந்தால் வெற்றிமீது வெற்றி வந்து சேரும்!

இழுக்கிற குதிரையாக இருந்தால் வெற்றிமீது வெற்றி வந்து சேரும்!

2000ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள்முதல் நாள் கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள வள்ளுவரின் சிலை திறப்பு விழா! ஆம், என்னுடைய நீண்ட நாள் கனவை சிற்பி பத்மசிறீ கணபதி ஸ்தபதி அவர்களின் குழு வினரைக் கொண்டு நிறை வேற்றி மகிழ்ந்த நாள் - பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களும் கலந்து கொண்டார்.

அப்போது 2001 ஆம் ஆண்டு தேர்தலில் காங் கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி சேருமா, சேராதா என்று தெரியாத நிலையில் அந்த விழாவில் கலந்து கொண்ட மூப்பனார் அவர்கள் எனக்கு ஒரு புத்தகத் தைப் பரிசாக அளித்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் - You can win - உம்மால் வெல்ல முடியும் - என்பதாகும். விழாவிலே நான் பேசும்போது - அந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பற்றி பேசினேன்.

அதாவது, மூப்பனார் அவர்கள் இந்தப்பந்தலுக்கு வந்ததும் என்னி டத்திலே ஒரு புத்தகத் தைக் கொடுத்தார். புத்த கத்தின் தலைப்பு உம்மால் வெல்ல முடியும். என்ன அர்த்தத்தில் கொடுத்தாரோ எனக்குத் தெரியாது. அது பலித் திடுவதற்கு ஆவன நான் செய்வேன். அந்த நூலினை வழங்கியவரின் மனதிலே என்ன இருக் கிறது என்பது எனக்குப் புரிகிறது. சுற்றுச் சார்பு சரியில்லை என்ற ஒன் றைத் தவிர அவருடைய உள்ளம் என்பால் ஈர்க் கப்பட்ட - இன்று நேற் றல்ல பல ஆண்டுக் கால மாக உள்ள உள்ளம் என் பதை நான் மிக நன்றாக அறிவேன் என்று குறிப்பிட்டேன்.

அதன் பின்னர் பல முறை அந்தப் புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம். கருத் துகளின் சுரங்கம் அந்தப் புத்தகம் என்று சொன்னால் மிகையாகாது.

அந்தப் புத்தகத்தை மீண்டும் படிக்கும் வாய்ப்புஅண்மையில் கிடைத்தது. அதன் கார ணமாக இன்றைய கடி தத்தில் அந்தப் புத்தகத் திலிருந்து எடுத்த சில பகுதிகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒவ்வொரு இடத்திற் கும் - அது வீடாக இருந் தாலும் - நிறுவனமாக இருந்தாலும் - அல்லது ஒரு நாடாக இருந்தா லும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. சில சமயங் களில், நீங்கள் ஒரு கடைக் குச் செல்லும்போது, அங்கே விற்பனையாளர் பண்பட்டவராகவும், ஏன் கண்காணிப்பாள ரும், மேலாளரும், முத லாளியும் கூட பண்பட்ட வர்களாக இருப்பதை நீங் கள் கவனித்திருக்கலாம். அதே சமயம், நீங்கள் இன்னொரு கடைக்குச் செல்லும்போது, அங்கே யுள்ள எல்லோருமே ஆணவத்துடனும், மரி யாதையின்றியும் நடந்து கொள்வதைப் பார்க்கி றீர்கள். நீங்கள் ஒரு வீட் டிற்குச் செல்லும்போது, அங்கே குழந்தைகளும், பெற்றோர்களும் ஒழுங் காகவும், மரியாதையாக வும் விட்டுக்கொடுக்கும் பண்பு உடையவர்களாக இருப்பதைப் பார்க்கிறீர் கள். அதேசமயம், இன் னொரு வீட்டில் ஒவ் வொருவரும் கீரியும் பாம் புமாகச் சண்டை போட் டுக் கொள்வதைப் பார்க் கிறீர்கள். (பக்கம் 10-11)

இந்த வரிகளுக்கு நான் விளக்கம் எழுதத் தேவை யில்லை என்று கருது கிறேன். உடன்பிறப்பே, உனக்குப் புரிந்திருக்கும்.

*****

நீங்கள் வெற்றி பெற்றவர்களோடு சேர்ந்தால், நீங்களும் ஒரு வெற்றி வீரர் ஆவீர்கள். சிந்தனையாளர்களோடு சேர்ந்தால் நீங்களும் சிந்தனையாளர் ஆவீர் கள். கொடுப்பவர்க ளோடு சேர்ந்தால், நீங் களும் கொடுப்பவர் களாக ஆவீர்கள். குற்றம் குறை சொல்பவர்க ளோடு சேர்ந்தீர்கள் என் றால், நீங்களும் குற்றம் குறை சொல்லிக் கொண்டு உட்கார்ந்து விடுவீர்கள்.

யாராவது வாழ்க்கை யில் வெற்றி பெற்றால், அப்போதெல்லாம் சின்ன புத்திக்காரர்கள் அவர்களிடம் குறை களைக் கண்டு அவர் களின் தன்னம்பிக்கை யைக் குலைக்க முயற்சிப் பார்கள். இப்படிப்பட்ட அற்பப் புத்திக்காரர் களை எதிர்க்க நினைக் காமல், விலகிச் சென்றீர் களானால் நீங்கள் ஜெயித் தவர்கள் ஆவீர்கள். ஒருக் காலும் இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணமு டையவர்கள் உங்களைக் கால்வாரிவிட வாய்ப்பு கொடுக்காதீர்கள். ஒரு மனிதனின் குணத்தை அவன் யாருடன் சேர்ந்து இருக்கிறான் என்பதை வைத்து மட்டுமல்லாமல், அவன் யார் யாருடன் சேர்வதைத் தவிர்க்கி றான் என்பதையும் வைத்தே முடிவெடுக்க முடியும் என்பதை நினை வில் வைத்துக் கொள் ளுங்கள் -(பக்கம் 42-43)

உடன்பிறப்பே, இந்த வரிகளுக்கான விளக்கத் தையும் நான் எழுதாம லேயே நீ புரிந்து கொள் வாய் என்று நம்புகிறேன்!

*****

ஒரு குறிக்கோளை அடைவதற்காக நமக் குள் கொழுந்துவிட்டெ ரியும் ஆசையிலிருந்து தான் வெற்றி பெறுவ தற்கான தூண்டுதல் வரு கின்றது. ஓர் இளைஞன் சாக்ரடீசிடம் வந்து வெற் றிக்கான ரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் அந்த இளை ஞனிடம் அடுத்த நாள் காலையில் ஆற்றங்கரை அருகில் தன்னைச் சந் திக்கும்படி சொன்னார். அடுத்த நாள் அவர்கள் ஆற்றங்கரையில சந்தித் தனர். சாக்ரடீஸ் அந்த இளைஞரைத் தன்னு டன் ஆற்றை நோக்கி நடந்து வரும்படி கேட் டுக் கொண்டார்.

அவர்களது கழுத்தள விற்கு ஆற்று நீர் வந்தவு டன் சாக்ரடீஸ் அந்த இளைஞனை திடீரென நீரினுள் பிடித்து அழுத் தினார். அந்த இளைஞன் வெளியே வரப் போரா டினான். ஆனால் சாக்ர டீஸ் மிகவும் வலுவா னவர். ஆதலால், அப் படியே அவனை அமுக்கி யவாறு அவனது முகம் நீல நிறமாக மாறுகிற அளவுக்கு அமுக்கினார். சற்றுப் பொறுத்து சாக் ரடீஸ் அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞர் செய்த முதல் வேலையே தன் னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண் டும் உள்ளிழுத்ததுதான்.

சாக்ரடீஸ் அவனிடம், நீ நீருக்குள்ளே இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்? என்று கேட்டார். அந்த இளை ஞன், காற்று என்று பதில் அளித்தான். வெற் றியின் ரகசியமே அது தான். நீ எவ்வளவு அதிக மாகக் காற்றை விரும்பி னாயோ, அது போன்ற வெற்றியையுயம் விரும் பினால் உனக்கு அது கிட்டும் என்று சொன் னார். இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை. ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தைத் தர முடியாதோ, அதுபோல ஒரு பலவீனமான ஆசை யால் மிகப் பெரிய விளை வுகளை உருவாக்க முடி யாது. (பக்கம் 70-71)

உடன்பிறப்பே, வரப் போகின்ற தேர்தலில் வெற்றியையே எதிர் நோக் கும் உனக்கும் இந்தக் குறிப்பு முக்கியம் அல் லவா? வெற்றியை விரும்பு - அதற்காக உழைத்திட, உழைத்திட - நிச்சயம் வெற்றி கிட்டும்!

*****

ஒரு நாள் ஒரு பத்து வயதுச் சிறுவன் ஒரு அய்ஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக் கையில் உட்கார்ந்தான். அய்ஸ்கிரீம் கோன் எவ் வளவு? என்று கடைப் பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள், எழு பத்தைந்து சென்டுகள் என்றாள். அந்தச் சிறுவன் தனது கையில் இருந்த சில்லறைகளை எண்ணத் தொடங்கினான்.

பிறகு அவன், ஒரு சிறிய அளவு அய்ஸ் கிரீம் எவ்வளவு? என்று கேட் டான். பணிப்பெண், பொறுமையிழந்து, 65 சென்ட்டுகள் என்று பதில் அளித்தாள். அந்தச் சிறுவன், எனக்கு சிறிய அய்ஸ் கிரீம் கப் வேண் டும் என்றான். அவனுக்கு அய்ஸ் கிரீம் கிடைத்தது. பில் பணம் கொடுத்து விட்டு வெளியேறினான். அந்த வெற்றுக் கப்பை எடுக்க வந்த பணிப் பெண் மனமுருகிப் போனாள். அந்தக் கப் புக்கு அடியில் பத்து ஒரு சென்ட் சில்லறைகள் டிப்ஸாக வைக்கப்பட்டி ருந்தது. அந்தச் சிறுவன் அய்ஸ் கிரீமை வாங்கு வதற்கு முன்னால் அந்தப் பெண்ணுக்கு ஏதாவது தர எண்ணி இருந்திருக் கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறை யையும் காட்டிவிட் டான். அவன் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன் னால், பிறரைப் பற்றி எண்ணியிருக்கிறான்.

உடன் பிறப்பே, இந் தக் கதையை எதற்காக மேற்கோள் காட்டியிருக் கிறேன் என்பதையும் நீயே புரிந்து கொள்ள முயற்சி செய். புரியும்.

*****

வெற்றிக்கு எந்த மந் திரக்கோலும் இல்லை. இந்த உலகில் வெற்றி என்பது செயலாற்று பவர்களுக்குத்தான் கிடைக்கும். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அல்ல. வண்டி இழுக்கிற குதிரை, உதைக்க முடி யாது. உதைக்கிற குதிரை வண்டி இழுக்காது. நாம் இழுக்கிற குதிரை போல இருப்போமாக. உதைக் கிற குதிரை போன்று இருப்பதை நிறுத்துவோ மாக. கடின உழைப்பில் லாமல் வெற்றி என்பதே இல்லை. ( பக்கம் 79)

உடன்பிறப்பே, வெற்றி ஒன்றையே நோக் கமாகக் கொண்டு உழைக்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் உனக்கு, இறுதியாக சுட்டிக் காட்டியிருக்கும் இந்த வரிகளே போது மானது என்று கருதுகி றேன். ஆமாம். நீ இழுக் கிற குதிரை போல இருப்பாயாக - உதைக்கிற குதி ரையாக உன் எதிரிகளே இருந்து விட்டுப் போகட் டும்.

லேபிள்கள்: , ,

3 கருத்துகள்:

Blogger Suresh கூறியது…

@ தமிழ் வெங்கட்

// கலக்கல் போட்டோ..!மாற்றம் என்பது
எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதுதான்..!//

மிக சரி :-)

//இவ்வளவு பதிவு போட நேரம் எப்படி கிடைக்கிறது..!ஒரு மணி நேரம் கணிப்பொறியில் அமர்ந்தால வீட்டம்மா வைகிறார்கள்...!//

நேரம் கிடைக்கும் போது டிராப்ட் செய்து விடுவேன், இன்னும் 40 பதிவுகள் டிராப்டில் ரெடியா இருக்கு :-)

எங்க வீட்டம்மா மே 3 வராங்க அதுகுள்ள தான் பதிவு ஹீ ஹீ

அப்புறம், தூங்கும் நேரம் ரொம்ப கம்மி.. தூங்க 12-1 ஆகிவிடும்

மத்த படி ;) ஒரு சிகிரெட்டும் இல்லை, வீக்கெண்டில் நானும் திட்டு வாங்குவென் கம்புடர என்ன தான் இருக்கோனு, அது எல்லாம் Why blood same blood nu துடச்சி போட்டுவிட்டு பெழப்பை பார்க வேண்டியது தான்

30 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 10:40  
Blogger Suresh கூறியது…

can you remove ur word verification pleas its hard to comment

30 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 10:41  
Blogger Suresh கூறியது…

உங்க பதிவு மிக அருமையா இருக்கு

30 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 10:41  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு