ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

25 ஏப்ரல், 2009

மைக்ரோசாப்ட்: 23 ஆண்டுகளில் முதல் வருவாய் வீழ்ச்சி

Microsoftசான் பிரான்ஸிஸ்கோ: கடந்த 23 ஆண்டுகளில் முதல் முறையாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது ஐடி ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாப்ட். 

அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிட்டதிலிருந்து சரிவையே கண்டிராத நிறுவனமாகத் திகழ்ந்தது மைக்ரோசாப்ட். 

முதல் முறையாக இந்தக் காலாண்டில்தான் மைக்ரோசாப்டின் வருவாய் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய கம்ப்யூட்டர்கள் வாங்கக் கொடுத்திருந்த ஆர்டர்களை திடீர் திடீரென 
ரத்துசெய்து வருவதால், விண்டோஸுக்கான தேவை இந்த காலாண்டில் வெகுவாகக் குறைந்துவிட்டதாம். 

ஆனால் இந்த மோசமான வர்த்தக சூழல் இந்தக் காலாண்டோடு முடிந்துவிடும் என்றும், அடுத்த காலாண்டில் மந்த நிலை இருந்தாலும் விரைவில் பழைய ட்ராக்குக்கு விற்பனை திரும்பும் என்றும் மைக்ரோசாப்ட் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. 

'கடந்த காலாண்டில் மார்க்கெட் நிலவரம் மோசமாக இருந்தாலும், திருப்தியளித்த ஒரு விஷயமும் உண்டு. அது, சிக்கன 
நடவடிக்கைமற்றும் இருக்கிற ஆர்டர்களைத் தக்கவைத்துக் கொள்ள வாடிக்கையாளர் சேவைப் பணியாளர்கள் செய்த முயற்சி. இதனால் வருவாய் குறைந்தாலும், நஷ்டத்துக்குச் செல்லாமல் தவிர்க்கப்பட்டது', என்கிறார் மைக்ரோசாப்ட் சிஎப்ஓ க்றிஸ் லிட்டெல்

லேபிள்கள்: , , ,

1 கருத்துகள்:

Blogger ஆதவா கூறியது…

மைக்ரோசாஃப்டுக்கே இந்த கதியா.... ம்ம்ம்... இன்னும் என்னென்ன நடக்கப்போவுதோ..
-------------------------------
ராஜபக்ஷேவுக்கு கேக்கு பொருத்தமானதுதான்....

26 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 6:37  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு