ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

2 ஏப்ரல், 2009

நாடாளுமன்றத் தேர்தல்:தி.மு.க. தேர்தல் அறிக்கை-2009நாடாளுமன்றத் தேர்தல்:
தி.மு.க. தேர்தல் அறிக்கை-2009

"திராவிட முன்னேற்றக்கழ கத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை-2009" இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் கலைஞர் வெளியிட்டார்.

1944 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டுவந்த தீர் மானத்தின் காரணமாக, தந்தை பெரியார் அவர் கள் தலைமையில் திராவிடர் கழகம் தோற்று விக்கப்பட்டு; தன்மானம் காக்கவும், சமூக இழிவுகளையும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் போக்கவுமான சமூகப் புரட்சி ஆரம்பமானது.

1949 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் - சமத்துவம், சமூகநீதி, சமதர்மம் ஆகிய முழக்கங்களுடன், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போற்றிடவும், தமிழர் களின் தனித்தன்மைமிக்க மொழி, இனப்பெருமைகளை மீட்டிடவும், அவர்தம் உரிமைகளையும், நலன்களையும் காத்திடவும் - திராவிட முன்னேற்றக் கழகம், உயர்ந்து நிற்கிறது. தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், முத் தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அயராத களப் பணிகளாலும், ஆற்றல் மிகுந்த தலைமையாலும், ஓய்வறியா உழைப்பினா லும் திராவிட முன்னேற் றக் கழகம் மாபெரும் மக்கள் இயக்கமாக - சமூக, பொருளாதார, சீர் திருத்த அரசியல் இயக்க மாக வலிவும், பொலிவும் கொண்டு தமிழகத்தில் வெற்றி நடைபோட்டு வருகின்றது.

திராவிட முன்னேற் றக் கழகம் அங்கம் வகிக் கும் அய்க்கிய முற்போக் குக் கூட்டணி அரசு கடந்த அய்ந்தாண்டு காலத்தில் தமிழகத்திற்கு ஆற்றியிருக்கும் சாதனை கள் சரித்திர முக்கியத் துவம் வாய்ந்தவையாகும்.

தமிழ், செம்மொழி என்ற பிரகடனம்; சென் னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறு வனம்.

கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் - 4 ஆயி ரத்து 676 கிலோமீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில் 3 ஆயிரத்து 276 கிலோமீட்டர் சாலைகள் 4 வழிச்சாலைகளாக மேம்பாடு, மிகப்பிரம் மாண்டமான போக்கு வரத்து மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட் டக முனையங்கள், நீர் வழிப் போக்குவரத்து வசதிகள்.

1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அள வுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட் டாலை உருவாக்கம்.

அனைத்து கிராமங் களிலும் முழு கணினி நிர்வாகத்தை ஏற்படுத் தும் வகையில் தேசிய கணினி நிர்வாகத் திட் டம் அறிமுகம்; (National E.Governance Programme).

திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம்,

கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்

சாதிய ஏற்றத்தாழ்வு களை நீக்க, சமூக நிலை யிலும் மற்றும் கல்வியி லும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கல்வியும், வேலை வாய்ப் பும் வழங்கிடுவதற்கு உருவான தி.மு.கழகம், திராவிட இயக்கத்தின் இந்த அடிப்படைக் கொள்கையை நிறை வேற்றுவதற்குத் தொடர்ந்து எல்லாவித முயற்சிகளையும் எல்லா நிலைகளிலும் மேற் கொள்ளும். 2004 ஆம் ஆண்டு அமைந்த அய்க் கிய முற்போக்குக் கூட் டணி ஆட்சியில், தி.மு. கழகம் இடைவிடாது வலியுறுத்தியதின் கார ணமாக மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங் களில் இதர பிற்படுத்தப் பட்டடோர்க்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆணை நடைமுறைக்கு வந்தது. பல நீதிமன்ற வழக்குகளையும் கடந்து 2007 ஆம் ஆண்டு முதல் இந்த இடஒதுக்கீடு நிறை வேற்றப்பட்டு வருகிறது. இந்த 27 விழுக்காட்டி லும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முழு அள விற்கு இந்த உரிமையைப் பெறாத அளவிற்கு வரு மான வரம்பை (Creamy Layer) ஏற்படுத்தித் தடுக் கும் முயற்சிகளைக் கொள்கை அளவில் தி.மு.கழகம் உறுதியாக எதிர்க்கும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உயர்கல்வி நிறுவனங்களில் முதல் கட்டமாக இடஓதுக்கீடு பெறும் வகையில் ஆண்டு வருமான வரம்பை ரூ.4.50 இலட்சமாக உயர்த்துவ தற்கு தி.மு.கழக அமைச் சர்கள் போராடி வெற்றி பெற்றுள்ளனர். இதனை ஒரு இடைக்கால ஏற் பாடாக ஏற்றுக் கொண்டு, வருமான வரம்பை அறவே நீக்க வேண்டும் என்று தி.மு.கழகம் வலி யுறுத்தும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்க்கு அளிக்கப் படும் இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் அர சாணைக்கு (Government Order) சட்டவடிவம் (Statute) அளிக்க வேண் டும் என்ற சுதர்சன நாச் சியப்பன் குழுவின் பரிந் துரை களை நிறைவேற்ற தி.மு. கழகம் முயற்சிகளை மேற் கொள்ளும். இதற் குரிய சட்டவரைவினை நாடாளுமன்றத்தில் நிறை வேற்ற தி.மு..கழகம் வலியுறுத்தும் (Bring all the Executive Orders on Reservation into a Statue).

பிற்படுத்தப்பட்டோ ருக்கான தேசிய ஆணை யம் அமைப்பதற்கு உரிய சட்டத்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும், தமிழ்நாட்டில் இயங்கு வது போல பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நலன் பேணுவதற்கு தனித் தனியாகத் துறையும், அமைச்சகமும் இருப்பது போன்று மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர்க்குத் தனி அமைச்சகம் ஏற் படுத்தவேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கியுள்ள பிரிவுகளின்படி சட்ட மன்ற, நாடாளுமன்றங் களில் இயற்றப்படும் சட் டங்களை தடையின்றி நடைமுறைப்படுத்து வதற்கும், அவற்றில் நீதி மன்றங்கள் தலையிடா மல் இருப்பதற்கும், தேவைப்படும் உரிய அர சமைப்புச் சட்டத்திருத் தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும்.

அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் எண் ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு விகிதாச்சா ரத்தை அந்தந்த மாநிலங் களே மேற்கொள்வதற் குரிய வகையில் அரசமைப்புச் சட்டம் திருத் தப்படவேண்டும்.

1956 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தொடரும் இனச்சிக் கலைத் தீர்ப்பதற்குப் பல் வேறு போராட்டங் களையும், தமிழ்நாட்டில்கழக ஆட்சியை இரண்டு முறை கலைக்கின்ற அள விற்கு பல்வேறு தியா கங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் செய்து வருகிறது. இலங் கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வ தற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்றும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் 2006 ஆம்ஆண்டிற்குப் பிறகு சட்டமன்றத்தின் வழி யாக தீர்மானங்கள் நிறை வேற்றியதையும், மத்திய அரசிடம் நேரில் அனைத் துக் கட்சி தலைவர்க ளுடன் சென்று முதல்வர் கலைஞர் அவர்கள் வலி யுறுத்தியதையும் இப் பிரச்சினையை அரசியல் ஆக்காமல், போர் நிறுத் தத்திற்கும், அதனைத் தொடர்ந்த நிரந்தரமான தீர்விற்கும் திராவிட முன் னேற்றக் கழகம் இதற் கான தொடர் முயற்சி களை மேற்கொள்ளும்.

இந்தியப் பிரதமர் அவர்கள் கடந்த 19.03.2009 அன்று முதல மைச்சர் கலைஞர் அவர் களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைத் தமிழ் மக்களுக்கு உள்ள கடமைகளை நிறைவேற் றும்படியும், அவர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு செய்து தரும்படியும் நாம் இலங்கை அரசை கேட் டுள்ளோம். இதில் தமி ழர்களுக்கு சமத்துவமும், சமமான உரிமைகளும் அங்குள்ள மற்ற குடி மக்கள் போல கிடைக்க வேண்டும் என வலியு றுத்தியுள்ளோம். சமீ பத்தில் இலங்கை அதி பர், தமிழர்கள் திருப்தி யடையும் வகையில் அதி காரப் பகிர்வு செய்து தரப்படும் என்று கூறியுள் ளார். இதற்கான நட வடிக்கைகள் உடனடி யாகத் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள் ளார். நாம் காத்திருந்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என் பதைக் கவனிப்போம் என்று குறிப்பிட்டுள்ள வாறு அதனை மேலும் வலியுறுத்தி இலங்கை யில் தமிழர்கள் அமைதி யாகவும், உரிமையுடனும் வாழ்ந்திட வழி வகுத்திட வேண்டுமென்று தி.மு.க தொடர்ந்து வற்புறுத் தும்.

காவிரி - குண்டவாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் திட்டத்திற்கும்; தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான தாமிரபரணி- குடமேனி யாறு - நம்பியாறு இணைப் புத் திட்டத்திற்கும் கழக அரசு ஒப்புதல் அளித்து அவற்றிற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட் டுள்ளன.

தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தின் முயற்சிகளுக்குத் தமிழக அரசின் நதிகள் இணைப் புத் திட்டம் முன்னோ டித் திட்டமாக அமைவ தால், மத்திய அரசு இத் திட்டத்திற்கான முழு நிதியுதவியை அளிக்க முன்வரவேண்டும். மேலும், மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் வீணே கலந்திடும் நீரைப் பாச னத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் கிழக்கே திருப்பி விடுவ தற்கான திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு உரிய முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் தி.மு.கழகம் வலியுறுத் தும்.

ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு குறைந்த பட்ச சட்டபூர்வ விலை யாக ரூ.811.80 என அறி வித்துள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.288.20 சேர்த்து டன் கரும்புக்கு ரூ.1100 வழங்கப்பட்டு வருவதோடு, வாகன வாடகை ரூ.90 ம் கூடுதல் கட்டுமானத்திற்கு ரூ.30ம் சேர்த்து ஒரு டன் கரும் புக்கு ரூ.1220 வழங்க வழி வகை செய்யப்பட்டுள் ளது.

கரும்பு விலையை இப்பொழுது தருகிற ரூபாய் 1220 என்பதை உயர்த்தி 1500 ரூபாயாகத் தரப்பட வேண்டுமென்ற கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை கவனத் தில் எடுத்துக் கொண்டு - கரும்பு விலையை எந்த அளவுக்கு உயர்த்தி வழங்கலாம் என்பது குறித்து - அரசு அதிகாரிகள், கரும்பு விவசாயிகள், கரும்பாலை நிர்வாகம் ஆகிய முத்தரப்பினரைக் கொண்ட குழு ஒன்றினை அமைத்து, அவர்கள் தரும் பரிந்துரைகளைப் பெற்று கரும்பு விவசா யிகள் அனைவரும் மகி ழத்தக்க அளவிற்கு கரும்பு விலையை நிர் ணயிக்க தி.மு.கழகம் முயற்சிகளை மேற் கொள்ளும்.

விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவு செய்து, நெல் கொள்முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1000 மற்றும் ரூ.1050 என தமிழக அரசு உயர்த்தி வழங்கி வரு கிறது. கோதுமைக்கு இணையாக நெல்லுக் கும் அதே குறைந்த பட்ச ஆதரவு விலையை மத் திய அரசை அறிவிக்கச் செய்யவும், அதனைத் தொடர்ந்து, நெல் கொள் முதல் விலையை மேலும் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து விவசாயி களையும் பயிர்க்காப் பீட்டுத் திட்டத்தின்கீழ்க் கொண்டு வந்து, அதற் கான காப்பீடு கட்டணத் தில், தமிழக அரசு 2006 ஆம் ஆண்டிலிருந்து 50 சதவீதத்தை மானியமாக அளித்து வருகிறது. எஞ் சிய 50 விழுக்காடு காப் பீட்டுத் தொகையை மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டுமென்று தி.மு.கழகம் வலியுறுத் தும்.

2007ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, இசுலா மிய சமுதாயத்தினரின் சமூகப் பொருளாதார நலன்களை மேம்படுத்து வதற்கு நீதியரசர் ஜனார் தனம் தலைமையில் ஒரு குழுவினை அமைத்தது. இக்குழு இசுலாமியர் களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டை கல்வி, வேலை வாய்ப்பு களில் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், சிறுபான்மையி னர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தை உரு வாக்கி, இசுலாமியர்களுக்கும், கிறித்தவர்களுக் ம் நிதியுதவி, கடன் வசதி உட்பட பல நலத்திட் டங்களை வழங்கி வரு கிறது. எனவே, தமிழ்நாடு அரசினை முன்னுதாரண மாக எடுத்துக் கொண்டு, சச்சார் குழுவின் பரிந் துரைகளை மத்திய அரசு ஏற்று உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத் துகிறது.

இந்து மற்றும் பவுத்த மதங்களைச் சார்ந்த ஆதி திராவிடர்களுக்கு இணையாக; கிறித்துவ மதத்தைச் சார்ந்த ஆதி திராவிடர்களையும் அட்டவணைப் பட்டி யலில் சேர்க்க வேண்டு மென்றும்; சிறுபான்மை யினர் மேம்பாட்டுக்கு நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் தலை மையில் அமைக்கப் பட்ட தேசிய ஆணையம் செய்துள்ள பரிந்துரை களைப் பரிசீலனை செய்து நடைமுறை அறி விப்புகளை வெளியிட வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத் துவோம்.

தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மாண வர்களுக்குத் தங்கும் விடுதி வசதியையும், கல்வி உதவித் தொகை யையும் வழங்குவதற்கு, மத்திய அரசு உரிய நட வடிக்கைகளை வரும் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தும்.

தாழ்த்தப்பட்ட, பழங் குடியின மாணவர்கள் மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்புகளை எவ்விதத் தடைகளு மின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக, கல்லூரிக் கல் விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்தையும் மத்திய அரசு உதவித் தொகை யளித்து ஏற்க வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்துகிறது.

தாழ்த்தப்பட்ட சமு தாயப் பிரிவில் உள் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் அருந்ததி சமூகத்தின ருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த முறை யைப் பின்பற்ற வேண்டும்.

ஊர்ப்புறங்களில் குடி சைகளிலே வாழ்ந்து வரு கின்ற தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அனைவருக்கும் தரமான வீடுகள் கட்டித்தருவ தற்கு மத்திய அரசு, மாநில அரசின் நிதிப்பங்கேற் புடன் செயல் திட்டங் களுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றப் பட வேண்டுமென்று வலியுறுத்துவோம். இத் திட்டத்தின் வழியாக 2014ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் அனைத் துத் தாழ்த்தப்பட்ட சமு தாயத்தினர்க்கும் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டு மென்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

வரும் அய்ந்தாண்டு களில் குடிசைகளே இல் லாத கிராமங்களையும், குப்பங்களே இல்லாத நக ரங்களையும் உருவாக் கிட உறுதியேற்கிறோம். சாதி மத வேறுபாடின்றி - குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் அனைத் துக் குடும்பங்களுக்கும் தரமான கான்கிரீட் வீடு கள் கட்டித் தரப்படும். பயனாளிகளின் பங் களிப்பு, அரசு மானியம், கடன் ஆகியவற்றைக் கொண்டு இவ்வகை வீடு கள் உருவாக்கப்படும்.

2006, மே மாதம் கழக ஆட்சி பொறுப்பேற்ற தற்குப் பின்னர் இதுவரை 6 இலட்சத்து 56 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன. தரமான கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கும் திட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் பெற்றுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும்.

உயர் மருத்துவப் பட் டம் படிப்புகளில் 100 விழுக்காட்டு இடங் களையும் மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும்

1976க்குப் பிறகு கல் வியைப் பொதுப்பட்டி யலுக்கு எடுத்துச் சென்ற தன் காரணமாகப் பல இடையூறுகளும், முரண் பாடுகளும் கல்வி வளர்ச் சியில் ஏற்பட்டு வருகின் றன. எனவே, மீண்டும் கல்வியை மாநிலப் பட்டி யலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும்.

சேதுக்கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான சேதுக் கால்வாய் திட்டம் தமி ழக முதல்வர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத் தியதின் காரணமாக 2.7.05 அன்று தொடங் கப்பட்டு பணிகள் நிறை வடையும் நேரத்தில் மத காரணங்களைக் காட்டி தடை செய்யப்பட்டு உள்ளது. உச்சநீதி மன்றத் தில் நிலுவையில் உள்ள வழக்கை மத்திய அரசு விரைந்து முடித்து இத் திட்டத்தின் எஞ்சிய பணிகளை முடித்து தமிழ் நாட்டின் தென் மாவட்ட பொருளாதார வளர்ச் சிக்கும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் வழிகோல வேண்டும் என்று தி.மு.கழகம் வலி யுறுத்திக் கேட்டுக் கொள் ளும்.

வெகுவேக புல்லட் டிரெயின் சேவைகளை சென்னை-கோவை, சென்னை-மதுரை ஆகிய வழித்தடங்களில் அறி முகம் செய்வதற்கான நடவடிக்கைகளை விரை வாக மேற்காள்ள வேண்டு மென்றும்; புதுடில்லி யையும் சென்னையையும் இணைத்திடும் வகையில் சரக்குப் போக்குவரத்துக் கென்று சிறப்பு வழித்த டம் ஒன்றை உருவாக் கிட வேண்டுமென்றும்; திண்டுக்கல்லிலிருந்து போடிநாயக்கனூர் வழி யாக குமுளி, திருவண்ணா மலையிலிருந்து ஜோலார்பேட்டை, நீடா மங்கலத்திலிருந்து மன்னார்குடி வழியாக பட்டுக்கோட்டை, மொரப்பூரிலிருந்து தர்மபுரி, அரியலூரி லிருந்து திருவையாறு வழியாக தஞ்சாவூர் ஆகிய புதிய அகல இரயில் பாதைகளை உருவாக் கிட வேண்டுமென்றும் மத்திய அரசை வலியு றுத்துவோம்.

சென்னை - வேளச் சேரி வரை தற்போது இயங்கிவரும் பறக்கும் இரயில் திட்டத்தை மாமல் லபுரம் வரை விரிவுபடுத்த வேண்டும் என்றும்;

தற்போது தமிழ்நாட் டின் பல நகரங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு மிடையே இயங்கிவரும் விரைவுத் தொடர்வண்டி களோடு நவீனத் தரத்து டன் கூடிய அதிவேக விரைவுத் தொடர் வண்டி களையும் இயக்க வேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும்.

சென்னை பெரம் பூரில் இயங்கிவரும், தொடர் வண்டிப் பெட்டி உற்பத்தி செய்யும் இணைப்பு இரயில் பெட்டித் தொழிற் சாலையின் (ICF) இரண் டாவது கட்டத்தை தமிழ் நாட்டில் விரிவுபடுத்த வேண்டும் என்று தி.மு. கழகம் கேட்டுக்கொள் ளும்.

இந்தியாவின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங் களையும், கிழக்குக் கடற் கரைத் துறைமுகங்களை யும் இணத்திடும் வகை யில் அமைந்துள்ள குளச் சல் சிறுதுறைமுகத்தை, நவீன ஆழ்கடல் சரக்குப் பெட்டக முனையமாக (A Moden Deep Water Container Port) மேம்படுத்திட மத்திய அரசை வலி யுறுத்துவோம்.

சூரிய ஒளி (சோலார் எனர்ஜி) மின் உற்பத்தி நிலையத்தை முன்னோ டித் திட்டமாக தமிழ கத்தில் அமைக்கவேண் டும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கு டன் மரபு சாரா எரி சக்தியை வளர்த்தெடுக்க வேண்டும் என்று மத்திய அரசின் திட்டக்குழு அறிக்கை வலியுறுத்து கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே காற்றாலை மின்னுற்பத்தித் திறனை அதிகரித்து, தமிழ்நாட் டில் எற்கனவே காற் றாலை மின்னுற்பத்தித் திறனை அதிகரித்து, தமிழ் நாடு மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் இந்தியாவிலேயே முன் னிலை மாநிலமாக உள் ளது. இந்தியாவிலேயே சூரிய ஒளியின் வெப்பத் திறன் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ் நாடும், இராஜஸ்தானும் முன்னிலை வகிக்கின்றன. மரபு சாரா எரிசக்தித் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக மத்திய அரசு 250 மெக வாட் திறன் கொண்ட ஒரு சூரிய ஒளி மின்னுற் பத்தித் திட்டத்தைத் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும்.

தமிழக மீனவர்கள் இராமேசுவரம் பகுதியில் அடிக்கடி இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவதற்கும், சுட்டுக்கொல்லப்படுவதற்கும் தி.மு.கழகம் கடுமையான முறையில் தனது கண் டனத்தைத் தெரிவித்து வருகிறது. தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமருக்கு பல மடல்கள் எழுதியும், நேரில் சென்று வலியுறுத்தியும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதற்குரிய நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு மத்திய அரசு கடலோரப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தி, தமிழக மீன்வர்களின் மீன்பிடிக் கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத் தும்.

கடலோர மீனவர்கள் இராமேசுவரம் பகுதியில் அடிக்கடி இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவதற்கும், சுட்டுக் கொல்லப்படு வதற்கும் தி.மு.கழகம் கடுமையான முறையில் தனது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறது. தமிழக முதல்வர் கலை ஞர் அவர்கள் இந்தியப் பிரதமருக்கு பல மடல் கள் எழுதியும், நேரில் சென்று வலியுறுத்தியும் உடனடி நடவடிக்கை களை மேற்கொள்ளு மாறு கேட்டுக்கொண்டு உள்ளார். இதற்குரிய நிரந் தரத் தீர்வைக் காண்ப தற்கு மத்திய அரசு கடலோரப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தி, தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரி மையை உறுதி செய்ய வேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும்.

கடலோர மீனவ சமு தாயத்தினர் ஏற்றுக் கொள்ளும் வரை கடற் கரை மேலாண்மைப் பகுதி அறிவிக்கையின் (Costal Management Zone Notification) மீது நட வடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று 1974 ஆம் ஆண்டிலிருந்து தி.மு.கழகம் இந்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத் தில் தமிழக மீனவர் களுக்கு வழங்கப்பட்டி ருந்த மீன், மீன் வலை உலர்த்துதல் மற்றும் தேவாலயங்களில் வழி பாட்டுரிமை ஆகிய ஷரத்துகள் 1976 ஆம் ஆண்டு குடியரசு தலை வர் ஆசிட்யில் மீண்டும் பறிக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில், கச்சத் தீவிற்குத் தமிழர்கள் செல்வதற்கும், அப்பகு தியை ஒட்டிய இடங் களில் இழந்த உரிமையை மீட்டெடுப்பதற்கும் மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத் தும்.

இந்திய மாநிலங்களி லேயே தமிழ்நாட்டில் தான் அரசுக் கல்லூரி களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளும், சுயநிதிக் கல்லூரிகளும் அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும், ஏராள மான மாணவர்கள் அறி வியல் பட்டங்களை அதிக அளவில் பெறுவ தாலும், அறிவியல் திறனை ம்படுத்தவும், உயர் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தவும் மத்திய அரசின் இந்திய அறிவி யல் ஆய்வு மையம் ஒன்றி னைத் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும்.

பெண்களுக்கு சொத் துரிமையில் சமபங்கு என தமிழ்நாட்டில் உள் ளது போன்று இந்திய அளவிலும் சட்டம் வரவேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத் தும்.

தமிழ்நாட்டில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் நியமனத்தில் பெண்கள் மட்டுமே நியமிக்கப்படு வார்கள் என்று கழக ஆட்சியில் அறிவித்து, பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் காரண மாக தற்போது 75 சத விகித விழுக்காடு நிய மனம் பெண்களுக்கே அளிக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்பு களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் போற்றப்படுகிற பெண்ணுரிமைச் சட்டங் களையும், திட்டங்களை யும் அகில இந்திய அளவில் நடைமுறைப் படுத்த வேண்டும் என் றும் தி.மு.கழகம் வலி யுறுத்தும். இந்தியாவிலேயே முதன்முதலாகக் கலை ஞர் ஆட்சியில்தான் அர வாணிகளுக்கு அங்கீ காரம் அளித்திடும் வகை யில், அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவைப் படும் அறுவை சிகிச் சையை இலவசமாக செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரவாணிகள் நலவாரியம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக; அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தருவோம்.

திராவிடர் இயக்கம் பல சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் வலியுறுத்தி, பல முற் போக்கான சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. சடங்குகளற்ற, மதச் சார்பற்ற, சீர்திருத்த திருமணச் சட்டமான சுயமரியாதை திருமணச் சட்டம் 1968 ஆம் ஆண்டிலியிருந்து தமிழ கத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல சமூகவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், இந்த முற்போக்கான சட் டத்தை வரவேற்றுள்ள னர். எனவே, அகில அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.கழகம் வலி யுறுத்தும்.

நாடாளுமன்ற நட வடிக்கைகள் நாட்டு மக்களுக்குப் பயன்தரும் வகையில் அமைந்திட வேண்டுமென்று வாக் காளப் பெருமக்கள் எதிர்பார்ப்பது இயல் பான ஒன்றாகும். நாடா ளுமன்ற நடவடிக்கை களை வேண்டுமென்றே திட்டமிட்டு, திசை திருப்பிடும் வகையில் நாடாளுமன்றத்தின் நேரத்தையும், நோக்கத் தையும், நாட்டுமக்களின் செல்வத்தையும் விரயம் செய்திட மேற்கொள் ளப்படும் முயற்சிகளை - தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் உரிமைகளுக்கு ஊனம் ஏற்பட்டுவிடாமல் - தவிர்த்திடவும், தடுத்து நிறுத்திடவும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி நாடாளுமன்ற நடை முறை விதிகளை மாற்றி யமைத்திட தக்க முயற் சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துவோம்.

லேபிள்கள்: , , ,

3 கருத்துகள்:

Blogger உலவு.காம் (ulavu.com) கூறியது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

2 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 5:49  
Blogger டக்ளஸ்....... கூறியது…

எவ்ளோ பெருசு.....?!?

2 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 5:55  
Blogger ttpian கூறியது…

சொட்டையை நம்பியவர் மண்டயை போடுவார்!
சொட்டை வாழும்,அடுத்தவன் சாவில்!

2 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 7:55  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு