ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

5 ஏப்ரல், 2009

15-ஆவது மக்களவைத் தேர்தல் சில சிந்தனைகள்....!


15-ஆவது மக்களவைத் தேர்தல் சில சிந்தனைகள்....!


15-ஆவது மக்களவைத் தேர்தல் மே 13 தொடங்கி 5 கட்டங்களாக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் நடக்கிறது.

மூன்று அணிகளாகப் போட்டி நடக்கிறது என்பதையும் கடந்து நான்கு அணிகளாகப் போட்டி நடக் கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது?

1. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி.
2. பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
3. இடதுசாரிகள் முன்னிலைப்படுத் தும் மற்றொரு கூட்டணி.
4) அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும், தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (லாலுபிரசாத்) லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ் வான்) என்கிற இன்னொரு அணி.

மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமையும்போது இந்த நான்காவது அணி காங்கிரசுடன் கைகோர்க்கும் சாத்தியம் மிக அதிகம்; இதனை ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத்தும் வெளிப் படையாக ஒப்புக் கொண்டுள்ளார். இத்தேர்தலில் இந்தப் பிரிவினைகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.. எந்தப் பக்கத்தில் தவறு என்கிற ஆய்வைவிட, யார் விட்டுக் கொடுத்துப் போயிருந்தாலும் அவர் கள் நாட்டின்மீது அக்கறையுள்ள வர்கள் என்கிற மரியாதைக்குரியவர் களாகவிருந்திருப்பார்கள். அய்க்கிய முற்போக்குக் கூட் டணியைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் ஒரு நிலையான ஆட் சியைத் தந்துள்ளது; இடையில் அதற்கு முட்டுக்கட்டை போட்டு கவிழ்க்க முனைந்தாலும் தள்ளாட்டமின்றி உறுதியாகவே நின்றிருக்கிறது.

உலக அளவில் ஏற்பட்ட பொரு ளாதார சுனாமியில் இந்தியா தப்பிப் பிழைத்து விட்டது என்று பொரு ளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை எதிர்க்கும் இடதுசாரிகளே ஒன்றை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பாதுகாப்பான நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டதற்கே காரணம் இடது சாரிகள் இடைஇடையே இந்திய அர சுக்குப் போட்டு வந்த தடைகள்தான் என்று மார் தட்டுகின்றனர். அது உண்மையாகக்கூட இருக்கட் டும். இடதுசாரிகளின் கருத்துரைகளை ஏற்று ஒரு அரசு நடந்து கொண்டு இருக்கிறது என்பது அரசு மீதான கெட்ட பெயராக எப்படி மாற முடி யும்? இன்னும் சொல்லப் போனால் இடதுசாரிகள் மனந்திறந்து பாராட்ட வேண்டுமே தவிர - குற்றப் பத்திரிகை படிப்பது எப்படி சரியாகும்?

கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் மக்கள் மத்தியிலே அரசின் மீது மரியாதை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறது. இந்தியாவில் குறிப்பிட்ட மாவட்டங்களில் நூறு நாள்களுக்கு வேலை உத்தரவாதம் என்பதே மேலும் வளர்த்தெடுக்கவும் அரசு முனைந் துள்ளது.

வேலை வாய்ப்பு என்பது உலக பிரச்சினையாகவேயிருக்கிறது. குபேர பூமி என்று கூத்தாடிய அமெரிக்கா இந்த நெருக்கடியில் குற்றுயிராய்த் துடித்துக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையிலும் இந்தியா மூழ்கி விடாமல் தள்ளாடி விழுந்து விடாமல் நடைபோட்டுக் கொண்டுதானிருக் கிறது. இந்தியாவில் உள்ள வங்கிகளின் ஸ்திரத் தன்மைக்கு ஆபத்து இல்லை என்ற பெரு மூச்சு விடப்படுகிறது.

இரண்டாவதாக, மதச் சார்பின்மை! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகப்பே - இந்தியா என்பது மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசு என்ற பீடிகையோடுதான் தொடங்கப்படு கிறது.

அண்மைக்காலத்தில் அதற்குக் கேவலமான அச்சுறுத்தல்! ஆர்.எஸ். எஸ். தலைமை தாங்கும் இந்து மதவாத ஆரிய சனாதன அமைப்புகள், அவற்றின் அரசியல் போர்வையான பாரதிய ஜனதா ஆகியவை இந்தி யாவின் மதச்சார்பின்மைக்கான கடைக்காலை ஆட்டியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதற் கான உச்சகட்ட சாட்சியம்தான் 1992 (டிசம்பர் 6)இல் அயோத்தியில் - சிறு பான்மை மக்களுக்கான வழிபாட்டுத் தலத்தை பாபர் மசூதியை சுக்கல் ஆயிரமாக உடைத்துச் சிதறடித்த கொடூரமாகும்.

அந்தக் காயம் இன்னும் ஆற வில்லை; அதனையும் தொடர்ந்து பாரதிய ஜனதா ஆண்ட குஜராத் மாநிலத்தை சங்பரிவார்க்கும்பலின் பரிசோதனைக்கூடமாக்கி, மத வாரியாக வாக்கு வங்கியை உருவாக்கி, சிறுபான்மை மக்களான முசுலிம்கள், பெரும்பாலான மக்களாகிய இந்துக் களுக்குப் பரம விரோதிகள் என்ற வகையில் கொடூரத் தீயை மூட்டி, உத்திப்பிரித்து சிறுபான்மையினர்மீது வேட்டை நாயாக பெரும்பான்மை மக்களை ஏவி விடப்பட்டுக் கொன்று குவித்த கோரக் காட்சி சரித்திரம் நெடுக மனிதக் குருதியின் வாடையை வீசிக் கொண்டே தான் இருக்கும்.

அந்த ஆட்சி நாயகனை (மோடியை) பார்த்து உச்சநீதிமன்றம் நீரோ மன்னன் என்று இகழ்ந்து வீசிய வார்த்தைகள் சாதாரணமானவையா?

வெறிகொண்ட ஒரு மிருகத்தைக் கல்லால் அடித்து குப்பைத் தொட்டியில் வீசியது போன்ற நிலைப்பாடல்லவா அது!

குழந்தைத் திருமணத்தை தடுத்த குற்றத்துக்காக சமூக சேவகி ஒருவரை (பான்வாரி) அது இந்து மதத்துக்காக எதிரான நடவடிக்கை என்று கூறி, உயர் ஜாதி ஆண் காம வெறியர்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கித் அந்தப் பெண்ணைத் தூக்கி எறிந்தனரே - அதனை எந்தக் காலத்திலும் சீரணிக்க முடி யுமா?

அந்தக் கொடுமைக்கு இன் னொரு சிகரம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப் பாகும்.

தாழ்ந்த ஜாதிப் பெண் ணான பான்வாரிமீது - குற்றம் சாற்றப் பெற்ற உயர்ஜாதிக் காரர்களான பிராமணர்கள் பாலியல் கொடுமையை நிகழ்த்தி இருக்க மாட்டார் கள் என்று கூறி வழக்கினைத் தள்ளுபடி செய்தனர் உயர் ஜாதி பார்ப்பன நீதிபதிகள் என்றால் நீதிமன்றம்கூட பார திய ஜனதா ஆட்சியில் காவி வண்ணம் தீட்டிக் கொண்டு திரிசூலம் ஏந்திக் கொண்டது என்பதை வெளியில் சொன் னால் வெட்கக் கேடே!

பாடத் திட்டங்கள், வர லாறுகள் எல்லாம் இந்து மயமாக்க போர்க்கால நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. நல்ல வாய்ப்பாக அந்தத் தீய சக்திகள் கடந்த மக்களவைத் தேர்தலில் (2004) வாக்காளர்களால் வீழ்த்தப் பட்டன.

அந்தக் கும்பல் இரண் டாம் அணியாகக் கிளம்பி யிருக்கிறது. பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய தளகர்த் தரான அத்வானியைப் பிரத மருக்கான வேட்பாளராக அறிவித்துக் கிளம்பியிருக் கிறது என்பது எவ்வளவு பெரிய ஆபத்தான போக்கு!

நடக்க இருக்கும் மக் களவைத் தேர்தல் இந்தக் கூட்டத்திற்கான முடிவுரை முற்றுரை எழுதக் கூடிய பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும். இதில் தப்பி விடுமானால் நாட்டு மக்கள் தப்பிப்பது முயற்கொம்புதான்! தென்னகத்தில் தன் வாலை நுழைக்காதிருந்த இந்தப் பாசிச பாரதிய ஜனதா கூட்டம் வஞ்சகமாக கருநாடக எல் லைக்குள் புகுந்து தன் சேட் டைகளைத் தொடங்கி விட்டது. இந்திய துணைக் கண்டத்திலேயே அது நுழைய முடியாமல் மூச்சுத் திணறும் ஒரே மாநிலம் தந்தை பெரியார் அவர்களால் திரா விடர் கழகத்தின் மூலம் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் நாடு மண்தான்! இந்தப் பெரு மையும் அரணும் இத்தேர் தலில் காப்பாற்றப்பட வேண் டும் என்பதிலே திராவிடர் கழகம் முக்கியக் கவனமாக இருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிலே அடுத்து முக்கியத்துவம் கொடுத்துக் கொடுக்கப்பட்டி ருப்பது சமூகநீதி என்பதாகும்.

இந்து மதத்தின் வருணத் தால் ஜாதி நோயால் பிளவு என்னும் பிளவை நோய்க்குப் பலியான கோடானு கோடி ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான மகத் தான மருத்துவம்தான் சமூகநீதி என்பதாகும். இடஒதுக்கீடு என்று எளிய முறையில் அனைவருக்கும் விளங்கிட கூறப்படுகிறது.

கல்வியில்லாத பூமி களர் நிலம் என்றார் புரட்சிக் கவிஞர். அந்தக் கல்வியையும், வேலை வாய்ப்பையும் வழங் கக் கூடியதுதான் சமூகநீதி யாகும் - இடஒதுக்கீடாகும்.

அதற்கு உத்தரவாதம் கொடுக்கக்கூடியது திமுக முக்கியமாக இடம் பெற் றுள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகும். அந்த வகையிலும் ஆட்சிப் பீடத் துக்கு மீண்டும் அழைக்கப்பட வேண்டியது அய்க்கிய முற் போக்குக் கூட்டணி கட்சி களையே! (U.P.A. United Prograssive Alliance) மூன்றாவது அணி என்ற ஒன்று இடதுசாரிகளின் முயற்சியால் கொம்பு கூர் தீட்டி கிளப்பி விடப்பட்டுள் ளது. மதச்சார்பின்மை, சமூக நீதி இவற்றில் நம்பிக்கை யுடைய கட்சிகள் சில அதில் உண்டு என்றாலும் அதனோடு இணைந்துள்ள பலபட்டறைக் கட்சிகள் இதில் பல்வேறு முரண்பட்ட நோக் குகளைக் கொண்டவை யாகும்.

குறிப்பாக சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் அணுகப்பட வேண்டிய இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்கிற வெடி மருந்தை வைக்கக்கூடிய இடதுசாரி இதில் உண்டு.

இக்கட்சிகள் வெற்றி பெற்றாலும் யார் பிரதமர் என்கிற குடுமிபிடிச் சண்டையில் மண்டைகளை உடைத்துக் கொள்ளக்கூடியவை. செல்வி ஜெயலலிதாவை உள்ளே அழைத்து விட்டு பிரதமர் பதவியைப் பற்றி இன்னொருவர் பேசுவதற்கான ஜன நாயகக் காற்றுக்கு இடம் உண்டா? எப்படியும் அடுத்த பிரதமர் நானே நானே! என்று இறுமாந்திருக்கும் சகோதரி மாயாவதி எந்த ரூபம் எடுப்பார் என்பதைக் கற்பனை செய்து தான் பார்க்க முடியுமா?

மகாராட்டியத்தைச் சேர்ந்த சரத்பவார் என்கிற பெரிய மனிதர் தம் வாழ் நாளில் என்றைக்காவது ஒரு நாள் அந்தப் பிரதமர் நாற் காலியில் உட்கார்ந்து பார்த்து விட வேண்டும் என்பதிலே குறியாக இருக்கிறார். அந்த ஆசையின் போதையிலே அவர் பாதங்கள் ஒன்றை யொன்று பின்னிப் பின்னி தடம் புரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நாடு வளம் பெற, மக்கள் நலம் பெற, சமூக நீதி வெற்றி பெற, மதச் சார்பின்மை உறுதிப்பட, கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் கிடைக்க, மக்கள் தொகையில் சமபகுதியின ரான பெண்களின் உரிமைகள் ஈட்டப்பட, விவசாயம் இலா பம் உள்ள தொழிலாக உரு வாக்கப்பட (காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது) தொழிலாளர்கள் ஏற்றம்பெற, மதவாதம் தோற் கடிக்கப்பட, ஈழத் தமிழர் களின் இருள் வெருண் டோடும் ஒரு நிலையை உருவாக்க திமுக முக்கியமாக இடம் பெற்றுள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரு வெற்றியை உறுதியுடன் தேடித் தர வேண்டியது தற்கொலையை விரும்பாத ஒவ் வொரு குடிமக்களின் கடமையாகும்.

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு